சமத்துவமே...! மண்ணின் மகத்துவம்..!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

சமத்துவமே...! மண்ணின் மகத்துவம்..!!


 இந்தப் 

 பிரபஞ்சம் 

 சம நிலையில் தான் 

 கட்டமைக்கப்

 பட்டிருக்கிறது !


 விண்வெளியில்

 காணும்

 விண்மீன்களும்

 கோள்களும் 

 சமநிலை என்கிற

 அறிவியல்

 கோட்பாட்டை

 அடிப்படையாகக்

 கொண்டே

 இயங்குகின்றன! 


 நாம் 

 வாழும் பூமியும் கூட

 அப்படித்தான்! 


 மக்கள் தொகை

 பெருக்கத்தால்

 பூமியின் எடை 

 கூடி விடுவதில்லை! 


 உலக மக்களே

 அழிந்தாலும் 

 அதன் எடை

 குறைந்து

 விடுவதும் இல்லை! 


 பூமியில் 

 சமநிலையற்ற

 தன்மை

 சிலநேரங்களில்

 இயல்பாகவே

 நிகழ்கிறது! 


 அப்போது தான்

 இயற்கை சீற்றங்கள்

 உருவாகி பூமியை 

 சமநிலைப்

 படுத்துகிறது! 

 

 வளிமண்டல

 காற்றழுத்த

 வேறுபாட்டை

 சமன்செய்யவே 

 காற்று

 கடலிலிருந்து 

 நிலத்தில் வீசுகிறது! 

 அழுத்த 

 வேறுபாடு

 அதிகரிக்கும்போது

 காற்று புயலாக

 உருவெடுத்து வீசி

 சமன் செய்கிறது! 


 பூமிக்குள் 

 அழுத்த வேறுபாடு

 ஏற்பட்டு 

 சமநிலையற்ற

 தன்மை

 உருவாகும்

 போதுதான் அது

 பூகம்பமாக உருவாகி

 பூமியை   

 சமநிலைப்

 படுத்துகிறது! 

 

 மழை, எரிமலை

 பெருவெள்ளம்

 என்பதெல்லாம் 

 இந்த அறிவியல்

 கோட்பாட்டை

 அடிப்படையாகக்

 கொண்டே

 உருவாகிறது! 


 நம் 

 மனம் மட்டும் 

 இதற்கு 

 விதிவிலக்கா

 என்ன? 


 நம் மனம் 

 சமநிலையில்

 இயங்கினாலும் 

 சில நேரங்களில் 

 அச்சம், பயம்,

 பதற்றம்,கவலை,

 கோபம் போன்ற

 உணர்ச்சிகளால் 

 மனம் சமநிலையை

 இழக்கிறது! 


 மன அழுத்தம்

 அதிகரிக்கும்போது

 அதுவே             மனநோயாக

 உருவெடுத்து மனம் 

 பாதிப்படைகிறது! 


 சமூகத்தில்

 சமத்துவமற்ற நிலை

 ஜாதியாலும்,

 மதத்தாலும்,

 சாஸ்திரத்தாலும் ,

 கடவுள்

 கற்பனைகளாலும்,

 பார்ப்பனர்களாலும்

 உருவான

 போதுதான்! 


 பெரியார் 

 இந்த மண்ணில்

 புயலாக, பூகம்பமாக,

 எரிமலையாக

 தோன்றி சமத்துவ

 சமுதாயத்தை

 உருவாக்கினார்!


 சமத்துவத்தை 

 நாடுவது என்பது

 இயல்பானது! 


 சமத்துவமே 

 இந்த மண்ணின்

 மகத்துவம்!! 


 - சிற்பி சேகர்

 பட்டுக்கோட்டை


No comments:

Post a Comment