ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடக்கி வைக்கிறார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் டில்லியில் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித் தார்.

உயர்ஜாதியில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு செப்டம்பர் 13 முதல் விசாரணை, உச்ச நீதி மன்றம் முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

பன்முகத்தன்மைக்கு உள்ளார்ந்த மதிப்பு உள்ளது, நியாயம், சமூக நீதி பற்றிய நமது புரிதலை மேலும் அதிகரிக்கிறது: பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய அலுவலகத்திற்கான தொடக்க விரிவுரையை நிகழ்த்திய அவர், "குறிப்பிட்ட ஜாதி மற்றும் வர்க்க நிலைப்பாடுகள் காரணமாக, குறியீடாகவும் பொருள் ரீதியாகவும், சட்டத் தின் அதிகார முறைகேடுகளுக்கு  ஆளாகக் கூடியவர்களா கவும் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் பெரும்பகுதி மக்கள் உள்ளனர்" என்று அய்அய்டி- டில்லியில் நடை பெற்ற கருத்தரங்கில் நீதிபதி சந்திரசூட் பேச்சு.

தேசிய பங்கு சந்தை மோசடி வழக்கில் ஏற்கனவே அதன் தலைவராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா கைதை தொடர்ந்து, தற்போது மேனாள் தலைமை நிர்வாக அதி காரி ரவி நரேனை அமலாக்கத் துறை கைது செய்தது.

தி இந்து:

உயர்ஜாதி நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அரசமைப்பு அடிப்படை சட்டத்தை மீறுகிறதா? உள்ளிட்ட கேள்விகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் அளித்திட உச்ச நீதிமன்றம் உத்தரவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

மறைந்த தேவிலால் நினைவாக அரியானாவில் செப் 25இல் நடத்தப்படும் பேரணியில் நிதீஷ் குமார், மம்தா, அகிலேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment