ஆவடி மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

ஆவடி மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள்

பகுத்தறிவு பண்பாட்டுத் திருவிழாவாக இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது! ஆவடி, அக். 5- ஆவடி மாவட்டக் கிளைக்கழகங்களில் இரண்டு நாட்கள் காலை முதல் மதியம் வரை ஊர்வலமாகச் சென்று கொடியேற்றி, பரப்புரை செய்து, ஆங்காங்கே உள்ள மக்களுக்கு இனிப்பு வழங்கி தந்தை பெரியாரின் 144ஆம் பிறந்தநாள்  பகுத்தறிவு பண்பாட்டுத் திருவிழாவாகக் கொண் டாடப்பட்டது.

பகுத்தறிவு பண்பாட்டுத் திருவிழாவின் நடைமுறை!

ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிளைக்கழகங்களிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பகுத்தறிவு பண்பாட்டுத் திருவிழாவாக இயக்கத் தோழர்கள் குடும்பத்து டன் ஊர்வலமாகச் சென்று பழைய கொடியை இறக்கி, புதிய கொடியேற்றி, அங்குள்ள மக்களுக்கு இனிப்பு வழங்கியும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை விளக்கிப் பேசி அவரது பிறந்தநாளை கொண்டாடுவது ஆவடி கழக மாவட்டத்தின் வழமை. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் கொண்டாடப் பட்டது. இதற்கு முன்னதாக நடைபெற்ற மாவட்டக் கலந்து ரையாடலில் ஒரே நாளில் கொடியேற்றும் திட்டத்திற்குப் பதிலாக இரண்டு நாட்களில் கொடியேற்றலாம் என்ற மாற்றுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி 17-09-2022, 18-09-2022 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் தலா 18, 32 இடங்களில் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை கொடியேற்றி மாவட்டக் கழகத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்புப் பேச்சாளராக மாநில மகளிர் பாசறையின் செயலாளரும், வழக்குரைஞருமான பா.மணியம்மை அழைக்கப்பட்டிருந்தார்.

வழக்கமாக இந்த ஊர்வலமானது ஜெனரேட்டர் இணைப்புடன் கூடிய ஒரு வாகனம் இயக்கப்பாடல்களை ஒலிபரப்பியவாறே முன்னே செல்லும். அதைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் இருசக்கர வாகனங்களில் எதிர் காற்றில் கழகக் கொடி பட் டொளி வீசிப்பறக்க. இருவர் இருவராக வருவர். கொடி யேற்றும் கிளைக் கழகங்கள் வந்தவுடன் இறங்கி, அந்தந்த பகுதிகளில் உள்ள கழகத் தோழர்கள் தலைமையில் உள்ளூ ரில் உள்ள நட்பு சக்தியாக இருக்கக்கூடிய முற்போக்கு அமைப்புகளின் தோழர்கள் கொடியேற்றுவர். அப்போது உணர்வு பூர்வமாக கொள்கை முழக்கங்கள் எழுப்பி, உற்சாகத் துடன் மக்களுக்கு தந்தை பெரியாரின் சிந்தனைகளை விளக்கி உரையாடி இனிப்பு வழங்கி மகிழ்ந்து அடுத்த கிளைக்கழகத்திற்கு இந்த ஊர்வலம் தொடரும். இதற்காக ஆவடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் முறைப்படி எழுத்துபூர்வமாக தகவல் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு!

கடந்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர்; சமூகநீதிக் கான சரித்திரநாயகர்; முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால், தந்தை பெரியார் பிறந்தநாளை ”சமூகநீதி நாளாக” அறிவித்ததை முன்னிட்டு கூடுதலாக எல்லா கிளை அமைப்புகளில் பொதுமக்களின் முன்னிலையில் பொறுப்பா ளர்கள் தலைமையிலும் அனைவரும் ”சமூகநீதிநாள்” உறுதி மொழியை எடுத்துக் கொள்வது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கொடியை அணிந்துகொண்ட கழகக் கொடி மரங்கள்!

