‘நிலமளாவிய' கட்டடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

‘நிலமளாவிய' கட்டடம்!

தனது பொறியியல், தொழில்நுட்ப வல்லமையைக் காட்ட சவூதி அரேபியா ஒரு பிரமாண்டமான கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது.

துபாயின் 'அல் புர்ஜ்' வானளாவிய கட்டடம் என்றால், சவூதியின் 'தி லைன்' என்ற இந்தத் திட்டம் 'நிலமளாவிய' கட்டடம். என்னது? நிலமளாவியவா? ஆம், தி லைன் கட்டடத்தின் உயரம் வெறும் அரை கி.மீ., தான். அகலமும் 200 மீட்டர்கள் தான். ஆனால், நீளம் 170 கி.மீ.!தி லைன் கட்டடம் தொடர் நீளக் கட்டடமாக இருக்கும். ஆனால், அதன் அடுக்குகளில் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், ஏன், பூங்காக்களும் உருவாக்கப்படும்.

வடமேற்கு சவூதியில், தி லைன் கட்டுமானம் எழும். இதில் 90 லட்சம் பேர் வசிப்பர். இது, தற்போதைய நியூயார்க் நகரத்தின் மக்கள்தொகைக்கு இணையானது. இங்கு மக்களின் வசிப்பிடப் பரப்பளவு 34 சதுர கி.மீ., ஆக இருக்கும்.

No comments:

Post a Comment