‘Pedagogy’ என்பதற்கு முற்றிலும் பொருத்தமானது திராவிடர் இயக்கமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

‘Pedagogy’ என்பதற்கு முற்றிலும் பொருத்தமானது திராவிடர் இயக்கமே!

Pedagogy என்ற சொல் கல்வியோடு மிகவும் ஆழமாக தொடர்பு கொண்டது, 

கற்பித்தல் என்பதற்கு தமிழில், கோட்பாடு மற்றும் நடைமுறை பயிற்சி ஆகியவற்றைக் கையாளும் ஒழுக்கம் ஆகும். 

கல்வியை கற்பித்தல், மாணவர்களின் புரிந்துணர்வு மற்றும் அவர்களின் தேவைகள் மற்றும் தனிப்பட்ட மாணவர்களின் பின்னணியையும் நலன்களையும் கருத்தில் கொண்டு சிறப்பு கவனம் செலுத்துதல், அவர்தம் ஆற்றல் மிக்க நடவடிக்கைக்கு ஊக்கமளித்தல் அவர்களின் தேர்ச்சிமுறைகளை தகுந்த அறிவுறுத்தலுடன் முடிவுகளையும் ஆசிரியர் கற்பிப்பார். 

பகுத்தறிவு அறிவார்ந்த முடிவுகளை தன்னகத்தே கொண்டு ஆய்வு செய்து அதை மாணவர்களுக்குத் தருதல், இதன் மூலம்  அனைவருக்குமான கல்வியை மேம்படுத்துதல் மனித திறனின் பொது வளர்ச்சி, தொழில்சார் கல்வியின்  திறன்களை கற்பித்தல் இதன் மூலம் புதிய சமுதாயத்தை உருவாக்குதல் என்று Pedagogy என்ற சொல்லுக்கு பொருள் வானம் போல் விரிந்துகொண்டே செல்கிறது. 

இந்தச்சொல்லில் இருந்துதான் pedagogue  என்ற சொல்லும் உருவாகியது

 சுருக்கமாகச் சொல்லப்போனால் ‘ஆசிரியர்’; ஆனால் இந்த குறிப்பிட்ட சொல்லுக்குள் பொருந்துபவர்களில் முதலில் வருபவர் கவுதம புத்தர், அடுத்து வருபவர் உலகின் தலைசிறந்த ஆசிரியர்கள் என்று பெயரெடுத்த மூவர் சாக்கிரட்டீசு, பிளேட்டோ, அரிசுட்டாட்டில். 

 இவர்களுக்கு இந்தச்சொல் மிகவும் பொருந்திவரும். 

காரணம் சாக்கிரட்டீசு மாணவர் பிளாட்டோ பின்னாளில் வரலாற்றில் இடம் பெற்ற தலைசிறந்த தத்துவியலாளர்-  ஆசிரியர், பிளாட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில் மாவீரன் அலக்சாண்டரின் வெற்றிகளுக்கு வெறும் படைபலம் மட்டுமல்லாது அறிவுபலமும் வேண்டும் என்று ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அறிவுரை கூறியவர், 

 அலெக்சாண்டர் புருடோத்தமனை எதிர்கொள்ளும் முன்பு, அதுவரை சந்திக்காத ‘யானைப்படையை’ எப்படி எதிர்கொள்வது என்று இன்றைய சிந்து நதி ஓடும் கரையில் இருந்துகொண்டு மாசிடோனியாவில் உள்ள ஆசிரியருக்கு கடிதம் எழுதி அலக்சாண்டர் ஆலோசனை பெற்றார். 

 அலக்சாண்டரிடமிருந்து கடிதம் கொண்டுசெல்லவும் அது அரிஸ்டாட்டில் கைகளில் கிடைத்து அவர் சிந்தித்து பதில் எழுதி மீண்டும் அலக்ஸாண்டர் கைகளில் கிடைக்க குறைந்தது 8 மாத இடைவெளி வரை காத்திருந்தார் அலெக்சாண்டர்.

இதுவே தலைசிறந்த ஆசிரியரை உலகிற்கு அடையாளப் படுத்தியது.  உலகில் Pedagogy  எனும் சொல்லை மிகவும் குறைவானவர்களுக்கே பயன்படுத்தி உள்ளனர். 

அமெரிக்காவில் அதிபர்கள் சிலை உள்ள  Mount Rushmore ரஷ்மோர் மலையை  the pedagogues  என்றும் குறிப்பிடுவார்கள்.

சமூகத் தளத்தில் தமிழ்நாட்டில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக இழிவினை ஒழித்து உணர்வினை வளர்த்து மனிதனுக்கு மனிதனாக வாழும் உரிமையை பெற்றுத்தந்தவர் பேராசான் தந்தை பெரியார். தந்தை பெரியார் வாழ்நாள் வரை இடைவிடாது ஒவ்வொரு நாளும் மக்களைச் சந்தித்து பொதுவெளியில் பிரச்சார பாடம் நடத்தியவர். 

தந்தை பெரியாரை தலை மாணாக்கரான அறிஞர் அண்ணா, தமிழ்நாட்டில் முதல் மாலைநேரப் பேராசிரியர் என பெருமிதத்துடன் போற்றினார்.

தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலாக விளங்கிவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அடைமொழியாக அமையப்பெற்றது ‘ஆசிரியர்’ என்பதே. திராவிட இயக்கத்தின் தொடர் பிரச்சாரம், கல்வி மறுக்கப்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்கிட வித்திட்டது. 

அமைப்பு அடிப்படையில்  Pedagogy  என்பதற்கு முற்றிலும் பொருத்தமானது திராவிடர் இயக்கமே.      

 - பாணன்


No comments:

Post a Comment