பிள்ளைகள் தூங்கும் முன் கைப்பேசியைத் தவிர்ப்பது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

பிள்ளைகள் தூங்கும் முன் கைப்பேசியைத் தவிர்ப்பது எப்படி?

தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடைமுறைப்படுத்து வதற்கான சிறந்த வழி. நீங்கள் எவ்வளவு நேரம் கைப் பேசியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான நேரத்தில் தூங்குவது முக்கியமானது. தூங்கச் செல்வதற்கு முன்பு கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்துதல் நேரத்தை வீணாக்குவதோடு கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். கைப்பேசியை பலரும், தூங்கப் போகும் நேரத்தில் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானமே இதை நடைமுறைபடுத்துவதற்கான சிறந்த வழி. நீங்கள் எவ் வளவு நேரம் கைப்பேசியை பயன்படுத்துகிறீர்கள் என் பதை கண்காணிக்க வேண்டும். 

கைப்பேசியிலிருந்து வெளியாகும் நீல ஒளி அலைகள், இரவு நேரங்களில் கண் பார்வையையும் தூக்கத்தையும் அதிகம் பாதிக்கும். இதனைத் தவிர்க்க பயன்படுத்தும் கைப்பேசியை படுக்கும் இடத்தில் இருந்து கைகளுக்கு எட்டாத தூரத்தில் வையுங்கள் அல்லது படுக்கை அறைக்கு வெளியே வையுங்கள். இதன் மூலம் தூங்கும் போது கைப்பேசியை பயன்படுத்தும் ஆர்வத்தைக் குறைக்க முடியும்.


No comments:

Post a Comment