தமிழ்நாட்டில் 28 தகைசால் பள்ளிகள் அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

தமிழ்நாட்டில் 28 தகைசால் பள்ளிகள் அரசாணை வெளியீடு

சென்னை,செப்.13- தமிழ்நாட்டில் 28 தகைசால் பள்ளிகளை உருவாக்க ரூ.169 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த 5ஆம் தேதி முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும், இணைய வசதிகளை பயன்படுத்தியும் மாணவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத் தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், அதிநவீன தொழில்நுட்ப டிஜிட்டல் வசதிகளுடன் அமைக்கப்படும் தகைசால் பள்ளிகள் மூலம் அளிக்கப்படும் கல்வியால் மாணவர்களிடம் ஒருங் கிணைந்த வளர்ச்சி ஏற்படும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்தது. அந்தவகையில், ரூ.171 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரத்து 600 திட்ட மதிப்பீட்டில் 28 தகைசால் பள் ளிகள் தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப் பட்டது.

இந்நிலையில், 28 தகைசால் பள்ளிகளை அமைக்க ரூ.169 கோடியே 42 லட்சத்து 36 ஆயிரம் நிதியை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 430 ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. மேலும், ஏற்கெனவே தகைசால் பள்ளிகளாக தேர்வான பள்ளிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி புதுப் பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள் ளது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 62 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள

No comments:

Post a Comment