முஸ்லிம்களிலும் ஆள் பிடிக்கும் பிஜேபி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

முஸ்லிம்களிலும் ஆள் பிடிக்கும் பிஜேபி!

ஜம்மு-காஷ்மீரில் ஏகே 47ரக துப்பாக்கி, வெடி குண்டு உள்ளிட்டவற்றுடன் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப் பட்டார்.  இவர் ஜம்மு மாவட்டத்தின் பிஜேபி சிறுபான்மை யினர் பிரிவு சமூகவலைதள தலைவராக இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 ஜம்மு காஷ்மீரில்  பிடிபட்ட  லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி! பிஜேபியில் தீவிர உறுப்பினராக இருந் துள்ளார். அவர் ஜம்முவில் பிஜேபியின் சிறுபான்மை மோர்ச்சா சமூக வலைதளப் பரப்புரைப் பிரிவின் தலைவராகவும்  இருந்தார்.

ஜம்முவின் ரியாசி பகுதியில் உள்ள கிராம மக்களால் தலிப் ஹுசைன் ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள், பல கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு பின்பு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டனர். 

இருவரில் ஒருவர் புல்வாமாவை சேர்ந்த ஃபைசல் அகமது, இன்னொருவர் ரஜோரியை சேர்ந்த தலிப் ஹூசைன் ஆகியோராவர். இவர்களில் தலிப் ஹூசைன் பிஜேபியில் இணைந்துள்ளவர். இவர் பிஜேபி மூத்த தலைவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். 

கடந்த மே 9 அன்று, ஜம்மு மாநிலத்தில் பிஜேபியின்  அய்.டி. மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளராக ஷாவை பிஜேபி நியமித்தது. தாலிப் ஹுசைன் ஷா, டிராஜ் கோட்ரன்கா, புதான், ரஜோரி மாவட்டம், புதிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜம்முவை சேர்ந்த பிஜேபி சிறுபான்மை மோர்ச்சா அறிக்கை வெளியிட்டு இருந்தது. ஜம்மு தலைவர் ரவீந்திர ரெய்னா உள்ளிட்ட மூத்த பிஜேபி தலைவர் களுடன் ஷா எடுத்துக்கொண்ட பல படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதே போல் ராஜஸ்தானில் கனையாலால் என்ற தையல் கடைக்காரரை வெட்டிக்கொலை செய்தவரில் ஒருவன் பிஜேபி உறுப்பினர்.

2017ஆம் ஆண்டு பஞ்சாப் பதன்கோட் விமான நிலையத் தாக்குதல்; அதன் பிறகான தேடுதல் வேட்டையில் மத்தியப் பிரதேசம் போபால் தொழில் நுட்பப் பிரிவு தலைவர் துருவ் சக்சேனா மற்றும் அவருடன் சேர்ந்த 10 மத்தியப் பிரதேச பிஜேபி பிரமுகர்கள் தீவிர வாதிகளுக்கு ரகசிய தகவல்களைக் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜேபி என்ற மதவாத கட்சி- தங்களின் எதிரி என்று பறைசாற்றிக் கொள்ளும் முகாமிலிருந்தும்கூட ஆட்களைப் பிடிக்கும் ஆபத்தானவர்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா? 

இவ்வளவுக்கும் எந்த ஒரு தேர்தலிலும் சிறு பான்மை மக்களிலிருந்து ஒருவரைக்கூட வேட்பாள ராக பிஜேபி நிறுத்துவதில்லை.

ஆனால் சிறுபான்மையினருக்குள்ளிருந்தே ஆள் பிடித்து, அவர்களுக்குள் மோத விடும் பார்ப்பனத் தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ரவுடிகளைக் கட்சியில் உறுப்பினராக்குவது - முக்கிய பொறுப்புகளைக்கூட அவர்களுக்கு அளிப்பது என்ப தெல்லாம் பாசிஸ்டுகளுக்குக் கை வந்த கலை.

நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? வெளிநாடுகளிலும்கூட பிஜேபி - சங்பரிவார் பற்றி மிகக் கேவலமான கருத்து உருவாகி விட்டது.

இந்தியாவின் மானம் கப்பலேறுகிறது.

எதிர்க்கட்சிகள் மதவாத பிஜேபி எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தால்தான் நாடு தப்பிப் பிழைக்கும்.


No comments:

Post a Comment