60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல்

வழக்குரைஞர் துரை அருண், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து இரண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.4000த்தை வழங்கினார். உடன்: வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் (சென்னை, 24.08.2022).

கடலூரில் விடுதலை சந்தா சேர்ப்பு

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, வழக்குரைஞர் வனராசு செல்வம் அரிசி ஆலை பன்னீர்செல்வம், கடலூர் துறைமுகம் டி.எஸ்.டி பேருந்து உரிமையாளர் தேசிங்குராசன் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் தண்டபாணி, சிவக்குமார், எழில் ஏந்தி ,புலவர் ராவணன், சின்னதுரை ஆகியோரிடம் சந்தாக்களை வழங்கினர். (21.8.2022).

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 'விடுதலை' நாளேட்டிற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் அய்ந்து ஆண்டு சந்தா வழங்கினார் (22.08.2022). குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட மேனாள் தலைவர் எஸ்.கே.அகமது விடுதலை நாளிதழுக்கான சந்தா, எலிசபெத் மகாராணி விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கு.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.  கடலூர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் புலவர் வை.நாத்திக நம்பியிடம் நரையூர் அ.பன்னீர்செல்வம் ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கினார். 

த.மு.மு.க. மாவட்டச்செயலாளர் பைரோஸ் ஓராண்டு விடுதலை சந்தாவை அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமனிடம் வழங்கினார். மாநில அமைப்புச் செயலாளர்  ஊமை.செயராமன் தலைமையில், மண்டலத் தலைவர் அ.தமிழ்செல்வன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி, மாவட்டச்செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது..மாநில இளைஞரணி  துணைச்செயலாளர் மா.செல்லத்துரை, மாவட்ட  இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், விடுதலை வாசகர் வட்டத்தலைவர் க.சின்னராசு, நகர இளைஞரணி தலைவர் கண். இராமச்சந்திரன். நகர இளைஞரணி  அமைப்பாளர் க.அர்ச்சுனன், மாணவர் கழக தோழர்கள் பிரதாப், தென்றல்பிரியன்ஆகியோர் சந்தா சேர்ப்பில் ஈடுபட்டனர். வணிகபெருமக்கள் சந்தா வழங்கினர். தருமபுரி கவுதம் எலட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ஆறுமாத விடுதலை சந்தா வழங்கினார். தருமபுரி வி.அய்.பி. சூட்கேஸ் கடை உரிமையாளர் ஆறுமாத விடுதலை சந்தா வழங்கினார். விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் இரா.பரிமளம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். 

தருமபுரி நகர்மன்ற தி,மு,க, உறுப்பினர் வே.தங்கமணி ஓராண்டு விடுதலை சந்தா, தருமபுரி நிம்மாங்கரை உதயகுமார் ஆறுமாத விடுதலை சந்தா, மணிதநேயமக்கள் கட்சி மாவட்டத்தலைவர் என்.சுபேதார் விடுதலை ஆறுமாத சந்தா, தருமபுரி கிருஷ்ணா இன்ஜினியரிங் உரிமையாளர் கி.முரளிகிருஷ்ணா ஓராண்டு விடுதலை சந்தாவை அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமனிடம் வழங்கினர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  சா.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற விடுதலை சந்தா சேர்ப்பில் அரூர் வேப்பம்பட்டி ஊரகவளர்சித்துறை உதவிப் பொறியாளர் சு. காரல்மார்க்ஸ்  மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.செயராமனிடம் 50 விடுதலைக்கான சந்தா தொகை ரூ.1,00,000த்தை வழங்கினார். தருமபுரி சிவாபுத்தகநிலைய உரிமையாளர் சிவா ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். தருமபுரி த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் எம்.இதாயதுல்லா ஆறுமாத விடுதலை சந்தா வழங்கினார்.  தருமபுரி எச்.பி. சைக்கிள்மார்ட் உரிமையாளர் ஆறு மாத விடுதலை சந்தா வழங்கினார். 

அரூர் சா.இராசேந்திரன் இளவல் பொன்னேரி தொடக்க வேளான்மை கூட்டுறவுச் சங்கத் தலைவர் திமுக பொறுப்பாளர் சா.கிருட்டிணமூர்த்தி. மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமனிடம் இரண்டு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.  திருவள்ளூர் மாவட்டம், கீழ்நல்லாத்தூர்  கிராமத்தைச் சார்ந்த ஆசிரியை துர்காதேவி ஓராண்டு விடுதலை சந்தாவினை  திராவிடர் கழக  மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார். தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் குடந்தை மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்எஸ்.கே.முத்துச்செல்வன் - கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், குடந்தைமாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மண்டல செயலாளர் க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார் திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என். கணேசன், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோரிடம் விடுதலை சந்தாவை வழங்கினார் (25-08-2022).


No comments:

Post a Comment