புத்தாக்க தொழில்முனைவோருக்கான தமிழ்நாடு அரசின் நிதியுதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

புத்தாக்க தொழில்முனைவோருக்கான தமிழ்நாடு அரசின் நிதியுதவி

தஞ்சை, ஆக. 14- வளர்ந்து வரும் புத்தாக்க தொழில்முனை வோருக்கு ஏற்படும் ஆரம்ப கட்ட நிதி சிக்கல்களை தவிர்க் கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு டான்சீட் என்ற திட்டத்தின் மூலம் நிதி உதவி செய்து வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் 30 தொழில் முனைவோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாவட்டங்களில் நகரங்கள், கிராமங்கள், சிறு நகரங்கள் என அனைத்து பகுதிகளிலிருந்தும் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, பல கட்ட ஆய்வுகளுக்குப்பின் தரப் படும் இந்த நிதியை கடந்த வாரம் டான்சீட் 3.0 என்ற பெயரில் 31 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். மூன்றாம் கட்ட ஊர்கள் வரிசையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த ‘அறிவியா’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த நிதியுத வியை பெற்றுள்ளது. 900க்கும் அதிகமான விண்ணப்பங் களில் இருந்து இந்த 31 பேரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

கறவை மாடுகளை தாக்கும் மடிநோய்க்கு மூலிகை களிலிருந்து நானோ தொழில்நுட்பம் மூலம் மேல் பூச்சாக பால் மடிகளில் தடவும் வகையில் மருந்து தயாரிக்கும் முயற்சியில் ‘அறிவியா' ஈடுபட்டுள்ளது. 

வல்லம் பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் இயங்கி வரும் இந்த ‘அறிவியா' நிறுவனம் பால்மாடுகள் மற்றும் பால்பண்ணைகளில் பயன்படுத்தும் வகையில் மேலும் பல மருந்துகளை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. 

சென்னையிலிருந்து இயங்கி வரும் வில்குரோ நிறுவனம் ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவியுடன் நடத்தும் தொழில்முடுக்க பயிற்சிக்காக ‘அறிவியா' நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது உற்பத்தி அலகை விரிவாக்கவும், சந்தைப்படுத்தவும் தேவையான நிதியுதவி மற்றும் முதலீட்டாளர்களுக்கான தொடர்பு ஆகியன கிடைக்கப்பெறும். இது போன்ற தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயங்கி வரும் வணிக காப்பகத்தை 9944495659 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

No comments:

Post a Comment