இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் நாடு திரும்ப இலங்கை அரசு குழு அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் நாடு திரும்ப இலங்கை அரசு குழு அமைப்பு

கொழும்பு, செப். 6- இலங்கை யில் 1983இல் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து அந்நாட்டின் மிகப் பெரிய இன சிறுபான்மையினரான தமிழர்கள் பாதுகாப்புக்காக தமிழ் நாடு வரத்தொடங்கினர். இலங்கைத் தமிழர்களில் சுமார் 12 சதவீதம் பேர் தென்னிந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அங் குள்ள தமிழர்கள் சமீபத் தில் தமிழ் நாட்டுக்கு வந் துள்ளனர்.

இந்நிலையில் இந்தி யாவில் இருந்து இலங்கை அகதிகள் நாடு திரும்புவ தற்கு வசதியாகவும் இலங்கை தமிழர்களின் மீள்குடியேற்றத்தை திறம் பட மேற்கொள்ளவும் குழு ஒன்றை இலங்கை அதிபரின் செயலாளர் சாமன் ஏகநாயக நியமித் துள்ளார். ஈழம் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் குடி யேற்றத்துறை, நீதித்துறை வெளியுறவுத் துறை ஆகி யவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பதிவா ளர் ஜெனரல் துறையின் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூத ரகம் இதற்கான நடவடிக் கையை ஒருங்கிணைக்க உள்ளது.

இதுகுறித்து இலங்கை அதிபர் அலுவலகம் நேற்று (5.9.2022) வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையை சேர்ந்த சுமார் 58 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் தற்போது அகதிகளாக வசிக்கின்ற னர். இவர்களில் 3,800 மட் டுமே தற்போது இலங்கை திரும்ப தயாராக உள்ள னர்” என்று கூறியுள்ளது.

2021ஆம் ஆண்டு, இந் திய உள்துறை அமைச்சக ஆவணங்களின்படி தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் இலங்கை தமிழர்கள் 58,843 பேர் வசிக்கின்றனர்.

மேலும் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே வசிக்கின்றனர்.

No comments:

Post a Comment