வீட்டுவசதி, போக்குவரத்து துறை சார்பில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

வீட்டுவசதி, போக்குவரத்து துறை சார்பில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு

சென்னை, ஆக. 4 வீட்டுவசதி மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.32 கோடியில் கட் டப்பட்டுள்ள புதிய கட்டடங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரி யம், தொழில்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினர் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கில் செயல் பட்டு வருகிறது. மேலும் சுற் றுச் சூழலுக்கு உகந்த, நிலை யான வீட்டுவசதி தீர்வுகளை வாரியம் வழங்குகிறது. தற் போது உயரமான அடுக்குமாடி கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலக கட்டடங்கள், மறு கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, திருச்சி சாத்தனூர், மதுரை மாவட்டம் தோப்பூர், உச்சப் பட்டி ஆகிய இடங்களில் ரூ.26.31 கோடி மதிப்பில், வீட்டு வசதி வாரியத்தின் புதிய கோட்ட அலுவலகக் கட்டடம், பிரிவு அலுவலக வளாகம், துணைக் கோள் நகர கோட்ட அலுவலக கட்டடம், விருந்தினர் மாளிகை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக நேற்று (3.8.2022) திறந்து வைத்தார்.போக்குவரத்துத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத் துக்கு ரூ.1 கோடியே 62 லட் சத்து 50 ஆயிரம் செலவில் அலுவலக கட்டடம் கட்டப் பட்டுள்ளது. மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலு வலக கட்டுப்பாட்டில் உள்ள சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு, ரூ.3 கோடியே 72 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய அலுவலக கட்டடம் கட்டப் பட்டுள்ளது.

இந்த அலுவலகங்கள், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர், ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட் டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள் ளது. இந்த கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச் சர்கள் சு.முத்துசாமி, எஸ்.எஸ்.சிவசங்கர்,பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி,வீட்டுவசதித் துறை செயலர் ஹிதேஷ்குமார் எஸ். மக்வானா, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment