சென்னை, ஆக.24 தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 328, பெண்கள் 232 என மொத்தம் 560 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 83 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 64,473 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 20,708 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று மட்டும் 670 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 5,732 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 591 ஆகவும், சென்னையில் 88 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.
No comments:
Post a Comment