மாநில திட்டக்குழு: 10 கொள்கைகள் தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

மாநில திட்டக்குழு: 10 கொள்கைகள் தயாரிப்பு

சென்னை,அக்.29- தமிழ் நாடு மாநில திட்டக்குழு வின் கொள்கை வரைவு களின் மீதான ஆய்வுக் கூட்டம் தலைமைச்செய லகத்தில் தமிழ்நாடு  முதலமைச்சர், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் (27.10.2022) நடைபெற் றது.

இது குறித்து தமிழ் நாடு அரசு செய்திக்குறிப் பில் வெளியிட்டுள்ளதா வது:

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழு புதிய கொள்கைகளை  தமிழ் நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுக்கிணங்க வடிவமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் திட் டக் குழுவால் பல்வேறு துறைகளுக்குரிய பத்து கொள்கைகள் தயாரிக் கப்பட்டு வருகிறது.

அவற்றில் பணி முடி வுற்ற நிலையில் உள்ள மூன்று கொள்கைகளான (1) ஆறு துறைகளை உள் ளடக்கிய தொழில் மய மாதல் கொள்கை - மின் வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தா தொழில்கள், துணிநூல், கைத்தறி மற் றும் சுற்றுலா (2) தமிழ் நாடு சுகாதார நலக் கொள்கை (3) திருநர், நலக்கொள்கைகள் ஆகி யவை குறித்து முதலமைச் சரிடம் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டது. மேலும், இக் கொள்கைகளை செயல் படுத்துதல் மற்றும் முக் கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட் டது.

மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செய லாளர் விக்ரம் கபூர், ஆகி யோர் இக்கொள்கைகள் குறித்து விளக்கினர். அத னைத் தொடர்ந்து, தொழில் மயமாதல் கொள்கை குறித்து, மல்லிகா சீனி வாசனும், தமிழ்நாடு மருத் துவக் கொள்கை குறித்து அமலோற்பவநாதனும் மற்றும் திருநர் + நலக் கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட் ராஜும் விவரித்தனர்.

இக்கூட்டத்தில், மாநி லத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, குழு உறுப்பினர்கள் பேராசிரி யர் இராம. சீனுவாசன், பேராசிரியர் ம. விஜய பாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து, (ஓய்வு), சட்டமன்ற உறுப் பினர் டி.ஆர்.பி. ராஜா, மல்லிகா சீனிவாசன், ஜோ. அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன், நர்த்தகி நடராஜ், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், சுற்றுலா, பண் பாடு மற்றும் அறநிலை யங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தர மோகன், மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் த.சு. ராஜசேகர், குறு, சிறு மற்றும்” நடுத்த தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் வி. அருண்ராய், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment