இப்படியும் ஒரு மூடத்தனம்! மணமாகாமல் இறந்தவர்கள் ‘மோட்சம்' செல்ல திருமணமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

இப்படியும் ஒரு மூடத்தனம்! மணமாகாமல் இறந்தவர்கள் ‘மோட்சம்' செல்ல திருமணமாம்!

பெங்களூரு, ஆக. 3- இந்து மதத்தின் மூடநம்பிக்கையாக திருமணம், குழந் தைப்பேறு பெற்றவர்கள் மட்டுமே ‘சொர்க்கம்‘ அல்லது மோட்சத்துக்கு செல்லமுடியும் என்று கதையளக்கப்படுகிறது. ஆத்மா என்பதும், மறுபிறவி என்பதும் மோசடி என்று உணராமல் மடமையில் மூழ்கியவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மணமாகாமல் இறந்தவர்களுக்கு ‘ஆத்மா' திருமணம் என்கிற பெயரில் மூடத்தனத்தை நடத்தியுள்ளனர். பெங்களூரு கருநாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கான திருமணம் என்கிற பெயரில் சடங்காக நடத்தியுள்ளனர். 

தட்சின கன்னடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்வு நடந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்குத்தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுகிறது. திருமணம் செய்து வைத்து ‘ஆத்மா'க்களை ‘மோட்சம்' அடைய இந்த ‘பிரேத' திருமணமாம். நிஜ திருமணம் எப்படி நடைபெறுகிறதோ அப்படியேதான் இந்த ‘பிரேத' திருமணங்களும் இரு இருக்கைகள் போடப்பட்டு அதில் மணமகன், மணமகளின் துணிமணிகளை வைத்து சில திருமண சடங்குகள் செய்யப் படுகின்றன. இந்த திருமணத்தில் போடப்பட்ட இருக்கை களில் மணமகளும் மணமகனும் (அவர்களது ஆடைகளு டன் உறவினர்கள்) 7 முறை சுற்ற வேண்டுமாம்!

இந்த திருமண விருந்தில் மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, இட்லி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. இதனை அன்னி அருண் என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அருண் ஜூலை 28 அன்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும், ஒரு வித் தியாசமான காரணத்திற்காக அதைப் பற்றி எழுதுவதா கவும் கூறி உள்ளார்.'

இந்து மதத்தின் பெயரால் திரித்து விடப்படுகின்ற எத னையும் ஏன்,எதற்கு என்று கேள்வி கேட்கவில்லை யென்றால் இதுபோன்று இறந்தவர்களுக்கும் திருமணம் என்கிற பெயரால் மூடச்சடங்கில் மூழ்கிவிடுகிறார்கள் என்பதற்கு கருநாடகாவில் நிகழ்த்தப்படுகின்ற இதுபோன்ற மூடத்தனமே சாட்சியாக உள்ளது எனலாம்.

No comments:

Post a Comment