தேநீர் குடித்தால் மரணமடையும் சாத்தியங்கள் குறைவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

தேநீர் குடித்தால் மரணமடையும் சாத்தியங்கள் குறைவா?

தேநீர் குடித்தால் மரணமடையும் சாத்தியம் குறைவாக இருக்கலாம் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

தேனீர் பானத்தைக் குடிக்காதவர் களுடன் ஒப்பிடுகையில் நாளொன் றுக்கு 2 அல்லது அதற்கும் அதிகமான குவளை தேநீர் குடிப்போருக்கு மரண மடையும் சாத்தியம் 9 விழுக்காடு முதல் 13 விழுக் காடு வரை குறைந்ததாகக் கூறப்பட்டது.

பிரிட்டனில் அரை மில்லியன் பேர் கலந்துகொண்ட ஆய்வின் முடிவுகள் Annals of Internal Medicine  சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. Black tea  வகையில் 2 அல்லது அதற்கும் அதிகமான குவளை தேநீர் குடிப் போருக்கு மரணமடையும் சாத்தியம் குறைந்ததாகக் கூறப்பட்டது. தேநீரில் சர்க்கரை கலந்தாலும் பால் கலந்தாலும் முடிவுகளில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தேநீரைக் குடிப் போருக்கு மரணமடையும் சாத்தியம் குறைவாக இருப்பதற்குத் தேநீரே கார ணம் என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

தேநீர் குடிப்பதுடன் தொடர்புடைய மற்ற சுகாதார அம்சங்களும் காரண மாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. தேநீரைக் குடிப்பதால் பக்கவாதம், மறதி நோய் ஆகியவை ஏற்படுவதற் கான அபாயம் குறையலாம் என்று சீனாவின்  Tianjin Medical Univer sity  பல்கலைக்கழகம் மேற்கொண்ட இன்னோர் ஆய்வில் தெரியவந்தது.  ஆனால் இந்த தேனீர் என்பது பால் இல்லாமல் கிரீன் டி எனப்படும் தேயிலை வடிநீர் தான், நமது ஊரில் அதிகம் குடிக்கப்படும் பால் கலந்த தேயிலைத் தூள் டீ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment