1700 விசாரணை கைதிகள் பிணையில் வெளிவரமுடியாமல் தவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

1700 விசாரணை கைதிகள் பிணையில் வெளிவரமுடியாமல் தவிப்பு

புனே,அக்.26- மராட்டிய மாநிலத்தில் விசா ரணை கைதிகளாக உள்ள 1,700 பேர், பிணைக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் பிணை கிடைக்க வழியின்றி உள்ளனர். அவர்களை பிணையில் விடுவிக்க டாடா சமூக அறிவியல் நிறுவனம் முன்வந்துள்ளது.  மராட்டிய மாநிலத்தில் ஆர்தர் ரோடு, பைகுல்லா பெண்கள் சிறை, மும்பை, தானே, கல்யாண், எரவாடா, அவுரங்காபாத், லாத்தூர், நாசிக், நாக்பூர் உள்ளிட்ட சிறைகளில் திருட்டு, வழிப்பறி போன்ற சிறிய வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்ட மொத்தம் 1,700 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர்.

 இவர்களின் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றங்கள், பிணை வழங்கி உத்தர விட்ட பின்னரும், பிணைத்தொகை, உத்தரவாதம் போன்றவை செலுத்தினால்தான் பிணை கிடைக் கும். ஆனால், அவர்களால் பிணைத் தொகையை செலுத்த இயலவில்லை. உதவியை நாடுவதற்கான வழியும் தெரியவில்லை. இதையடுத்து, கைதிகள் நலன் மற்றும் மருத்துவ உதவி துறையுடன் இணைந்து இவர்களின் நீதிமன்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்து பிணை பெற்றுத்தர டாடா சமூக அறிவியல் நிறுவனம் முன்வந்துள்ளது. சிலரின் பிணைக்கான நிபந்தனைகளில் தளர்வு செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு கோரிக்கை விடுக்கவும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிணைத் தொகை ரூ.15ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை செலுத்த வேண்டியுள்ளதாகவும், டாடா சமூக அறிவியல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment