மதம் + மாடு = உ.பி. பிஜேபி ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

மதம் + மாடு = உ.பி. பிஜேபி ஆட்சி!

உத்தரப்பிரதேச மாநில பிஜேபியின் ஆட்சி - எந்த அளவு மனிதத் தன்மையற்றது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு: அங்கு பிரோசாபாத்தில் உள்ள காவலர் உணவுக் கூடத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று உத்தரப் பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் மனோஜ் குமார் என்பவர் புகார் கூறியிருந்தார். தங்களுக்கு வழங்கப்படும் சப்பாத்தியின் தரம் குறித்து அவர் கண்ணீருடன் கூறியதைப் பார்த்த ஒருவர் அதனை வீடியோவில் பதிவு செய்தார்.

அந்தக் காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தன்னை பணி நீக்கம் செய்யும் முயற்சியாக தனக்கு கட்டாய விடுப்பு கொடுத் துள்ளதாக கூறியிருக்கிறார். ஒரு வார காலம் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் அதற்காக தன்னிடம் விடுப்பு விண்ணப்பம் எழுதி வாங்கியதாகக் கூறியுள்ளார்.

மேலும், தனது புகார் குறித்த காட்சிப் பதிவு வெளியானதில் இருந்து தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் - மனநல மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டி யுள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த காவல் துறை உயரதிகாரி, கடந்த சில மாதங்களில் 15 முறை மனோஜ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை மறுத்த மனோஜ் குமார் தன்னைப் பணியில் இருந்து நீக்குவதற்காக உயரதிகாரிகள் மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சி இது என்று கூறியதோடு, 2022ஆம் ஆண்டு நவம்பர் என்று வருங்கால தேதியை குறிப்பிட்டு தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக போலியாக ஆவணம் தயாரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

19.04.2017 ஆம் ஆண்டு இதே போல் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற முறையில் உணவு பரிமாறப் படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலை தளத்தில் தேஜ்பகதூர் என்ற இராணுவ வீரர் வெளியிட்ட காட்சிப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதைத் தொடர்ந்து தேஜ் பகதூரின் புகார் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருந்தது. நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தேஜ் பகதூர் யாதவ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. ஆதாரமற்ற புகார்களைக் கூறி களங்கம் ஏற்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

 இதே போல் 2018 ஆம் ஆண்டு டில்லியில் விமானப்படையில் பணியாற்றிய வீரர் ஒருவர் தங்களுக்கு வழங்கும் உணவை சாப்பிட முடிய வில்லை, இதை அதிகாரிகள் ஒருமுறை சாப்பிட்டுப் பார்க்கட்டும் என்று சமூகவலைதளத்தில் குறிப் பிட்டிருந்தார். அவரையும் மனநோயாளி என்று முத்திரை குத்தி பணியில் இருந்து நீக்கிவிட்டனர்.

பிஜேபி அரசுக்கு மதவெறி தெரியுமே தவிர, மனித நெறி தெரியாது. மாட்டைப் பற்றிக் கவலைப்படு வார்களே தவிர, மனிதனைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

மாடுகள் அதிலும் பசு மாடுகள் (அவர்கள் மொழியில் கோமாதாக்கள்) எங்கும் சுற்றித் திரியும்; இரவு நேரத்தில் பள்ளிக்கூட  வளாகங்களில் கொண்டு போய் நிறுத்திக் கொள்ளலாம்.

காலையில் பள்ளிக்கு வரும்பிள்ளைகள் - சாணம் நாற்றத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.

மதம், மாடு என்ற இரண்டும் தான் சாமியார் ஆளும் உ.பி.க்கு இருவிழிகள்; மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தமிழ்நாட்டில் கால் பதிக்க வெறி கொண்டு திரியும் விலங்குகளிடம் - தேவை எச்சரிக்கை!

No comments:

Post a Comment