பார்முழுதும் திராவிடத்தின் பயன்விளைப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

பார்முழுதும் திராவிடத்தின் பயன்விளைப்போம்!

மந்தையிலே ஆடாக வாழாதே என்றாரே!

வந்தபயல் கால்விழுந்து வணங்காதே என்றாரே!!

முந்தைவினை மோட்சமெல்லாம் மூடமென்றார் பெரியாரே!!

சொந்தமென்றால் புகழொன்றே தொண்டுசெய்வாய் என்றாரே!

எண்ணித்தான் தமிழ்மொழியின் எழுத்துக்கள் குறைத்தாரே!

மண்ணுக்கு வேண்டாமே மனிதருக்கு விடுதலைதா!

பெண்களெல்லாம் ஆணினத்தின் அடிமையில்லை என்றாரே!

மண்ணிதிலே பொதுமைவுடமை மலரவேண்டும் என்றாரே!!

வெருட்டுகின்ற வேதங்கள் வெறுத்துநின்றே பகுத்தறிவால்

மருட்டுகின்ற சாத்திரங்கள் மறுத்துரைத்தார் பெரியாரே

இருட்டு சாதி மதமெல்லாம் கிழித்தெழுந்த கதிரவனை

இருக்கும்வாழ் நாளெல்லாம் ஏத்தியேத்திப் புகழ்வோமே!!

பார்ப்பனீயப் பகைமுறிக்கப் படையொன்று கண்டாரே!

கூர்த்தமதி வீரமணி கொடையெனவே தந்தாரே!

ஆர்த்தெழுந்தே அவர்பின்னால் அனைவருமே இந்நாளில்

பார்முழுதும் திராவிடத்தின் பயன்விளையச் செய்வோமே!!

- சுப முருகானந்தம்


No comments:

Post a Comment