முதல் நாளில் (17-09-2022) காலை 7 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழக தொழிலாளர் நல அமைப்பின் தலைவர் ஏழுமலை, ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன் தலைமையில் கொடியேற்றினார். அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள கொடி மரத்தில் இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் ஆ.வெ.நடராஜன் கொடியேற்றினார். அதேபோல் அங்கிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்தும், அங்கிருக்கும் கொடிமரத்தில் ஏழுமலை தலை மையில் முருகன் கொடியேற்றி சிறப்பித்தார். அங்கிருந்து திருநின்றவூர் நோக்கிச் சென்ற ஊர்வலம் திருநின்றவூர் பாலம் அருகில் உள்ள கொடிமரத்தில் மாவட்டச் செயலாளர் க.இளவரசன் இளைஞரணித் தலைவரின் தலைமையில் கொடியேற்றினார். அடுத்திருக்கும் பாலாஜி நகரில் ரகுபதி தலைமையில் பட்டாளம் பன்னீரும், இரகுபதி இல்லத்தில் ராணி ரகுபதியும், பிரேம்குமாரும், செவ்வாய்ப்பேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை யணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்டாபி ராம் உழைப்பாளர் நகரில் வேல்முருகன், அறிவுமணி ஆகி யோரும், பிருந்தாவன் நகரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் முருகேசன் தலைமையில் அவரது இணையர் பத்மினி கொடியேற்றினார். கோயில்பதாகை கருணாநிதி நகரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. அடுத்திருக்கும் கன்னட பாளையத்தில் தமிழரசன் தலைமை யிலும், அடுத்துள்ள லெனின் நகரில் இராமலிங்கம் தலைமை யிலும், திருமுல்லைவாயிலில் பச்சையம்மன் கோயில், அம்பேத்கர் சிலை அருகில், மாந்தோப்பு ஆகிய மூன்று இடங்களில் பகுதி பொறுப்பாளராக இருக்ககூடிய இரணியன் தலைமையிலும் கொடியேற்றப்பட்டது. அயப்பாக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்டச் செயலாளர் க.இளவர சன், ஆ.வெ.நடராசன், ஏழுமலை, பெரியார்பிஞ்சு சமத்துவ மணி ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். முதல் நாளில் மொத்தம் 18 இடங்களில் கொடி யேற்றப்பட்டது. மாவட்டக் கழகத்தின் சார்பில், காலை உணவு ரகுபதி இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு தோழர்களுக்கு கொடுக்கப்பட்டது. 

பெரியாரின் பிறந்தநாளை மக்கள் நிகழ்ச்சியாக மாற்றிய ஜானகிராமன்!

கோயில்பதாகையில் உள்ள கருணாநிதி நகரில் பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் ஜானகிராமன் அவர்களின் கடை முன் ஒரு மேசை மீது பெரியார் சிலை, மற்றும் பெரியார் படம் வைத்து ப.க.மாவட்டத் தலைவர் ஜானகிராமன், தி.மு.க. தலைமைக்கழக சொற்பொழிவாளர் க.மு.ஜான், தி.மு.க. பகுதி பிரதிநிதி சிங்காரம், மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், பட்டாபிராம் வேல்முருகன் மற்றும் தி.மு.க. தோழர்கள் பலரும் கலந்து கொண்டு  தந்தைபெரியாரின் பிறந்தநாளை, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மிகச் சிறப்பாகக் கொண்டாட உதவினர். கடந்த ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற இவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் மகளிருக்கான ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்து 100 க்கும் மேற்பட்ட மகளிரை வரவழைத்து மிகச் சிறப்பாக நடத்தி பெரியார் கொள்கைகளை பெண்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்தவர். ஆகவே அதே உற்சாகத்தோடு தனது கடை வீதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை மிகச்சிறப்பாக கொண்டாடி ஆவடி மாவட்டத் தோழர்களை உற்சாகப்படுத்தினார். சென்ற ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதிநாளாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தவுடன் தி.மு.க.வினர் பெரியார் படத்தைத் தேடித் தேடிக் கொண்டு வந்து முக்கிய சாலைகளில் வைத்து மலர்கள் தூவி மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது. 

மூன்று பெரியார் சிலைகள்! 18 கொடிமரங்கள்!

முதல்நாளில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அயப் பாக்கம், செவ்வாய்ப்பேட்டை பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள தந்தை பெரியாரின் மார்பளவு சிலைகளுக்கு மாலையணிவித்தும், 18 இடங்களில் கொடி யேற்றியும், பரப்புரை செய்ததுமாக மொத்தம் 21 இடங்களில் பெரியார் பற்றிய சிந்தனைகளை; நினைவுகளை விதைத் திருப்பது குறிப்பிடத்தக்கது. வழிநெடுகிலும் இந்த ஊர்வலம் மக்கள் கவனத்தையும் ஈர்த்தது. முதல் நாளில் மாவட்டச் செயலாளர் க.இளவரசன், இளைஞரணித்தலைவர் வெ.கார்வேந்தன், திருவள்ளூர் மாவட்ட (அரசு) அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பின் தலைவர் கி.ஏழுமலை, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் சிவ.ரவிச்சந்திரன், ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன்,  திருநின்றவூர் ரகுபதி, ராணி, ஜெயராமன், பட்டாபிராம் ஸ்டீபன், திருவள்ளூர் பகுதி தோழர் தென்னரசு, அம்பத்தூர் ஆ.வெ.நடராஜன், பெரியார் பிஞ்சு சமத்துவமணி, பட்டாளம் பன்னீர், தமிழரசன், திருநின்றவூர் அருண், ஆவடி வஜ்ரவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மற்ற தோழர்கள் பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் உலகம் கல்வெட்டுத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இரண்டாம் நாள் கொடியேற்றம்; பரப்புரை ஊர்வலம்!

இரண்டாம் நாளில் (18-09-2022) 30 இடங்களில் கொடி யேற்றுவதாக திட்டமிடப்பட்டு காலை 7 மணிக்கு அம்பத்தூரில் உள்ள பானு நகர் ஏழுமலை இல்லத்தில் 

ஏ.விஜயகுமார், வி.சத்யா ஆகியோரும், அதே பானு நகர் முதன்மைச் சாலையில் உள்ள கொடிமரத்தில் பா.ராஜசேகரன் ரா.வித்யா ஆகியோரும், புதூர் பேருந்து நிலையத்தில் கி.ஏழுமலை, சரோஜா ஆகியோரும், புதூர் பூங்காவில் வெ.கார்வேந்தன், சோபன் பாபு ஆகியோரும், அம்பத்தூர் (ஓ.டி.) பேருந்து நிலையத்தில் ப.கண்ணன், சி.ஜெயந்தி ஆகியோரும், அம்பத்தூர் அம்பேத்கர் சிலை அருகில் 

பூ.இராமலிங்கம், ரா.தெய்வமணி ஆகியோரும், க.சரவணன் இல்லத்தில் அய்.சரவணன், ச.தேன்மொழி ஆகியோரும், கொரட்டூர் ரயில் நிலைய சாலையில் (பிரிட்டானியா) க.இளவரசு, இரா.கோபால் ஆகியோரும், கொரட்டுர் பேருந்து நிலையத்தில் பன்னீர்செல்வம், கலையரசன் ஆகியோரும், பாடி யாதவா தெருவில் பா.முத்தழகு, தி.மு.க. பகுதிப் பிரதிநிதி சங்கர் ஆகியோரும், பாடி பிரிட்டானியா இரா.கோபால், பகலவன் ஆகியோரும், அம்பத்தூர் தொழிற்பேட்டை வெ.கார்வேந்தன், கி.ஏழுமலை ஆகியோரும், ஜே.ஜே.நகர் பேருந்து நிலையம் ராஜேந்திரன், முரளி ஆகியோரும் கொடியேற்றி சிறப்பித்தனர். பாடியில் தி.மு.க. பகுதிப்பிரதிநிதி சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பொதுமக்களுக்கு மிட்டாய்க்குப் பதிலாக சாக்லேட்டுக்குப் பதிலாக லட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது! கொரட்டூர் பெரியார்! அண்ணா! கலைஞர்! பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், பாசறையில் ஊர்வலத் தில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கி சிறப்பித்தார்.

பொதுமக்களே. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சிடம் எச்சரிக்கை!

அங்கிருந்து மதுரவாயல் பகுதிக்கு ஊர்வலம் புறப்பட்டது. அங்கே மார்க்கெட் பகுதியில் பி.எஸ்.பி. அமைப்பின் மாநில சிறுபான்மை பிரிவுத்தலைவர் டி,பி.யோசுவா அம்பேத்கர், திராவிடர் கழக மதுரவாயில் பகுதித் தலைவர் க.வேல்சாமி தலைமையில் கொடியேற்றினார். அதைத் தொடர்ந்து ரேஷன் கடை பேருந்து நிறுத்தத்தில் கழக பகுதி அமைப்பாளர் தங்க.சரவணன் தலைமையில் பெரியார் - அம்பேத்கரிய சிந்தனையாளர் செந்தில் கொடியேற்றினார். அடுத்துள்ள மின்சார அலுவலகத்தில் பகுதித் துணைத் தலைவர் அண்ணா நிசார் தலைமையில் தமிழன் காசி கொடியேற்றினார். அடுத் துள்ள சீமாத்தம்மன் நகரில் 147 ஆவது மாமன்ற உறுப்பினர் ரமணி மாதவன் வி.சி.க. பகுதித் துணைத் தலைவர் ப.ராஜா தலைமையில் கொடியேற்றினார். அடுத்து கன்னியம்மன் நகரில் கு.சந்திரசேகர் தலைமையில் 146 ஆம் வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் கொடியேற்றினார். அடுத்ததாக மதுரவாயல் ஏரிக்கரையில் கார்த்திகேயன் தலைமையில் வேல்சாமி கொடியேற்றினார்.  மதுரவாயல் மின்நிலையம் அருகில் வழக்குரைஞர் பா.மணியம்மை, “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சிடம் பொதுமக்கள் ஏன் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லி உரையாற்றினார்.

உற்சாகம் பொங்கிய திருவேற்காடு நிகழ்ச்சி!

திருவேற்காடு பேருந்து நிலையத்தில் கழகத் தோழர்கள் இடம் மாறிப்போனதால், தேர்தலுக்காக அகற்றப்பட்ட கொடிமரம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. அங்கே செயல வைத் தலைவர் சு. அறிவுக்கரசு மகள் இர.அ.இளவேனில், முனைவர் த. ஜெயக்குமார் இணையரின் மகள் இ.ஜெ.அன்றில் - சட்டம் பயில்வதற்காக திருவேற்காடு குடிவந்ததை முன்னிட்டு, பேருந்து நிலையத்தில் இ.ஜெ.அன்றில் கழகக் கொடியை உயர்த்திப் பிடிக்க, முனைவர் த.ஜெயக்குமார் சமூக நீதி நாள் உறுதிமொழியை முன்மொழிந்தும், தோழர்கள் அதை வழிமொழிந்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக ஓய்வு பெற்ற பேராசிரியரும், பெரியாரியல் செயற்பாட்டாள ருமான முனைவர் த.ஜெயக்குமார், தந்தை பெரியாரின் தொண்டு எப்படிப்பட்டது என்பதை குறித்து சுருக்கமாக உரையாற்றியும் சிறப்பித்தார். இர.அ.இளவேனில், இ.ஜெ. அன்றில் இருவரும் கருஞ்சட்டைத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட துணைச் செயலாளர் பா.முத்து கலந்து கொண்டார். முனைவர் த.ஜெயக்குமார், மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்டச் செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து சிறப்பித்து மகிழ்ந்தார்.

திருவேற்காட்டில் இருந்து பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட ஊர்வலம் குமணன் சாவடியை நோக்கிச் சென்றது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் பூவை பகுதித் தோழர் பகுத்தறிவு கொடியேற்றினார். முதலில் மருத்துவர் சரோஜா பழனியப்பன் இல்லத்திற்கு அருகில் பிள்ளையார் கோயிலில் உள்ள கொடி மரம், ராஜா நகரில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் கொடியேற்றினார். திட்டமிட்ட நேரத்தையும் கடந்து பிற்பகல் 2:30 மணியைத் தாண்டிவிட்டதால், வசந்தம் நகரில் கொடியேற்றிவிட்டு, அங்கிருந்து, இந்த பகுத்தறிவு பண்பாட்டுத் திருவிழா ஊர்வலம்  நேரிடையாக ஆவடி பெரியார் மாளிகை நோக்கித் திரும்பியது. 

ஓயாமல் ஒலித்த பகுத்தறிவுப் பாடல்கள்!

வழிநெடுகிலும் ஒலிபெருக்கியில் கழக இயக்கப்பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தன. ஊர்வலத்தில் கலந்துகொண்ட 40க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு மதிய உணவு கொடுக் கப்பட்டது. நீண்டநேரம் இந்த நிகழ்வு பற்றிய மதிப்பீட்டை பற்றி சிறிது அளவளாவலுக்குப்பின், தவிர்க்கப்பட வேண்டி யவை என்னென்ன என்பதைப்பற்றியும், சிறப்பிக்க வேண்டியன என்னென்ன என்பதைப்பற்றியும் அலசி ஆராய்ந்து, அடுத்த ஆண்டு எந்தக்குறையுமின்றி இன்னும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்ற உறுதியுடன் தோழர்கள் கலைந்து சென்றனர். 

இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முருகேசன், துணைச்செயலாளர், கார்த்திகேயன், அமைப் பாளர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் தொண்டறம், நர்மதா, வஜ்ரவேல், ஏழுமலை, ஆவடி நகரச் செயலாளர், தலைவர் கோ.முருகன், முகப்பேர் முரளி, சோபன்பாபு, மதுரவாயல் பகுதித்தலைவர் வேல்சாமி, சரவணன், நிசார், இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், அம்பத்தூர் கண்ணன், நதியா மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், வை.கலையரசன், மதுரவாயல் சந்திர சேகரன், சட்டக்கல்லூரி மாணவர் பிரவீன், பட்டாளம் பன்னீர், கொரட்டூர் கோபால், அம்பத்தூர் சரவணன், இரகுபதி, ராணி, பிரேம். பூவிருந்தவல்லிப் பகுதியின் தலைவர் பெரியார் மாணாக்கன், இசையின்பன், சீர்த்தி, பகலவன், இனநலம், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன், பிரவீன், ஆவடி ரவீந் திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத்தலைவர் பா.தென்னரசு, மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொண்டு வழிகாட்டுவார்கள். இந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ளவில்லை என்றாலும் தகுந்த ஆலோசனை வழங்கி வழிநடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் இந்த பகுத்தறிவு பண்பாட்டுத் திருவிழாவை வாழ்த்தி வரவேற்று தோழர்களை உற்சாகப் படுத்தினார். அதேபோல் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவல்துறையினர் அதிக அளவில் இந்த ஊர்வலத் தினை பின்தொடர்ந்து வந்த பாதுகாப்பு தந்தது குறிப்பிடத் தக்கது. போக்குவரத்துக்கும், காவல்துறைக்கும் எவ்வித இடையூறுமின்றி நிகழ்வை மாவட்டத் தோழர்கள் ஒருங் கிணைத்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment