இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகு முறையில் என்ன தவறு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகு முறையில் என்ன தவறு?

(நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்)

1. இந்தியர்களின் ஹோபிசியன் hobbesian  - சுயநலத்தின் கலாச்சாரம். இந்தியாவில் ஊழல், ஒரு கலாச்சார அம்ச மாகும்.  ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப் பாக மோசமாக எதுவும் நினைக்க வில்லை. ஏனெனில் ஊழல் இயற்கை யாகவே நிலவுகிறது.

2. ஊழலைச் சரிசெய்வதை விட, இந்தி யர்கள் அவற்றைச் சகித்துக் கொள்கிறார்கள். 

3. இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.

4. மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும். ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுளுக்குப் பணம் செலுத்தி, அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை - தகுதி இல்லாதவர்கள் கூட கடவுளிடம் பணம் கொடுத்து வெகுமதி யைக் கேட்கிறார்கள்.

5. கோவில் சுவர்களுக்கு வெளியே உள்ள உலகில், அத்தகைய பரிவர்த்தனை "லஞ்சம்" என்று அழைக்கப்படுகிறது.

6. ஒரு பணக்கார இந்தியர் கோயில் களுக்கு பணம் மட்டுமல்ல, தங்கக் கிரீடங்கள் மற்றும் ரத்தினக் கற் களையும் நன்கொடையாக வழங்குகிறார். அவரு டைய பரிசுகள் ஏழைகளுக்கு அல்ல, கட வுளுக்குத் தான். 

7. ஜூன் 2009 இல், கருநாடக அமைச் சர் ஒருவர் திருப்பதிக்கு ரூ.45 கோடி மதிப் புள்ள தங்கம் மற்றும் வைர கிரீடம் வழங் கினார் என்று The Hindu  பத்திரிகை சொல்லுகிறது. 

8. இந்தியாவில் உள்ள கோவில்களில் செல்வம் குவிந்துள்ளது, பில்லியன் கணக் கான ரூபாய் வீணடிக்கப்படுகிறது, அதை என்ன செய்வது என்று தெரியாமல் பெட் டகங்களில் தூசி பட்டுக் கிடக்கிறது.

9. சிந்தனைமிக்க, அய்ரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது பள்ளிகளைக் கட்டினர். ஆனால், இந்தியர்கள் அய் ரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்லும்போது, அவர்கள் அங்கு வழி பாட்டுத் தலங்களைக் கட்டுகிறார்கள்,

10. ஆசீர்வாதம் கொடுக்கக் கடவுள் கூட பணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, அதே போல லஞ்சம் பெறுவதில் தவறல்ல என்று இந்தியர்கள் நம்புகிறார்கள்.

11. உழைத்து உற்பத்தி செய்யும் சமூகத் தின் உற்பத்தியை, உழைக்காது உற்பத்தி செய்யாதவர்கள் என்று பங்கு போட் டனரோ அன்றே ஊழல் ஆரம்பித்து விட்டது. கடவுள், மதம், அரச அமைப் புகள் ஆகியவை ஊழலுக்குப் பயன்பட் டது. இதனால்தான் எளிதில் இந்தியர்கள் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்.

12. இந்திய கலாச்சாரம் இத்தகைய பரிவர்த்தனைகளை மேன்மையாகத் தழு வுகிறது.

13. மக்கள், முற்றிலும் ஊழல் நிறைந்த அரசியல் வாதியை நிராகரிக்கவில்லை, மாறாக அவரை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆட்சியைச் செய்ய வைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இது போன்ற ஒரு விஷயத்தை ஒருவர் கூட யோசிக்க முடியாது.

14. ஊழலை நோக்கிய இந்திய அற நெறி அதன் வரலாற்றில் தெளிவாகக் காணப்படுகிறது. நுழைவாயில்களைத் திறக்க காவலர்களுக்கு பணம் செலுத்திய பின்னர் நகரங்களும் தேசங்களும் பிடிக் கப்பட்டதாகவும் கைப்பற்றப்பட்டதாக வும் இந்திய வரலாறு கூறுகிறது. 'புராணங் கள்' பார்த்தால் சொல்லவே வேண்டாம்.. வேதம் முழுக்க “நான் இதைத் தருகிறேன் நீ இதை எனக்குத் தா” என்ற ரீதியில் தான் இருக்கு. லஞ்சம் இங்கே ஆன்மீகமாக மாறிவிட்டது. 

15, இந்தியாவில், கடவுளுக்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு விஷயங்கள் வந்தன. இது இந்தியாவில் மட்டுமே உள்ள ஒரே அம்சமாகும். இந்த வகை ஊழல் இந்திய துணைக்கண்டத் திற்கு தனித்துவமானது.

16. பழைய கிரேக்க தேசத்திலும் நவீன அய்ரோப்பாவிலும் இருந்ததை விட இந் தியர்கள் மிகக் குறைவாகவே போராடி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந் தியாவில் போர் தேவை இல்லை; இராணு வத்தை அடிபணிய வைக்க லஞ்சம் மட்டுமே போதுமானதாக இருந்தது.

17. இந்தியக் கோட்டைகளைக் கைப் பற்றிய வரலாற்றில் எப்போதும் நிதி பரி மாற்றம் இருந்தது. முகலாயர்கள், மராட் டியர்களையும் ராஜபுத்திரர்களையும் வெற்றி கொள்ள லஞ்சம் கொடுத்த வரலாறு உள்ளது.

18. சிறீநகர் மன்னர், லஞ்சம் வாங்கிய பின், பரோஷிகோவின் மகன் சுலைமா னைக் கொல்ல அவுரங்கசீப்பிற்கு கைய ளித்தார்.

19. லஞ்சம் காரணமாக, தேசத் துரோ கத்திற்காக இந்தியர்கள் பெரிய அளவில் கைது செய்யப்பட்டதாக பல வழக்குகள் பழைய காலம் முதலே உள்ளன.

20. கேள்வி என்னவென்றால்: பிற ‘நாகரிக’ நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத பரிவர்த்தனை கலாச்சாரம் ஏன் இந்தியர்களுக்கு மட்டும் வந்தது ?

21. எல்லோரும் தார்மீக ரீதியாக நடந்து கொண்டால், எல்லோரும் உயரலாம் என்ற கோட்பாட்டை இந்தியர்கள் நம்ப வில்லை, ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கையைச் சார்ந்தது அல்ல.

22. அவர்களின் ஜாதி அமைப்பு அவர்களைப் பிரிக்கிறது. எல்லா மனிதர் களும் சமம் என்று அவர்கள் நம்பவில்லை. இது அவர்களின் பிரிவு மற்றும் பிற மதங்களுக்கு இடம்பெயர வழிவகுத்தது. எனவே, பல இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்தமத விசுவாசிகள் ஆனார்கள். பலர் கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினர்.

23. உண்மை என்னவென்றால், இந்தி யர்கள் ஒருவரையொருவர் நம்புவதில்லை.

24. இந்தியாவில் இந்தியர்கள் இல்லை; இந்துக்கள், கிறிஸ்தவர்கள். முஸ்லிம்கள் மற்றும் பிற மதம் சார்ந்த மக்கள் வாழ் கிறார்கள்.

25. இப்பிரிவுகள், இந்தியாவில் சமத் துவமின்மை, ஊழல், மற்றும் ஆரோக்கிய மற்ற கலாச்சாரம் நிறைந்த சமூகத்திற்கு வழிவகுக்கிறது. 

(உலகின் மிகக் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாகும்.)

நன்றி: “அறிவியல் ஒலி”, பிப். 2022


No comments:

Post a Comment