தமிழ்நாட்டில் மின்திட்டங்கள் : 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

தமிழ்நாட்டில் மின்திட்டங்கள் : 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள்

சென்னை, ஆக.18 சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (17.8.2022) ஆய்வுக் கூட்டத்தை நடத்தி னார். பின்னர், அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி களிலும் புதிய மின்திட்டங்களை செயல்படுத்துவதற்காக தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர் தகுதி நிலையில் உள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தொகுதி வாரியாக செய்யப்பட உள்ள புதிய பணிகளை, குறிப்பாக, துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் உள் ளிட்டவற்றை இந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வர்.

இந்த ஆண்டு ரூ.2,300 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எவ்வித வித்தியாசமும் பாராமல், அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் தொகுதியில் செயல் படுத்த வேண்டிய மின்திட்டங்களைக் கேட்டறிந்து செயல்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.திமுக அரசு பதவியேற்ற கடந்த ஓராண்டில், தமிழ்நாட்டில் முழுவதும் 28,085 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பூமிக்கடியில் மின்சார கேபிள்கள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும். 

இந்த ஆண்டு காற் றாலை, சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதையும் மின்வாரியம் பயன்படுத்தியது.

இவ்வாறு பயன்படுத்தியது இதுவே முதல்முறை. இதன்மூலம், ஒரு யூனிட் மின்சாரம் கூட வீணாகவில்லை என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும்.


No comments:

Post a Comment