விடுதலை ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

விடுதலை ஆண்டு சந்தா



காரைக்குடி நகர் மன்றத் தலைவர் சே.முத்து துரை விடுதலை ஓர் ஆண்டு சந்தா வழங்கினார். நிகழ்வில் மாவட்ட செயலாளர் வைகறை, நகர செயலாளர் தி. க. கலைமணி, மண்டல மாணவர் கழக செயலாளர் பிரவீன் முத்துவேல் கலந்து கொண்டனர். 27-07-2022 அன்று ஈரோடுமாநகர தி.மு.க செயலாளர் மு.சுப்பிரமணியம் 20 விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கினார். அருகில் மாநகர தி.மு.க நிர்வாகிகள். 24.07.2022 அன்று தருமபுரி, பி.கொல்லபட்டி பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் நல்.கோபால் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார் வீடுதோறும் விடுதலை சந்தா சேர்ப்பு களப்பணியில்.. பொதுக்குழு உறுப்பினர்கள் புலவர் இரா.வேட்ராயன், இ.மாதன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரன், மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், பாப்பாரபட்டி நகர தலைவர் ம.சுந்தரம், ஆகியோர்.

படம் 1: தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் ஓர் ஆண்டுச் சந்தா வழங்கினார். பொன்னமராவதி ஆசிரியர் அ.பெ.பழனிச்சாமி ஓர் ஆண்டுச் சந்தாவும் ஆசிரியர் 

இரா.முருகானந்தம் ஓர் ஆண்டுச் சந்தாவும், பொன்னமராவதி ஒன்றிய தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி ஒன்றியச் செயலாளர் ஆசிரியர் கு.அ.அடைக்கன் அரைஆண்டுச் சந்தாவும் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் 

அ.சரவணனிடம் வழங்கினார்கள். உடன் பகுத்தறிவாளர்கழக மாவட்டச்செயலாளர் இரா.மலர்மன்னன். படம் 2: ம.தி.மு .க புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறியாளர் இரா.பாண்டியன் ஓர்ஆண்டுச் சந்தா வழங்கினார்.  வனச்சரகர் பி.தாமோதரன் ஓர்ஆண்டுச் சந்தாவும், .புதுக்கோட்டை தி.மு.க 21 ஆவது வட்டப் பிரதிநிதி நா.கிருஷ்ணன் (ஆசிரியர் ஓய்வு) ஓர் ஆண்டுச்சந்தாவும், பொன்னமராவதி ஒன்றியம் ஆசிரியர் அ.சின்னத்தம்பி ஓர் ஆண்டுச்சந்தாவும் ஆசிரியர் சு.ப.ஆனந்த் அரை ஆண்டுச் சந்தாவும் பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அ.சரவணனிடம் வழங்கினர். உடன் கழக மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் மற்றும் பொறுப்பாளர்கள்.


திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க.பொருளாளர் பா.அருண் குமார். திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் ஆ.ரந்திர் குமார், முனைவர் த.கருப்பையா, முனைவர் பி.செந்தில் குமார், முனைவர். பா.ஜெயபிரபாகரன், முனைவர் மு.சுதா, முனைவர் சு.பரமசிவன், முனைவர். ஆ.திரு நீலகண்டன், முனைவர். அ.சீத்தாராமன், தி.முத்துஇலக்குமி, க.அழகர்சாமி ஆகியோர் சார்பில் விடுதலை சந்தாக்களை கழக மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகனிடம் பேராசிரியர் நீல கிருஷ்ண பாபு, பேராசிரியர் ஆ.செல்லப்பா ஆகியோர் வழங்கினர்.

தருமபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டி தலைமையாசிரியர் பாலன்,பொ. மல்லாபுரம் உடற்கல்வி ஆசிரியர் அ.தமிழ்தென்றல் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாவை மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், மேனாள் மாவட்ட செயலாளர் த.யாழ்திலீபன் ஆகியோரிடம் வழங்கினர். விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.20,000 அய் குமரிமாவட்ட திமுக பொறுப்பாளரும் நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான வழக்குரைஞர் ரெ.மகேஷ் குமரிமாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் குமரிமாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன். தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்  விஜயகுமார், மாவட்ட தலைவர் நிம்மதி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் ஒன்றிய பிரதிநிதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் முதல் தவணையாக 100 விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்குவதாக மகிழ்வுடன் கூறி புத்தகங்களை பெற்றுக்கொண்டார் (28.7.2022).

காரைக்குடி திமுக நகர செயலாளரும், நகர் மன்றத் துணைத் தலைவருமான நா.குணசேகரன் விடுதலைக்கு ஓர் ஆண்டு சந்தா வழங்கினார்.  உடன் மாவட்ட செயலாளர் வைகறை, நகர செயலாளர் தி. கலைமணி, மண்டல மாணவர் கழக செயலாளர் பிரவீன் முத்துவேல். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதியிடம் இலக்கிய கலைஞர் உதயசூரியன் விடுதலை ஓராண்டு சந்தாவை வழங்கினார். மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்குரைஞர் அன்பு நிதி விடுதலை சந்தாக்களை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் அமைப்புச்செயலாளர் வே.செல்வம், மண்டல தலைவர் நா.முருகேசன் ஆகியோரிடம் வழங்கினார் மதுரை மாநகராட்சி மேனாள் மேயர் செ.இராமச்சந்திரன்ஆண்டு சந்தாவை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் அமைப்பு செயலாளர் வே.செல்வம்நா.முருகேசன் ஆகியோரிடம் வழங்கினர். 27.07.2022 அன்று தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவர்களைச் சந்தித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்அவர்களின் 'உலகுக்கோர் அய்ந்தொழுக்கம்' மற்றும் திரு.இளங்கோ அவர்களின் 'பாரதிதாசனும் நகரத்தூதனும்' ஆகிய புத்தகங்களை அளித்தனர் பொறியாளர் இன்பக்கனி, வழக்குரைஞர் மதிவதனி. மேயரிடமிருந்து அய்ந்து விடுதலை நாளிதழ் ஆண்டு சந்தாக்களைப் (ரூ.10000/-) பெற்றனர். இந்தச் சந்திப்பிற்கு உடனிருந்து உதவியவர் தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத்தையன்.

திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் ஒன்றிய தலைவர் ச.கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின்,.பேரூர் தலைவர் கோ.கவுதமன், துணைத்தலைவர் ஆ.கவுதமன் ஆகியோர்


No comments:

Post a Comment