ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெற்றி

ராஞ்சி, செப். 6- ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் நடத்தப்பட்ட நம் பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித் தார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன். 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க் கண்ட் சட்டப்பேரவையில் 48 எம்எல்ஏக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூ பித்தார்.

ஆனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த விடாமல் பாஜகவினரும் அதன் கூட்டணிக் கட்சியான ஏஜெஎஸ்யு கட்சியினரும், இரண்டு சுயேச்சை வேட்பாளர் இருவரும் சேர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு நடுவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடந்து முடியும் தருவாயில் பாஜக வினர் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன், பாஜக மீது சரமாரி குற்றஞ்சாட் டினார். தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்க பணப் பெட்டியுடன் சிலர் சுற்றிவந்தனர். அவர்களை விலைக்கு வாங்கும் பொறுப்பு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸுக்கு ஒப்ப டைக்கப்பட்டிருந்தது. பாஜக தேர் தல் வெற்றிகளுக்காக ஆங்காங்கே குழப்பத்தை ஏற்படுத்தி வன் முறையை நிகழ்த்தி உள்நாட்டுப் போர் நடப்பது போன்ற சூழல் களை உருவாக்குகிறது. எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை சிதைத்து விட்டனர். எப்போதும் எங்கும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்" என்றார்.

சர்ச்சையின் பின்னணி: 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க் கண்ட் சட்டப்பேரவைத் தேர்த லில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற் றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்றார். 2021 மே மாதம் ராஞ்சியின் அன் காரா வட்டத்தில் 0.88 ஏக்கர் பரப் பிலான குவாரி, முதலமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பத வியை தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக கல்குவாரி உரிமத்தை அவர் பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும், முததலமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மாநில ஆளுநர் ரமேஷ் பெய்ஸிடம் பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் மனு அளித் தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment