அக்டோபர் 17இல் அ.இ.காங்கிரஸ் தலைவர் தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

அக்டோபர் 17இல் அ.இ.காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடில்லி, ஆக.29 அக் டோபர் 17இல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளி நாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (28.8.2022) காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இணைய வழியில் நடந்தது. இக் கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக் கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை செப்டம்பர் 22இல் வெளியாகும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24இல் தொடங்கும். செப்டம்பர் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment