மடாதிபதி தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

மடாதிபதி தற்கொலை

பெங்களூரு,செப்.6- கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து ஜாதி மடமான இதன் மடாதி பதியாக‌ பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் வன் கொடுமை வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் அலைபேசியில் பேசிக்கொண்ட ஒலிப்பதிவு ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர். இந்த ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி காவல்துறையினர் நிகழ்வு இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் உடற் கூராய்வுக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத் தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment