சீனாவில் பரபரப்பு: மேனாள் அதிபர் வெளியேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

சீனாவில் பரபரப்பு: மேனாள் அதிபர் வெளியேற்றம்

பெய்ஜிங், அக்.23 அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் கட்சி நிர்வாகிகள் 2,300 பேர் கலந்து கொண்டனர். இறுதி நாளில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அவரே அதிபராகவும் தொடர்வார். சீன அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் 10 ஆண்டு காலம் மட்டுமேபதவி வகிக்க முடியும். அதன்படி அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவ டைகிறது. ஆனால், அதிபர் பதவிக் காலத்தின் கால வரம்பு கடந்த 2018-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

அதன்படி மாநாட்டின் இறுதி நாளான நேற்று, அதிபர் ஜி ஜின்பிங் 3-ஆவது முறையாக பொதுச்செயலாள ராக தேர்ந் தெடுக்கப்படுவார் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் இறுதி நாள் கூட்டத்தில் பங்கேற்க, கட்சி நிர்வாகிகளில் ஒருவரான மேனாள் அதிபர் ஹூஜின்டாவோ (79) வழக்கம்போல்வந்து அதிபர் ஜி ஜின்பிங் கின்இடதுபுறம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த உதவியாளர்கள், ஹூ ஜின்டாவோவின் கையைப் பிடித்து தூக்கி வெளியேறும்படிகூறினர். அவர் சோகத்துடன் வெளியேறினார்.

அப்போது அவர் அதிபர் ஜி ஜின் பிங்கிடமும், பிரதமர் லீ கேகியாங் கிடமும் ஒரு நிமிடம் பேசிவிட்டு சென்றார். வெளியேறும் போது தனது மேஜையில் இருந்த தாள்களை ஹூ ஜின்டாவோ எடுக்கமுயன்றார். ஆனால் அதை எடுக்கவிடாமல், மேஜை மீது தாள்களைஅழுத்தி அதிபர் ஜி ஜின்பிங் பிடித்துக் கொண்டார். மேனாள் அதிபர் ஹூ ஜின்டாவோ வெளியேறும்போது, அதிபர் ஜி ஜின்பிங்கின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

ஒரு வாரமாக நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்துக்குள் பத்திரி கையாளர்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால்,மாநாட்டின் நிறைவு நாள் என்பதால், நேற்று (22.10.2022) மட்டும் இந்த மாநாடுநடந்த கிரேட் ஹால் அரங்குக்குள் பத்திரிகை யாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இந்த சம்பவம் நடந்ததால், மேனாள் அதிபர் ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்படும் காட்சிகளை பத்திரிகையாளர்கள் படம் பிடித்தனர்.

ஹூ ஜின்டாவோ வெளியேற் றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப் படவில்லை. ஆனால், இந்த சம்பவம் அதிபர் ஜி ஜின்பிங் 3-ஆவது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்படுவதற்கு முன்பாக நடந்தது.

இதுகுறித்து சீன அரசியல் நிபுணர் நீல் தாமஸ் கூறுகையில், ‘‘அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு, ஹூ ஜின்டாவோ எதிர்ப்பு தெரிவித்தாரா இல்லையாஎன தெரியவில்லை கெட்ட வாய்ப்பாக ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்பட்டுள்ளார்’’ என்றார்.

இச்சம்பவம் நடந்தவுடன் ஹூஜின் டாவோவின் ட்விட்டர் உட்பட இணையதளங்களில் அவரை பற்றி தேடப்படும் தகவல்கள் சீன அரசின் நிபுணர்களால் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன.


No comments:

Post a Comment