பிறப்பு இறப்பு இல்லாத கடவுளர்க்கு பிறந்தநாளாம் கோவில் நெரிசலில் சிக்கிய 2 பக்தர்கள் உயிரிழந்த அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

பிறப்பு இறப்பு இல்லாத கடவுளர்க்கு பிறந்தநாளாம் கோவில் நெரிசலில் சிக்கிய 2 பக்தர்கள் உயிரிழந்த அவலம்

மதுரா, ஆக. 20- கிருஷ்ண ஜெயந்தி விழா என்கிற பெயரில் பிறப்பு, இறப்பு ஏதும் இல்லாத கடவுளர் களுக்கு பிறந்த நாள் விழாக் களை மதத்தின் பெயரால் கொண்டாடுவதற்காக கூட்டமாக விழாக்கள் நடத்தப்படுவதும், கோவில் களில் பலரும் கூடுவது மாக உள்ளனர். அங்கிங் கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளான் என் றெல்லாம் கூறிக்கொண்டே, கோவில்களில் வழிபாடு செய்வதற்காக ஏராள மான எண்ணிக்கையில் கூடுவதும், மக்கள் நெரிச லில் சிக்கி உயிரிழப்பது மாக அறியாமை இருளில் மூழ்கியுள்ள மக்களின் நிலை உள்ளது.

வட இந்தியாவில் மது ராவில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. அங்கே கிருஷ் ணன் (ஜெயந்தி) பிறந்த நாள் விழா என்கிற பெயரில் பக்தர்கள் கூடி யுள்ளனர். கிருஷ்ணன் கோவிலில் விசேஷ பூஜை கள் நடத்தப்பட்டனவாம்.

மேலும் கிருஷ்ணன் பிறந்த இடம் மதுரா வீடு-பான்கே பிகாரி என்ற பெயரிலுள்ள கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வையொட்டி நள்ளிரவு நேரத்தில் பூஜை நடத்தப் பட்டது. இதில் பங்கேற்ப தற்காக ஏராளமான பக் தர்கள் திரண்டனர். கோவில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தனர். அப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சில பக்தர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். அப் போது கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் மூச்சுத் திணறி பரி தாபமாக இறந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருததுவமனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர் பாக காவல்துறை விசா ரணை  மேற்கொண்டு உள்ளது.

No comments:

Post a Comment