பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

பிற இதழிலிருந்து...

வாழ்க வாழ்க வாழ்கவே...தலைவர் கலைஞர் வாழ்கவே!

மானமிகு முத்தமிழ் அறிஞரின்  சமூகநீதிப் பார்வையும் - செயல்பாடுகளும்! 

மானமிகு முத்தமிழ் அறிஞர் அவர்கள் உடலால் நம்மை விட்டுப் பிரிந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும், அவர் களின் சமூகநீதிச் சிந்தனையையொட்டிய சாதனைகள் சாகா சரிதம் படைத்தவை.

அவர் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், செயல்படுத்தினாலும் அதன் மய்யப் புள்ளி சமூகநீதியாக இருக்கும்.

எடுத்துக்காட்டுகள் சில இதோ:

கலைஞர் கொண்டுவந்த சமூகநீதி மறு மலர்ச்சித் திட்டங்களில் சில...

1. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப் பட்டது.

2.சிப்காட் தொழில் வளாகங்கள் உருவாக்கப் பட்டன.

3. சிட்கோ தொழில் வளாகங்கள் கொண்டு வரப்பட்டன.

4. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழில் நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

5. குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு நகரங்களில் இருந்த குடிசைகள் அனைத்தும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக உருப்பெற்றன. 2010ஆம் ஆண்டு கலைஞர் இலவச வீடு வழங் கும் திட்டம் தமிழ்நாட்டில் எங்குமே குடிசைகள் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் உருவாக்கப் பட்டது.

6. சென்னையில் அதிக அளவு கார் தொழிற் சாலைகளை உருவாக்கி தமிழ்நாட்டின் பொரு ளாதாரத்தில் ஒரு மைல் கல்லை அடைய வைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. அத னால்தான் சென்னை ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுவது என்பது குறிப்பிடத் தக்கது.

7.தமிழ்நாட்டு காவல்துறையினருக்கு ஆணை யம் அமைக்கப்பட்டது.

8. மே 1ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

9. அரசு ஊழியர்கள் உயிர் இழக்கும் பட்சத் தில் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கும் நடைமுறையைக் கலைஞர் கொண்டு வந்தார்.

10.கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிமுகமாக் கப்பட்டது.

11. கிராமப்புற மேம்பாட்டிற்காக ‘அண்ணா மறு மலர்ச்சித் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது.

12. தி.மு.க. கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் நினைவாக  ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்.

13. கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்கு விக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் கலைஞர்.

14. அரசு வேலைவாய்ப்புகளில் பெண் களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

15. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

16. பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப் பிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

17.33% பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக் கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

18. கர்ப்பிணிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.

19. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன.

20. 1989இல் பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகின.

21. ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக லாம்’ என்று அறிவிப்பினை வெளியிட்டவர் கலைஞர்.

22. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டது.  அவர்களுக்கான விடுதிகள் அதிகமாக திறக்கப்பட்டன.

23. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவி கிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

24. அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் ‘பெரியார் நினைவு சமத்துவ புரங்கள்’ தமிழ்நாடெங்கும் உருவாக்கப்பட்டன.

25. இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீட்டினை அளித்தார்.

26. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற் படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தார்.

27. ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டன.

28. கலப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து கவுரவப்படுத்தியது தி.மு.க. அரசு.

29. மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்களும் இன்று மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அயல்நாடுகளில் பல்வேறு பட்டங்களைப் பெற்றும் பணியில் உள்ளனர்.

30. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை நிறுவியவர் கலைஞர்.

31. ‘அரவாணிகள்’ என்று அழைக்கப்பட்ட மூன்றாம் பாலித்தினவர்களுக்கு ‘திருநங்கைகள்’, ‘திருநம்பிகள்’ என்று பெயர் சூட்டி அவர்களுக் கான தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.

32. போக்குவரத்துத் துறையை அரசுடை மையாக்கியது மட்டுமன்றி, அதற்கென துறையை உருவாக்கியவர் கலைஞர்.

33. இவர் ஆட்சியின் கீழ் 12 அரசுப் பல் கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

34. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுத்தார்.

கலைஞர் ‘சட்டமன்றம்’ உள்ளே முதன் முதலில் நுழைந்தபோது நடந்த ஒரு விவாத உரையில்... 

முக்குலத்தோர் சமூகத்தை, ‘குற்றப் பரம்பரையினர்’ என அரசு ஆவணங்களில் குறிப்பிடப் பட்டதை மிக அழகாக நாகரிகமாக ‘சீர் மரபினர்’ என அழகு தமிழில் அரசு ஆவணங்களில் எழுத ஆணையிட்டார். அதுபோல "நொண்டி, ஊமை, குருடன்" என நாகரிகமில்லாமல் அழைத்ததை மாற்றி "மாற்றுத் திறனாளி" என மனிதாபிமானம் பொங்கும் சொற்களில் எழுதி மாற்றியதுதான் கலைஞரின் பேனா.  மூன்றாம் பாலினத்தவரை "அலி" என்றும் "ஒன்பது" என்றும் இந்தப் பாழாய்ப்போன சமூகம் அழைத்துக் கொண்டி ருந்தது. அவர்களை ‘திருநங்கைகள்’, ‘திருநம்பி’ என்றும் எழுதி அவர்களின் மனம் குளிர்வித்தது தான் கலைஞரின் பேனா. இதில் கொடுமை என்னவென்றால், இதனால் பலன் பெற்றவர்களே அறியாமையில் உழன்று கொண்டு, இவையெல் லாம் கலைஞர்தான் செய்தார் என்று உணர்ந்து கொள்ளாமல் மாக்களாக (விலங்குகளாக) இருப்பதுதான்.

சில பிற்போக்காளர்களும், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் இனத் துரோகிகளும் இந்தத் தமிழ்ச் சமூகத்தைப் புரட்சியால் புரட்டிப் போட்ட கலைஞரின் பேனாவைப் பார்த்துக்  குரைக்கின் றனர். அந்தக் கருத்துக் குருடர்களுக்குத் தெரி யாது, “அது பேனா அல்ல, இன ஏதிரிகளின் குடலை உருவிய வாள்” என்று! 

"ஆம். வாள் முனையை விட வலியது பேனா முனை"  என்றொரு பழமொழி  உண்டு. அப்படிப் பட்டதுதான் நம் கலைஞரின் பேனா. இந்தப் பேனா - புரட்சியின் குறியீடு. தன்மானமும் இனமானமும் காத்த இந்தக் கலைஞரின் பேனாவை சென்னையில் மட்டுமல்லாமல் ஒவ் வொரு மாவட்டத்திலும் வானுயரத் தூக்கி நிறுத்தி, நன்றிக் கடன் செலுத்துவதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகம் பெற்ற விடுதலை வர லாற்றை அனைவரும் அறியச் செய்ய வேண்டும். ஆரியனுக்கு அடிமை வேலை செய்த சூத்திர னான. ‘குரங்கு அனுமானுக்கு’ ஆசியா விலேயே மிகப்பெரிய சிலையை ராமேஸ்வரத்தில் நிறுவு வோம் என கொஞ்சமும் கூச்சமில்லாமல் புரா ணப் புளுகர்கள் கொக்கரிக்கும்போது, இந்தச் சமூகத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓய்வின்றி எழுதிய கலைஞரின் பேனாவை சென்னையில் மட்டுமல்லாமல் மாவட்டந்தோறும் உயரத் தூக்கி நிறுத்தி வைக்கத்தான் வேண்டும்.

தமிழர்களின் வாழ்வில் ‘பிறப்பு முதல் இறப்பு வரை’ கலைஞரின் திட்டம்!

கருவுற்ற தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ உதவி, வீடு தேடி மருத்துவப் பரிசோதனை, பெண் குழந்தையாக இருந்தால் 6 வயது முதல் துவக்கப் பள்ளியில் இருந்து கல்லூரி வரை கல்வி இலவசம். கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்து மாதம் 1000 ரூபாய், பட்டதாரிப் பெண்களுக்கு திருமண ஊக்கத்தொகை 50,000 ரூபாய், அரசுப் பணிகளில் முன்னுரிமை, தனியார் தொழிலகங் களில் சிறப்பு இட ஒதுக்கீடு, பணிப் பாதுகாப்போடு அனைத்து பணிச் சலுகைகளும் உண்டு. கணவனை இழந்தவர்களுக்கு உதவித்தொகை, தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை,  60 வயதிற்கு மேல் முதியோர் நலவாரியம். 

மாணவர்களுக்கு, பள்ளியில் சேர்ந்தது முதல் டவுசரில் இருந்து தட்டு, டம்ளர் வரை, 12ஆம் வகுப்பு வரை கட்டணமில்லா பேருந்து சலுகை, தொழிற்கல்விக்குக் கட்டணம் இல்லை.   இதர கலை அறிவியல் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை, வெளி நாடு சென்று பயில/வேலை பார்க்க சிறப்பு ஸ்கா லர்சிப், அரசுப் பணிக்காக இலவச பயிற்சி வகுப்பு.

இப்படியாக தமிழர்களின் நலனில் பிறந்தது முதல் இறப்புவரை அக்கறைகொண்டு திட்டம் தீட்டினார் கலைஞர்.

அந்த வழியில் “திராவிட மாடல்” அரசு - ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு ஏறுநடை போடுகிறது. “திராவிட மாடல்” என்றாலே ஒரு கூட்டத்துக்குப் புரை ஏறுகிறது. நாம் அதனைப் புரிந்துகொண்டு மேலும் “திரா விட மாடலின்” தாக்கத்தை - இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கொண்டு செல்லுவோம்! 

வாழ்க கலைஞர்!  அவர் கண்ட கனவுகள் நனவாகட்டும்!

நன்றி: 'முரசொலி' - 9.8.2022

ஆசிரியர்

 கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment