அரியலூர் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் திராவிட விஷ்ணு - விஜயராணி ஆகியோரின் மணவிழாவினை, அமைச்சர் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கா.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில், மாநாட்டு மேடையில் தமிழர் தலைவர் நடத்தி வைத்து, மணமகனின் திராவிட விஷ்ணு என்ற பெயரை, திராவிட வித்து என பெயர் சூட்டினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், சுபா.சந்திரசேகர் மற்றும் தோழர்கள் (அரியலூர், 30.7.2022).
திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் தமிழர் தலைவருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். மாநாட்டு மேடையில் மண்டல இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் - ராதிகா இணையரின் மணவிழாவினை கடந்த 2015 ஆம் ஆண்டில், தமிழர் தலைவரும், அமைச்சர் சிவசங்கர் அவர்களும் பங்கேற்று நடத்தி வைத்தனர். அப்பொழுது, தாலி கட்டி மணவிழா நடைபெற்றது. அப்பொழுது மணமகள் ராதிகா, தாலி என்பது அடிமையின் சின்னம் என்பதை உணர்ந்து, தற்போது தமிழர் தலைவர் முன்னிலையில், தாலியை அகற்றிக்கொள்ள சம்மதம் தெரிவித்ததின் பேரில், அவரது இணையர் செந்தில்குமார், தோழர்களின் பலத்த கரவொலிக்கிடையே தாலியை அகற்றினார். உடன் அவரது குழந்தைகள் யாழ்.இனியன், யாழ்.வேந்தன்.
No comments:
Post a Comment