இந்தியாவில் புதிதாக 10,725 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

இந்தியாவில் புதிதாக 10,725 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுடில்லி, ஆக.26 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,725 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில நாட்களாக 10ஆயிரத்துக்கு கீழே  சரிந்து வந்த கரோனா மீண்டும் 10 ஆயிரத்தை கடந்தது.  தற்போது, மராட்டியத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,78,920 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு தற்போது 94,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (25.8.2022) மட்டும் தொற்று பாதிப்புகளுக்குள்ளா  36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,488 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 13,084 பேர் குணமடைந்தனர்.  இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,57,385 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் இதுவரை 2,10,82,34,347 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,50,665 பேர்) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும்   நேற்று ஒரே நாளில் 3,92,837 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக வும், இதுவரை மொத்தம் 88,39,16,723 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட் டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டில் நேற்று 542 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக் கப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட் டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந் துள்ளார்.  நேற்று (25.8.2022) புதிதாக 24 ஆயிரத்து 112 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 319 பேரும், பெண்கள் 223 பேரும் உள்பட 542 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் 79 பேர், கோவையில் 68 பேர் உள்பட 35 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தென்காசியில் பாதிப்பு இல்லை இதில் 18 மாவட் டங்களில் 10-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் தென்காசியில் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதிய வர்கள் 74 பேரும் நேற்று கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 5 ஆயிரத்து 496 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென் னையில் 2 ஆயிரத்து 258 பேரும், கோவையில் 538 பேரும், செங்கல்பட்டில் 331 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 

ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் உயிரி ழந்தார். மற்ற மாவட்டங்களில் உயிரி ழப்பு இல்லை. அந்த வகையில் 22 நாள் களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் உயிரி ழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும்  398 பேர் நேற்று மருத்துவமனையில் சிகிச் சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 675 பேர் கரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று குணமடைந்து உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment