'விடுதலை'க்கு தொடர் (33 தடவை) ஆதரவு தரும் ஒன்றியம்! "பெரியார் நாடான" உரத்தநாடு - கடைவீதி சந்தா வசூலில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

'விடுதலை'க்கு தொடர் (33 தடவை) ஆதரவு தரும் ஒன்றியம்! "பெரியார் நாடான" உரத்தநாடு - கடைவீதி சந்தா வசூலில்

தமிழர் தலைவர் பாராட்டு!

உரத்தநாட்டில் 21-08-2022 ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் அண்ணா சிலையில் தொடங்கி அரண்மனை கடை தெருவில் சந்தைபேட்டை வரை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடைத்தெருவில் நடந்து சென்று பொதுமக்கள், வணிக பெருமக்கள், முக்கிய பிரமுகர்களிடம் விடுதலைக்கு சந்தா திரட்டினார்.

காலை 9.45 மாணியளவில் உரத்தநாட்டிற்கு வருகைபுரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் தோழர்கள், வணிகபெருமக்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். 

உரத்தநாட்டில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்து, விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தை தொடங்கினார்.  

தமிழர் தலைவர் உரை

இந்நிகழ்வை தொடங்குவதற்கு முன் தமிழர் தலைவர் ஆற்றிய உரை

உங்களைப் பார்த்து நன்றி சொல்வதற்காக தான் இங்கே வந்திருக்கிறோம்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே, அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களே, பேரூராட்சி தலைவர் அவர்களே, ஊராட்சி மன்ற உறுப்பினர் களே, தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் அவர்களே, மாவட்ட செயலாளர் அருணகிரி அவர்களே, ஒன்றிய தலை வர் ஜெகநாதன் அவர்களே, உத்திராபதி அவர்களே, மற்றும் கழகத்தின் பொதுச்செயலாளர் சுறு சுறுப்பாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்து சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திவரக் கூடிய செயல்குமார் என்று அழைக்கப்படகூடிய ஜெயக்குமார் அவர்களே, அருமை நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம், ஒவ்வொரு வருடைய பெயர்களையும் நான் அறிவேன், அனைவரின் பெயரையும் நான் சொன்னால் நீங்கள் வெயிலிலே நின்று கொண்டிருக்கிறீர்கள், நேர நெருக்கடியும் இருக்கிற காரணத் தினால் கூறமுடியவில்லை.

இந்தப் பகுதிக்கு நாங்கள் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து விடுதலைக்கு பேராதரவு தரக்கூடிய பகுதிதான் பெரியார் நாடான உரத்தநாடு. கட்சி வேறுபாடு இல்லாது அனைவரும் விடுதலையின் வாசகர்களாக இருக்கக்கூடிய உங்களைப் பார்த்து நன்றி சொல்வதற்காக தான் இங்கே வந்திருக்கிறோம், மற்ற இடங்களுக்கு செல்வதெல்லாம் சந்தா வசூலிப்பிற்காக என்றால் பெரியார் நாட்டிற்கு உரத்தநாட்டிற்கு வந்து உங்களை சந்திக்கும் பொழுது தனி உற்சாகத்தை நாங்கள் பெறுகிறோம். எவ்வளவு சோர்வு, எவ்வளவு களைப்பு இருந்தாலும் உங்களை பார்க்கும்போது அது மாறிவிடுகிறது. ஏனென்றால் வற்றாத அன்பும் பாசமும் இந்த பகுதியிலே இருக்கிற அத்தனை தோழர்களும் கட்சி வேறு பாடு இல்லாமல் அரசியல் மாறுபாட்டை பற்றி கவலைப்படா மல் தரக்கூடியவர்கள்.

பெரியார் நாட்டிற்கு உண்டு

நான் இங்கு வரும்போது ஒன்றை நினைவுபடுத்திக் கொண்டே வந்தேன். 1999இல் 23 ஆண்டுகளுக்கு முன்னாலே தொடங்கியது உங்களுடைய விடுதலை சந்தா சேர்ப்பு முயற்சி. ஒவ்வொரு ஆண்டும் ஆறுமாத சந்தாக்கள் என்று சொல்லி 2000 சந்தாக்கள் வரையிலே கூட நீங்கள் கொடுத் திருக்கக் கூடிய பெருமை இந்த பெரியார் நாட்டிற்கு உண்டு. 33 தடவை தொடர்ந்து விடுதலைக்கு சந்தா திரட்டி தரக்கூடிய ஒரு ஒன்றியம் உரத்தநாடு ஒன்றியம் தான் என்றால் அது ஒரு பத்திரிக்கை வரலாற்றில் இதுதான் தனிச்சிறப்பு மிக்கது. ஆகவேதான் எங்களுக்கு எந்த பணியாக இருந்தாலும், எவ்வளவு களைப்பு சோர்வு இருந்தாலும், எவ்வளவு நேர நெருக்கடி இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்களை சந்தித்து, மகிழ்ந்து, கலந்துரையாடி நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். அந்த வகையிலே இங்கே சந்தாக்கள் வழங்கிய அத்தனை ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற தலைவர்களே, பொறுப்பாளர்களே அனைத்து தரப்பு ஆதரவாளர்கள், வாசகப்பெருமக்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பான தலைதாழ்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். 

நபர்கள் முக்கியமல்ல 

கொள்கைதான் முக்கியம்

தமிழ்நாட்டில் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் விடுதலை 60,000 என்கிற இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே இது ஒரு அடையாளம் கட்சி பிரச்சாரம் அல்ல. தந்தை பெரியார் அவர்கள் தன்னை பற்றி சொல்லுகிறபோது ஒரு விளக்கத்தை சொல்வார்கள் “என்னை பொறுத்தவரையில் என்றைக்கும் கட்சிக்காரனாக வாழ்ந்ததில்லை கொள்கைக் காரனாகத்தான் வாழ்ந்திருக்கிறேன்” என்று. அந்த கொள்கை காரனாக இருக்கக்கூடிய ஏடுதான் விடுதலை ஏடு. இதற்கு ஒரே ஒரு சின்ன உதாரணம் உரத்தநாடு ஒன்றியத்தைச் சார்ந்த கிராமத்திலே பிறந்து தன்னுடைய உழைப்பினாலே வளர்ந்து ஒரு மாவட்ட கலெக்டராக வரக்கூடிய அளவிற்கு உயர்ந்த ஆர்.எஸ்.மலையப்பன் பிரச்சினை என்றபோது அவருக்கு ஆதரவாக விடுதலையும் தந்தை பெரியாரும் தான் பக்கபலமாக இருந்தது. இத்தனைக்கும் அவரையே நேரில் பார்க்காமல் போராடி அதற்காக விடுதலை ஆசிரியர் அம்மா மணியம்மையார் சிறைசென்றார், அதற்காக தந்தை பெரியார் சிறைத் தண்டனை ஏற்றார். எதற்காக ஒடுக்கப்பட்ட மக்களினு டைய உரிமைக்காக. அன்று முதல் இன்றும் மக்கள் உரிமைக்கு போராடக்கூடிய ஒரு ஏடுதான் விடுதலை. இது ஒரு சின்ன உதாரணம் தான். ரொம்ப நாளைக்கு பிறகு தான் அய்யா துக்கம் விசாரிக்க திருச்சி போனபோது ஓய்வு பெற்ற நிலையில் இருந்த நம்முடைய ஆர்.எஸ்.மலையப்பன் அவர்கள் அன் றைக்குத்தான் தந்தை பெரியாரை நேரில் சந்தித்தார் இவர்தான் மலையப்பன் நீங்கள் எழுதினீர்களே என்று அறிமுகப்படுத்திய பொழுது ஆம் நான்தான் அய்யா அது என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். எனவே நபர்கள் முக்கியமல்ல கொள் கைதான் முக்கியம் அவருடைய நேர்மை தான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விடுதலை அதற்காகத்தான் இருக்கிறது.

மக்கள் உரிமையை பாதுகாக்கின்ற போர்வாள் கேடயம்

 எனவே இது மக்கள் பத்திரிக்கை, தந்தை பெரியார் பத்திரிக்கையை பற்றி சொல்கிற நேரத்தில் ஒரு கருத்தைச் சொன்னார் இந்த ஏடு வர்த்தகமான ஏடு அல்ல, வியாபாரத் துக்காக அல்ல, மற்ற பத்திரிக்கைகள் விளம்பரம், மக்களுக்கு எது சுவையாக இருக்குமோ ஜோதிடம் சினிமா மூடநம்பிக்கை போன்ற செய்திகள் இதையெல்லாம் போட்டு வியாபாரம் செய்வார்கள். இது வியாபார பத்திரிக்கை அல்ல ஆனால் மக்கள் உரிமையை பாதுகாக்கின்ற போர்வாள் கேடயம் என்ற அளவிலே இருக்கும் பத்திரிக்கை. 

தமிழர்கள் இல்லம் என்பதற்கு அடையாளம் என்ன வென்றால் விடுதலை அந்த வீட்டிற்கு வருவது தான் அது தான் தமிழர் இல்லாம் என்று சொன்னவர் தவத்திரு குன்றக் குடி அடிகளார் அவர்கள். அந்த குன்றக்குடி அடிகளாரின் சொல்லை தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு வரியாக நிரூபித்துக் கொண்டிருக்கிற ஒரு ஒன்றியம் இருக்கு என்றால் அது உரத்தநாடு ஒன்றியம்தான். ஏனென்றால் இங்கு தான் இல்லம் தோறும் விடுதலை, உள்ளந்தோறும் பெரியார் என்ற உணர்வு சிறப்பாக இருக்கிறது. ஆகவே உங்களுடைய அன்புக்கு நன்றி, உங்களுடைய சந்தா தொகைக்கும் ஆதரவுக்கும் 33ஆவது முறையாக தரக்கூடிய 60,000 சந்தா சேர்ப்பு இயக்கத்தில் உங்களுடைய பணி இருக்கிறதே அது மறக்க முடியாத கல்வெட்டு என்பதை சொல்லி அதற்காக உழைக்கின்ற உழைத்த ஒத்துழைத்த அத்தனை தோழர்களுக் கும் கட்சி வேறுபாடு இல்லாமல் மாறுபாடில்லாமல் எல் லோருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து பாராட்டுகிறேன். உங்களோடு நானும் நடந்து செல்லுகிறேன். தோழர்களோடு நடந்து செல்வதைவிட மிக முக்கியம் உங்களை எத்தனை முறை சந்தித்தாலும் இதில் உற்சாகம் இருக்குமே தவிர களைப்பு சோர்வு வராது என்பதை தெரிவித்து, உங்கள் அன்பான வரவேற்புக்கும் பேராதரவுக்கும் நன்றி தெரிவித்து உங்களுடைய நம்பிக்கைப்படி விடுதலை தொடர்ந்து உரிமைக்கு போராடும் உரிமைக்கு குரல் கொடுக்கும் உறவுக்கு கை கொடுக்கும் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம் நன்றி என்று உரையாற்றி 60000 விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே வணிகபெருமக்களிடம் கடைத்தெருவில் நேரில் நடந்து சென்று சந்தா சேகரித்தார். 

அப்போது கடைவீதியில் வணிகபெருமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தன்னெழுச்சியாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து தமது அன்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் வண்ணமாக சந்தனமாலைகள் அணிவித்தும், பயனாடை களை அணிவித்தும், பழங்கள் வழங்கியும், சந்தாக்களை வழங்கியும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அன்றைய தினம் உரத்தநாடு கடைவீதியில் 60000 விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு முழங்க மாபெரும் பேராணியாக நடைபெற்றது. 

பங்கேற்றோர்

திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநில பெரியார் வீர விளையாட்டு கழக  செயலாளர் நா.ராமகிருஷ்ணன், மாநில வீதிநாடக கலைக்குழு அமைப் பாளர் பி.பெரியார்நேசன், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார், விடுதலை சந்தா வசூல் குழுத்தலைவர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், வசூல் குழு பொருளாளர் நெடுவை கு.நேரு,  வசூல் குழு துணைத்தலைவர் மா.மதியழகன், இரா.துரைராசு, வசூல் குழு துணைச்செயலாளர் நா.பிரபு, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.ராஜவேல், மாவட்ட இணைச் செயலாளர்  தி.வ.ஞானசிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட விவசாய அணி செயலா ளர் பூவை.இராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் இரா.சுப்ர மணியன்,   தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், திருவோணம் ஒன்றிய செயலாளர் வீர.சிற்றரசு, உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், தஞ்சை மாநகர அமைப் பாளர் தமிழ்ச்செல்வன், நகர துணைச் செயலாளர் வழக்கு ரைஞர் க.மாரிமுத்து,  மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன் பெரியார் பெருந்தொண்டர்கள்  சேதுராயன் குடிக்காடு மா.இராசப்பன், தொண்டராம்பட்டு உத்திராபதி, முக்கரை செல்வராசு, பொறியாளர் நெடுவை ந.நேரு, மா.திரா விடச்செல்வம், கிழக்கு பகுதி செயலாளர் துரை.தன்மானம்,  தெற்கு பகுதி செயலாளர் க.சுடர்வேந்தன் , மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ்,  ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேலு, ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் கோவிலூர் சதீஷ், நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ.இரமேஷ், நகர இளைஞரணி செயலாளர் ச.பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் சாக்ரடீஸ், நகர இளைஞரணி துணைத் தலைவர் கே.எஸ்.பி.சக்கரவர்த்தி, கண்ணை கிழக்கு கிளைக் கழக தலைவர் இரா. செந்தில்குமார், தஞ்சை ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் கு.குட்டிமணி, நெடுவை கு.லெனின், நெடுவை வே.விமல், குலமங்கலம் கு.கணேசன், கக்கரைக்கோட்டை வீர.இளங்கோவன், சந்திர பாபு, ஊரச்சி அ.திருநாவுக்கரசு, ஒக்கநாடு மேலையூர் நா.வீரதமிழன், சு.மணிராசு மா.தென்னகம், வே.சக்திவேல், வீ.ஜோதிநாதன், ஜெ.விஜய், ஆ.ராசாகாந்தி, செ.சாமிநாதன், பெரியார்மணி, மற்றும் தோழர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ராமச்சந்திரன், முன்னாள் உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர், திருவோணம் ஒன்றிய செயலாளர் கே டி மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அஞ்சாநெஞ்சன், உரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மணவழகன், தவ.ஆறு முகம், உரத்தநாடு நகர செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், உரத்தநாடு வார்டு உறுப்பினர் கமலகண்ணன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கலைமணி இளையபாரதி, கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர்   நச்சினார்கினியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஷேக்தாவூத், ஒன்றிய கவுன்சிலர் ஆம்பல் கவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு.கா.கார்த்திக், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேய்க்கரும்பன்கோட்டை ஜெயராமன், ஒக்கநாடு கீழையூர் பாரத், அரசு வழக்கறிஞர் சோலை இளையபாரதி, தெலுங்கு தெரு பாரதி, வழக்குரைஞர் தமிழ்ச்செல்வன், கண்ணத்தங்குடி மேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், குலமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துளசிய்யா, மாவட்ட பிரதிநிதி இளங்குமணன், நெடுவை சூரியமூர்த்தி, உரத்தநாடு வார்டு செயலாளர் முகமது கனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தெலுங்கன் குடிக்காடு மா.பூபதி, பாலாம்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபாபு, ஒன்றிய பொருளாளர் ஜி.பி.ரவிச்சந்திரன், புலவங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாநல்.மெய்க்கப்பன, கக்கரைக்கோட்டை மு.ஊ.ம தலைவர் பால்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இராஜரத்தினம், பொய்யுண்டார்கோட்டை சுதாகர், நெடுவை செந்தமிழ்ச்செல்வன் கண்ணந்தங்குடி மேலையூர் கி.பாஸ்கர் மற்றும் தோழர்கள்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்: ஒன்றிய குழு உறுப்பினர் பாபாநாடு சிவராஜா, உரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் மற்றும் தோழர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: மாவட்ட செயலாளர், உரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் சு.ஆசைத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பஞ்சு.ராமச்சந்திரன், பேரூராட்சி  மன்ற உறுப்பினர்கள் பானுமதி சேகர் சதீஷ், சோமுசெல்வம், சவுந்தர்ராஜன், எல்அய்சி ராஜேந்திரன் மற்றும் தோழர்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் இளையராஜா,

இந்திய கம்யூனிஸ்ட் மார்ச்சிஸ்ட்: ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் ந.சுரேஷ் குமார், கண்ணை வெங்கடேசன் மற்றும் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சிவாஜி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருவோணம் ஒன்றிய செயலாளர் ராதா மணவாளன், காங்கிரஸ் கட்சி கக்கரை சா.மனோகரன் மற்றும் தோழர்கள்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்: மாநில தலைவர் எல்.பழனியப்பன், மாநகரத் தலைவர் அறிவு, மாவட்ட செயலாளர் ம.மணி, ஒன்றிய தலைவர் கு.இரவி, ஒன்றிய செயலாளர் இரா.மகேஸ்வரன் திருவோணம் ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் விசுவலிங்கம்  மற்றும் தோழர்கள்.

தொகுப்பு: நெல்லுப்பட்டு முனைவர் வே.இராஜவேல்


No comments:

Post a Comment