'விடுதலை' ஏட்டுக்கு ஆச்சாரியாரின் 'சர்டிபிகேட்!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

'விடுதலை' ஏட்டுக்கு ஆச்சாரியாரின் 'சர்டிபிகேட்!'

முதலமைச்சராக இருந்த ராஜாஜி மதுரையில் பேசியபோது, குறிப்பிட்ட தாவது:

‘‘‘விடுதலை'யின் பிரச்சாரத் தொண்டு வெகுவிரைவில் மாற்றுக் கொள்கை உடையவர்களையும், விழிப்புறச் செய் வதற்கு நல்ல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அதில் வெளிவரும் புராண, சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆஸ் திகப் பிரச்சாரகர்களே, அவ்வாராய்ச்சி யிற் கண்ட உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. உண் மையான பிரச்சாரத் தொண்டுக்கே உயர்வு கிடைக்கும் என்பதும் தெளி வாகிறது.''

மேலும், மதுரையில் பேசிய முதல மைச்சர் ஆச்சாரியார், திராவிடத் தலை வர் பெரியாரைக் குறிப்பிட்டு, அவர்கள் இருவரிடையும் பழங்காலத்திலிருந்தே நிலவி வரும் சிறப்பான நட்பும், பெரியார் அவர்கள் நாட்டுப் பணியில் தீவிர சிரத்தையுடன், முந்தைய நாளிலிருந்தே பாடுபடுவதையும் புகழ்ந்து கூறியிருப்ப துடன், பெரியாரின் பகுத்தறிவுப் பிரச் சாரத்தில் காணும் உண்மைகளை ஒப்புக் கொண்டவகையில், கோவில்களின் புனி தத் தன்மை குறைந்திருப்பதையும், ராமா யணம் ஒரு கட்டுக்கதையென்றே சொல்லவேண்டுமென்றும், ‘தர்மம்' என் பதே மனச் சான்றுக்குச் சரியெனப்படுகிற தாயென்றும், அக்காலத்தில் மக்களிடம் குடிகொண்டிருந்த ஒழுக்கக் குறை களைப்பற்றி கவிவாணரால் சித்தரிக்கப் பட்டதுதான் ராமாயணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

- ‘விடுதலை', 3.3.1953

‘‘‘விடுதலை'யும், ஈ.வெ.ரா.வும் என் அன்பார்ந்த எதிரிகள்'' என்று கூறிய (11.8.1964) ஆச்சாரியார் ராஜாஜியே ‘விடுதலை'யின் பிரச்சாரத் தொண்டு வெற்றி பெற்று வருவதையும், ‘விடு தலை'யில் வெளிவரும் புராண, சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆஸ்திகப் பிரச்சாரகர்களே, அவ் வாராய்ச்சியிற் கண்ட உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் ஒப் புக்கொண்டுள்ளார் என்றால், ‘விடுதலை'யின் வெற்றி மகுடத்திற்கு வேறு சாட்சியமும் வேண்டுமோ!

சிந்தியுங்கள், தோழர்களே!

‘விடுதலை'யை வாங்குங்கள் - நாள்தோறும் படியுங்கள் - படியுங்கள்!

பகுத்தறிவாளர் ஆகுங்கள், ஆகுங்கள்!

உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்!

வாழ்க பெரியார்!

வெல்க ‘விடுதலை!'

No comments:

Post a Comment