உ.பி.சாமியார் முதலமைச்சர் 'பரிசாக கொடுத்த ஒரு லட்சம்' ரூபாய்க்கான காசோலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

உ.பி.சாமியார் முதலமைச்சர் 'பரிசாக கொடுத்த ஒரு லட்சம்' ரூபாய்க்கான காசோலை

பணமில்லாததால்  'தண்டத் தொகை' கட்டிய கூலித் தொழிலாளி மகன்

லக்னோ, செப். 25  உத்தரப் பிரதேசத் தில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முத லிடம் பெற்ற மாணவருக்கு பரிசாக சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் அளித்த ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை பணம் இல்லை என்று திரும்பி வந்ததால் ரூ.250 அதற்கான ஜிஎஸ்டி சேர்த்து ரூ.290 தண்டமாக கட்டினார்.

ஒவ்வோரு மாநிலத்திலும் பள்ளி இறுதித்தேர்வில் முதலிடம் பெற்ற வர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசு மற்றும் பாராட்டுகள் தெரிவிப்பது வழக்கம், இது மற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கவும், உற்சாகப்படுத்தவும் இந்த நடைமுறை உள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் வந்த மாணவருக்கு பாராட்டு விழா நடை பெற்றது, உத்தரப் பிரதேச தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத், அம்மாநில தலைமைச்செயலாளர் போன்றோர் கலந்துகொண்ட நிகழ்ச் சியில் பாராட்டு பத்திரமும், ஒரு லட் சத்திற்காக காசோலையும் ஆதித்ய நாத் முதலிடம் வந்த மாணவருக்கு கொடுத்தார். 

 இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு சேர்ந்துள்ள மாணவன் தனக்கு கொடுத்த காசோலையை தனது தந் தையிடம் கொடுத்து அதை வங்கியில் கொடுத்து பணமாக்கி கொள்ள கொடுத்தார். அங்குள்ள இந்தியன் வங்கியில் அந்தக் காசோலையைக் கொடுத்து பணமாக்க நினைத்துள் ளார்கள் இரண்டு நாள் கழித்து பணம் எடுக்கச் சென்ற மாணவரின் தந்தைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, 

அந்த காசோலைக்குரிய வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றும், பணம் இல்லாத காசோலையை வரவு வைக்க பயன்படுத்தியதற்காக ரூ.250 தண்டத்தொகை அதற்குறிய ஜிஎஸ்டி தொகை என சேர்த்து ரூ.290அய்  வங்கி எடுத்துக்கொண்டது. ஏற்கெ னவே மிகவும்  குறைந்த தொகையே வங்கியில் இருந்தது, இப்போது அந்த தொகையையும் தண்டமாக வங்கி எடுத்துக் கொண்டது. இதனை அடுத்து மாணவர் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்ட போது, அரசு தொடர்பான விவ காரங்களில் தான் ஒன்றும் செய்ய முடியாது. தலைமைச் செயலகத்திற்கு சென்று புகார் கொடு என்று கூறிவிட்டார். மாணவன் இருக்கும் ஊரில் இருந்து லக்னோ செல்வதற்கே பயணச் செலவும் ரூ.400  ஆகும் என்பதால் மாநிலத்திலேயே முதல் வகுப்பு வந்த மாணவனும் அவ ரது தந்தையும் தவித்து நிற்கின்றனர்


No comments:

Post a Comment