21-08-2022 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரத்தநாடு கடைவீதியில் விடுதலை சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

21-08-2022 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரத்தநாடு கடைவீதியில் விடுதலை சந்தா சேர்ப்பு

புலவன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மெய்க்கப்பன் விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார். உரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், நகர இளைஞரணி தலைவர் பே பி.ரெ.ரமேஷ்அவர்கள் ஆசிரியர் அவர்களை அன்புடன் வரவேற்று ரோஜா பூ மாலை அணிவித்து விடுதலை 10 சந்தா ரூ 9,000 வழங்கினார். உரத்தநாடு அண்ணா அரிசி மண்டி உரிமையாளர் ரவி ஆசிரியர் அவர்களை அன்புடன் வரவேற்று விடுதலை சந்தா ரூ1,000 வழங்கினார். கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் ஆசிரியர் அவர்களை அன்புடன் வரவேற்றார்.

உரத்தநாடு வழக்குரைஞர் தமிழ்செல்வன் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.1,000 வழங்கினார். உரத்தநாடு சந்திரதாசன் நகை மாளிகை உரிமையாளர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கினார். உரத்தநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்   பொறுப்பாளர் வெங்கடேசன், ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ1,000 வழங்கினார். உரத்தநாடு திமு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.ரமேஷ்குமார் வழங்கிய விடுதலை சந்தா - ரூ.6000த்தை .ம.மதியழகன் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

குலமங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் துளசி, ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.1,000 வழங்கினார். உரத்தநாடு ராஜபாண்டியன் பாத்திரக் கடை உரிமையாளர் இராமமூர்த்தி  ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ. 2,000 வழங்கினார். உரத்தநாடு சபா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.1,000 வழங்கினார். உரத்தநாடு திருவள்ளுவர் இனிப்பகம் உரிமையாளர் தென்னமநாடு சக்திவேல் ஆசிரியரிடம் விடுதலை சந்தா ரூ,1000 வழங்கினார்.

உரத்த நாடு லூபிகா  ஜுவல்லரி உரிமையாளர் வன்னிப்பட்டு  பிரபாகர் விடுதலை சந்தா ரூ.1000 வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய குழு உறுப்பினர், பேய்க்கரும்பங்கோ டை, ஜெயராமன். ஒரத்தநாடு அப்ப நாயக்கன் பூக்கடை உரிமையாளர் அய்யப்பன் சந்தன மாலை  அணிவித்து வரவேற்றனர். உரத்தநாடுஒன்றிய பக தலைவர் நெடுவை நேரு அவர்களின் பெயரன் அமுத நிலவன்   ரூ1000 சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நெடுவை செந்தமிழ்செல்வன் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.10,000 வழங்கினார். உரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார் - வித்தியா ஆகியோர் 10 விடுதலை சந்தா வழங்கினர். உரத்தநாடு மாதவி ஜுவல்லரி உரிமையாளர் எல். ராஜூ விடுதலை சந்தா ரூ. 1000 ஆசிரியர் அய்யாவிடம் வழங்கினார். உரத்தநாடு திருமலை ஜுவல்லரி சார்பாக ரூ.1000 ஆசிரியர்அய்யாவிடம் வழங்கினார்.

உரத்தநாடு  சத்யா கபிலன் சந்தா தொகை ரூ.1000 வழங்கினார். உரத்தநாடு சின்னப்பா சில்க்ஸ் உரிமையாளர் சி.மாதவன் விடுதலை சந்தாவிற்கு ரூ.1000 வழங்கி சிறப்பு செய்தார். தென்னவை சசி அவரது மகள் சந்தா ரூ.1000 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார்.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாகன ஓட்டுநர் சி. தமிழ்செல்வன்  விடுதலை   சந்தா ரூ.6,000/-த்தையும்,  உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் கோவிலூர் சதீஸ்  விடுதலை சந்தா ரூ.12,000/-த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். கண்ணத்தங்குடி கீழையூர் கிளைக்கழக தலைவர், கவின் மளிகை உரிமையாளர் இரா.செந்தில்குமார்  விடுதலை சந்தா ரூ.1,000/-த்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாகன ஓட்டுநர் அசோக் அவர்களின் சகோதரர் பாலமித்தூர் முருகேசன், ஆசிரியர் அவர்களை அன்புடன் வரவேற்று விடுதலை சந்தா ரூ.5,000/த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment