பி.ஜே.பி. ஆட்சியில் நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.7 விழுக்காடாக சரியும்! - மூடிஸ் கணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

பி.ஜே.பி. ஆட்சியில் நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.7 விழுக்காடாக சரியும்! - மூடிஸ் கணிப்பு

புதுடில்லி, செப்.3- நடப்பாண் டில் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரியும் என பன்னாட்டு தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறு வனம் மேலும் கூறியுள்ள தாவது:

வட்டி விகிதங்கள் அதி கரிப்பு, சமச்சீரற்ற பருவநிலை மற்றும் பன்னாட்டு வளர்ச்சி யில் மந்த நிலை போன்ற காரணங்களால் நடப்பாண் டில் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி முன்பு கணிக் கப்பட்டதைவிட குறையும் என்பது தற்போதைய மதிப் பீட்டின் மூலமாக தெரியவந் துள்ளது.

அதன்படி, முன்பு 8.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தற் போது ஒரு சதவீதம் குறைந்து 7.7சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பது தெரியவந் துள்ளது.

அதேபோன்று, வரும் 2023 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியானது 5.2 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி காணும் என கணிக் கப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் இந்த வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக இருக் கும் என தெரிவிக்கப்பட்டிருந் தது.

கடந்த 2021 இல் 8.3 சத வீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சாதக மற்ற புறக் காரணிகளால் 2022 இல் 7.7 சதவீதமாகவும், 2023 இல் 5.2 சதவீதமாகவும் குறையும் நிலை ஏற்பட்டுள் ளது.

பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து ரிசர்வ் வங்கி பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சமநிலை வளர்ச்சியை உருவாக்கு வதில் பணவீக்க உயர்வானது சவாலானதாகவே உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  7 சதவீதம் சரிந்துள்ள தானது. இறக்குமதிக்கான பணவீக்கத்தை கட்டுப்படுத் துவதில் தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment