மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி விழா

மயிலாடுதுறை, ஜூலை 27 மயிலாடுதுறையில்அப்துல் கலாம் நினைவு நாளில் ஆரம்பித்து கடந்த ஆறு வருடங்களாக சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு தினசரி காலை உணவு வழங்கிவரும் ஜோதி பவுண்டேஷன் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஏழை-எளிய குடும்பங்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.

அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் - பேனா பென்சில்கள் வழங்கி கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் மாணவ - மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி மண்வளம் நீர்வளம் இயற்கையின் அவசியத்தை எடுத்துரைத்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அஞ்சல்துறை அதிகாரி சி.ராஜா, ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜன்,  தலைவர் ஆர் சேகர்,  செயலாளர் மணிகண்டன்,  Rtn சரவணன், Rtn சத்தியபாலுமற்றும் ஜோதி பவுண்டேசன் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஜோதி பவுண்டேஷன் சேவைகளை பாராட்டினர்.

உலக செயற்கை கருத்தரிப்பு 

மருத்துவ நாள்: விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, ஜூலை 27 -  சென்னையின் முன்னணி பன்முக சிறப்பு  சிகிச்சை மய்யமான  சிம்ஸ் மருத்துவமனை, உலக அய்விஎஃப் தினத்தை ஒரு அங்கமாக பெற்றோர்களுக்கும் மற்றும் சிறார்களுக்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை திங்களன்று (25.7.2022) நடத்தியது. 

குழந்தைப்பேறு என்ற இலக்கை  எட்டுவதற்கான தங்களது உணர்ச்சிப்பூர்வ மான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் மற்றும் தங்களது வாழ்க்கையை அது எப்படி மாற்றியிருக்கிறது என்றும் பெற்றோர்கள்  இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்.  

சிம்ஸ் மருத்துவமனையில் அய்விஎஃப் என்ற செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த 30 குழந்தைகள் பங்கேற்று கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 

சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வரும் மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் அய்விஎஃப் சிகிச்சை மய்யத்தில் மிக நவீன தொழில்நுட்பமும், அனுபவமும், திறனும் மிக்க மருத்துவமும், மேம்பட்ட தீர்வுகளும் கிடைக்கப்பெறுகின்றன.  

குழந்தையி யல் மருத்துவ துறையைச் சேர்ந்த மருத்து வர்களும் மற்றும் அதன் பணியாளர்களும் இதில் பங்கேற்றனர்.  அய்விஎப் சிகிச்சை மய்யத்தின் இயக்கு நர் டாக்டர் கோபிநாத் பேசுகையில்,  கருவுற  இயலாமை என்ற பிரச்சனை எண்ணற்ற தம்பதியரை உணர்வு ரீதியாக பாதிக்கிறது. 

அய்விஎஃப் போன்ற நவீன சிகிச்சை செயல்முறைகள் வழியாக தங்களுக்கென குழந்தை வேண்டுமென்ற விருப்பத்தை பூர்த்தி செய்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment