திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் பெருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் பெருவிழா

திருப்பத்தூர், செப். 28- திராவிட மாத மாதமாம் செப்டம்பர் என்றாலே விழா கொண்டாட்டம் மட்டுமல்ல கொள்கைத் திருவிழா தான். அதுவும் கடந்த ஆண்டு திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நமது மக்கள் முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் 13.9.2022 அன்று வருகின்ற காலங்களில் தந்தை பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் பிறந்த நாள் அரசு சார்பில் "சமூக நீதி' நாளாக கொண்டாடப்படும் என அரசு ஆணை எண். 777 மூலம் அகிலத்திற்கே அறிவித்தார்.

தலைமை செயலகம் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் கைகளை முன்னே உயர்த்தி "பிறப்பால் அனைவரும் சமம்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" சுயமரியாதை, பகுத்தறிவு கூர்மை, சமத்துவம், சகோதரத்துவம். சமதர்மம், மானுடப் பற்று, மனிதாபிமானம், சமூக நீதி, இது போன்ற தந்தை பெரியார் முழக்கங்கள் காதில் விழுந்தால் காதையும் கண்களையும் பொத்திக்கொள்ளும் பார்ப்பான் கூட பூணூலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையை முன்னே உயர்த்தி உறுதிமொழியை ஏற்க வைத்தார் முதல்வர்.

பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்ற பூச்சாண்டி வித்தையில் யார் பெரியார்! அவர் என்னதான் சொன்னார்? அவர் யாருக்கான தலைவர்? என்ற தேடல் இளைஞர் மத்தியில் ஏற்பட்டதின் விளைவாக பெரியாரை இணைய தளத்தில் தேடினர். பெரியார் நூல்களை வாசிக்க தொடங்கினர். ஓ!  இவர் தான் பெரியாரா? இவர் நமக்காகத் தான் பேசியுள்ளார்,  இவரால் தான் நாம் படித்துள்ளோம், இவரால் தான் நாம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளோம் ,பதவி பெற்றுள்ளோம், அதிகாரம் பெற்றுள்ளோம், உரிமை பெற்றுள்ளோம், சுயமரியாதை பெற்றுள்ளோம் - இவர் தான் நம் தலைவர் என்ற உண்மையை இருபால் இளைஞர்களும் உணர தொடங்கி உள்ளனர்.

கடவுள் நம்பிக்கை எனக்குண்டு. ஆனால், அந்த கடவுள்களில் முதன்மையான கடவுள் எம் பெரியார்தான் என உணரத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து பெரியாரை வாசித்தும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உரையினைக் கேட்டும், விடுதலையில் படித்தும் முழுமையாக தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்ட தோழர்கள் ஏராளம் உண்டு.

இப்படி இயக்கமும், பெரியாரும்  கடைக் கோடி மக்களும் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் வெகு ஜன மக்களும் கொண்டாடும் படியான நிலை ஏற்பட்டுள்ளது - மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாகும்.

அந்த எழுச்சியின் விளைவாக தான்..

திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன்  தலைமையில்  சுமார்  230 ஒளிப்படங்கள், 9 இடங்களில் பெரியார் சிலைகள் வைத்து மலர் மாலை  அணிவித்து விழா கோலம் பூண்டது.  25 இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

காலை 6 மணி முதல் மாலை 7.30 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள்.

முதல் நிகழ்வாக.. காலை 6.00 மணியளவில் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் கே. சி. கமலம்மாள் தலைமையில் காமராஜர் அறக்கட்டளை தலைவர்  கணேஷ் மல் மாலை அணி வித்து துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து 20 குழுக்கள் சுமார்  230 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பாக  இரவு 7.30 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்  அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தி. மு. க.  திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும்  திருப்பத் தூர் நகர சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி, ஆவின் பால் தலைவர் மாவட்டச்செயலாளர் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து பறை ஓசை முழங்க ஊர்வலம் புறப் பட்டது. இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகர மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன்,  திருப்பத்தூர் நகர மன்ற மேனாள் தலைவர் அரசு, மாவட்ட துணைச்செயலார் கே. பி. ஆர். ஜோதி ராஜ்  உள்ளிட்ட ஏராள மான  தி.மு.க.பொறுப்பாளர்களும், கழக முன்னோடிகளும், கழக உடன்பிறப்பு களும் ஊர்வலத்தில் பங்கு கொண்டார்கள்.

திராவிடர் கழக தோழர்கள் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையில் மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா,  மாவட்ட இணைச் செயலாளர் பெ. கலைவாணன் மாவட்ட  துணைத்தலைவர் தங்க அசோகன், மண்டல இளை ஞரணி செயலாளர் எ. சிற்றரசு, மாவட்ட துணைச்செயலாளர்  எம்.கே.எஸ்.இளங்கோவன், நகர தலைவர் தோழர் காளிதாஸ், நகர செயலாளர் ஏ. டி. ஜி. இந்திரஜித், சித்தார்த்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட 

ப.க.செயலாளர் வே. அன்பு, மாவட்ட ப. க. அமைப்பாளர் கோ.அன்பு, மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர் தே. பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்   ம. சங்கர்,  மாவட்ட துணைச்செயலார் அஜித், நகர இளைஞரணி செயலாளர் புகழ், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட எழுத்தாளரணி தலைவர் நா.சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி மாவட்ட தலைவர் 

த. சாந்தி, மாவட்ட துணைத் தலைவர் பெ. புரட்சி,மாவட்ட செயலாளர் மகளிரணி இ.வெண்ணிலா, மாவட்ட அமைப் பாளர் மகளிரணி அ. விஜயா,   மாவட்ட மாணவர் கழக தலைவர் அ. உலகின், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் வ.அன்பழகி, மாவட்ட பகுத்தறி வாளர் ஆசிரியர் மாவட்ட தலைவர் கோ. திருப்பதி, மாவட்ட ப. ஆ. செயலாளர் குமரவேல், மாவட்ட ப. ஆ. செயலாளர் குமரவேல், மாவட்ட ப. ஆ. அமைப்பாளர் அ. குமணன், மாவட்ட தொழிலாரணி மாவட்ட தலைவர் எம். ஆனந்தன், மாவட்ட தொழிலாரணி செயலாளர் ஆர். பன்னீர், மாவட்ட தொழிலாரணி மாவட்ட அமைப்பாளர் கே. மோகன், மாவட்ட விடுதலை வாசகர் வட்டம் மாவட்ட அமைப்பாளர் எம். என். அன்பழகன், மாவட்ட வி. வா. வ. துணைத் தலைவர் வ. புரட்சி, மாவட்ட வி. வா. வ. துணை அமைப்பாளர் 

ஆ. ப. செல்வராஜ் கந்திலி ஒன்றியத் தலைவர் கனகராஜ், வாணியம்பாடி நகர தலைவர் அன்புச் சேரன்,  ஆம்பூர் நகர தலைவர் வெற்றி நத்தம்  வே. அன்பு மற்றும் திரளாக கழக தோழர்கள் , அனைத்து கட்சிகளை சார்ந்த முன்னோடிகள் , பொறுப்பாளர்கள், பங்கேற்று பறை ஓசையுடன்   வி. பி. சிங் திருமண மண்டபம் அருகில் உள்ள  தந்தை பெரியார்  திருவுருவச் சிலையை சென்றடைந்தனர்.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்..

நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திருப்பத் தூர் மாவட்ட பொறுப்பாளரான சோலையார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் க.தேவராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப் பினர் அ. நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் 

அ. செ. வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என். கே. ஆர். சூரியகுமார், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்  எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர சேர்மன் சங்கீதா வெங்கடேசன், வாணியம்பாடி நகர சேர்மன் சாரதி  உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மற்றும் தோழமை இயக்கங்களான காங்கிரஸ், காமராஜர் அறக்கட்டளை தலைவர் கணேஷ்மல், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கண்ணதாசன், விடுதலை சிறுத்தை ஊராட்சி ஒன்றிய தலைவர் இரா.சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் முஸ்லிம் லீக், எஸ்டிபிஅய், புரட்சிகர இளைஞர் பேரவை, பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டம், ஆதி தமிழர் பேரவை, ரோட்டரி சங்கத் தலைவர் அருணகிரி , செயலாளர் பாரதி மற்றும் பொறுப்பாளர்கள், கற்பி பயிலகம்,கலாம் உதவும் கரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விஜயா கேலக்சி உரிமையாளர் ம. மதியழகன், மீனாட்சி திரையரங்க உரிமையாளர் சாமி செட்டி மற்றும் அறக்கட்டளை தோழர்கள் என்று அனைத்து இயக்கங்களை சேர்ந்த தோழர்களும் பங்கேற்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார்  20 ஒன்றியங்களில் 100 பெரியார் படங்கள் வைத்து  உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

சோலையார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரி மலை, தோக்கியம், நத்தம், பொம்மிகுப்பம், ஜவ்வாது மலை, ஆதியூர், உடையாமுத்தூர், வெங்களாபுரம், பால்லாங்குப்பம், ஏ. கே. மோட்டூர், கருப்பனூர், மாடப்பள்ளி, கொளதம்பேட்டை,   ஆகிய பகுதிகளில் பெரியார் படங்கள் வைத்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள்.

சோலையார்பேட்டை

தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தலைமையில் சுமார் 30 இடங்களில் பெரியார் படங்களை மலர் மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள் 

திராவிடர் கழகம் சார்பில் கலந்து கொண்டோர்...

சாந்தி, ராஜேந்திரன், நரசிம்மன், தங்க அசோகன், லட்சுமி, பாண்டியன், உலகன், சாப்ளி, இனியன், மதி, செல்வி, நதியா, மனோஜ், வல்லுவன், சசிகலா, அன்பழகி, தென்னவன், தமிழ்வாணன், கருணாநிதி, பாபுஜி, ஆதவன், தேவன், நிர்மலா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தி. மு. க. சார்பில்..

எம். அன்பு  நகரச் செயலாளர், மகேந்திரன் நகர அவைத் தலைவர், வசந்த குமார் நகர துணைச்செயலார், சுரேஷ், பெரியார் தாசன் காவியா விக்டர் நகர மன்றத் தலைவர், இந்திரா பெரியார் தாசன் நகர மன்றத் துணைத்தலைவர், இனியன், சுரேஷ், பிரதிநிதிகள் பாஸ்கர், சம்பத் மற்றும் கழக பொறுப்பாளர்கள், முன்னோடிகள், நகரமன்ற உறுப்பினர்கள். மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த பொறுப்பா ளர்கள், தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ம.தி.மு.க. சார்பில்..

வா. கண்ணதாசன் மதிமுக மாவட்ட செயலாளர் தலைமை யில் கிருஷ்ணன், பரிமளம், சுப்பிரமணி, செந்தில் குமார் ஆகிய தோழர்களும்

அ.தி.மு.க. சார்பில்..

மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி மற்றும் எஸ்.பி.சீனிவாசன் முன்னாள் நகர மன்றத் தலைவர், ஜெய் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.

வாணியம்பாடி நகரம் சார்பில்..

வாணியம்பாடி நகரத்தில் நகர திராவிடர் கழகத் தலைவர் அன்புச் சேரன் தலைமையில் சுமார் 10 இடங்களில் பெரியார் படங்களை வைத்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள். அதில் பங்கேற்று சிறப்பித்தவர்கள்.

நாசீர்கான் மதிமுக நகர செயலாளர், இளங்கோவன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மற்றும் சந்தீப், தனசேகரன், கோபிகா, அரிப்பிரியா, பிரித்தி, பத்மபிரியா, ஜெயசிறீ, சேவக், கீர்த்தி குமார், தீனதயாளன், கவுசிக், வாணிப்ரியா, ஜெயலட்சுமி, தினேஷ்குமார், ஜெயசூர்யா, மற்றும் நகராட்சி கடைநிலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆம்பூர் நகரத்தின் சார்பில்..

சோமலாபுரம் வெற்றி  திராவிடர் கழக நகர செயலாளர் அவர்கள் தலைமையில் சுமார் 20 இடங்களில் பெரியார் படங்களை வைத்து உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்கள் இதில் பங்கேற்றோர். ரவி நகரத்தலைவர் , ஆசிரியர் பன்னீர்செல்வம்  துணைத் தலைவர், பெ. புரட்சி, இன்ப ராஜ், வெங்கடேசன், சாமி இளங்கோ மற்றும் மதிமுக நகரச் செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏலகிரி மலை சார்பில்..

கிரி  ஊராட்சி மன்றத் தலைவர், முனி ரத்தினம், கிருஷ்ண ராஜ் ரோட்டரி சங்கத் தலைவர், சின்ன தம்பி, ராஜேஷ், பொறியாளர் சூரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

நத்தம் ஒன்றியம் சார்பில்..

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே. அன்பு தலைமையில் சுமார் 15 இடங்களில் பெரியார் படம் வைத்து சிறப்பு செய்யப்பட்டது அதில்..

கே.முருகேசன் காக்கங்கரை ஒன்றிய செயலாளர் திமுக, ராஜேந்திரன், வழக்குரைஞர் சரவணன், ராஜா, தனஞ்செயன், வீரமணி மற்றும் பலர்

சுந்தரம் பள்ளி ஒன்றியம் சார்பில்..

ஏ. கருணாநிதி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் தண்டபாணி, டி.குமார், வெங்கடேசன், நேரு, சுப்பிரமணி மற்றும் பலர்..

நத்தம் கிராமத்தில்..

திருமுருகன் ஒன்றிய குழுத் தலைவர், குமார், ஜெயராமன், வி. மகேந்திரன், சதானந்தன், ராஜா, குணசேகரன் மற்றும் பலர்..

நரவந்தம்பட்டி கிராமத்தில்...

ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.கோவிந்தன், திருமுருகன், ஜெயராமன், சின்ன தம்பி, பிரவின் குமார், தமிழ்ச்செல்வி, செம்பரிதி, மற்றும் பலர்...

‌ஜடையனூர் கிராமத்தில் சுமார் பத்து இடங்களில் பெரியார் புகைப்படம்

குமரவேல் மாவட்ட துணைச்செயலார் பக, தலைமையில் வெங்கடேசன், சென்னப்பன், பாண்டியன், பாரதி, ராஜா, மகேந்திரன், அரசு, ராஜீவ் காந்தி, விநாயகம், சக்தி வேல், கோடீஸ்வரன், ராமன், ராஜமாணிக்கம், விநாயகம், சக்தி வேல், கோடீஸ்வரன், ராமன், ராஜமாணிக்கம், தேவன், கண்ணன், பூங்கான், ரவி, முருகன், அன்பு, ராம்குமார், சேகர், தம் ராஜ், சண்முகம், சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நோக்கியம், கெஜநாயக்கன்பட்டி, கந்திலி, பெரியகரம், படந்தோப்பு சமத்துவபுரம், ஆகிய இடங்களில் கனகராஜ் கந்திலி ஒன்றிய கழகம் தலைவர் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் கந்திலி ஒன்றிய மேனாள் சேர்மன் கு. ராஜமாணிக்கம், தோக்கியம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தசீலன், கந்திலி மேற்கு ஓன்றிய செயலாளர் அசோக் குமார் ஏ. க. இளையராஜா, லட்சுமணன், சரவணன், சம்பத் மேனாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கொளதம்பேட்டையில் ஆசிரியர் மணிகண்டன் நடத்தும் பகுத்தறிவாளர் பயிலகம் என்ற இரவுப் பள்ளியில் மாலை 6.00 மணியளவில்  கழக பொறுப்பாளர்கள் பெ. கலைவாணன். ஏ. சிற்றரசு., ஆசிரியர் ரவி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து அங்கே சுமார் 50 குழந்தைகள் சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டாகள்.

அவர்களுக்கு பெரியார் 1000 வினா- விடை புத்தகம் கொடுக்க பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இப்படி தொடர் நிகழ்வாக... திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் திராவிடர் கழக தோழர்கள் மற்றும் அனைத்து கட்சி தோழர்களும், சமூக ஆர்வலர்களும், தொழிலதிபர் களும் கலந்து கொண்டு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும், மரக்கன்றுகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் திரு விழாக்கோலம் பூண்டது.

இந்த நிகழ்வு மாலை 7.30 மணி வரை நடைபெற்றது.

No comments:

Post a Comment