உ.பி.யில் கண்கள் சிதைக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் கொடூரக் கொலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

உ.பி.யில் கண்கள் சிதைக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் கொடூரக் கொலை!

மீரட், அக். 29  உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஜலால்பூர் கிராமத்தில் 30 வயது தாழ்த்தப்பட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு  நடந்துள்ளது. ஜலால்பூரைச் சேர்ந்த பிஜேந்திரா என்பவரின் மகன் பிரிஜ்பால். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். கூலி வேலை செய்து வருகிறார். இவரை, கடந்த அக்டோபர் 24 அன்று இரவு 8 மணியளவில், இதே கிராமத் திலுள்ள குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்த சோனு, சச்சின் ஆகிய 2 இளைஞர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் 25 அன்று காலை ஜலால்பூர் கிரா மத்தில் பிரிஜ் பால் கண்கள் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத் தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.  தகவலறிந்து வந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள், பிரிஜ்பாலின் கொடூரமான கொலைக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், இஞ்சவுலி காவல் நிலையத்தின்முன் போராட்டம் நடத்தினர்.

மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை 

கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,அக்.29 மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை; கல்லூரி மாணவிகள் விண் ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் விண்ணப்பப் பதிவு 11-ஆம் தேதி முடிவடைகிறது. மாண விகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கெனவே விண்ணப் பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்க லாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய சமூகநல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மய்யத் தினை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 

166 பேருக்கு கரோனா

சென்னை,அக்.29   தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 92 ஆண்கள், 74 பெண்கள் உள்பட மொத்தம் 166 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென் னையில் 42 பேர், செங்கல்பட்டில் 15 பேர் உள்பட 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 28 மாவட் டங்களில் கரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 32 குழந்தை களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 31 முதிய வர்களுக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 216 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக் குள்ளாகி 2 ஆயிரத்து 114 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இந்தியாவில்...

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (28.10.2022) வெளியிட்ட தகவலின்படி, நேற்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 2,208 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 19,398 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் 3,619 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டனர்.. ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.60 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment