ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிக ளைத் தடுக்க இயலாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், இலவச பொருள்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தது.

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ம.பி. முதலமைச்சர் சவுகான் நீக்கம். உ.பி. முதலமைச்சர் யோகிக்கும் இடமில்லை. பிரதமர் மோடிக்கு சவலாக கட்கரி இருப்பதால் நீக்கம் என தகவல்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

பாஜகவை வீழ்த்திட காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவேன் என யோகேந்திர யாதவ் அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

உ.பி. ஜலாலாபாத் நகரில் ஆம்புலன்ஸ் இல்லாததால், தாயை மாட்டு வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கொடூரம்.

ஒன்றியத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. 2024இல் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் பீகார் மேனாள் முதல மைச்சர் லாலு பிரசாத் சூளுரை.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் குறித்த மசோதாக்கள் அவரது ஒப்புதலுக்காகக் காத்திருக் கும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலப் பல்கலைக்கழகங்கள் மூன்றிற்கு துணைவேந்தர்களை நியமித்து அறிவிப்பு.

தி டெலிகிராப்:

வடகிழக்கின் ஏழு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எட்டு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப் பான நெசோ, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment