பிற இதழிலிருந்து...! உலகுக்கு வழிகாட்டும் 'திராவிட மாடல்!!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

பிற இதழிலிருந்து...! உலகுக்கு வழிகாட்டும் 'திராவிட மாடல்!!'

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2409ஆவது நிகழ்வில் முனைவர் சுதாகர் பிச்சை முத்து ஆற்றிய உரை வருமாறு:

நான் என்னுடைய பயணங்களில் பார்த்த நாடுகளில் உள்ள நடைமுறைகள், இங்கே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஏன் என்றால் இங்கே, திராவிட கட்சிகள்தான் இருக்கின்றன. சமீபத்தில் நாஞ்சில் சம்பத் அவர்களிடத்தில் ஒருவர் கேட்டிருக்கிறார் என்ன திராவிடமாடல், தமிழ்நாடு மாடல் என்று ஏன் வைக்கவில்லை என்று. அவர்  சிம்பிளாக சொன்னார், உனக்கு என்ன பெயர் வைத்தால் எரிச்சல் வருகிறதோ, அதைத்தான் நாங்கள் வைப்போம் என்று. அதுதான் உண்மை .

நான் பார்த்ததில் சில விஷயங்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு சம்பவங்களைத் தொட்டுப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று உயர்கல்வி, இன்னொன்று மகளிர் நலன், இதனை நான் வெளிநாடுகளில் பார்த்தது. மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென் றால், தென் கொரியாவில் ஒரு இருபது முப்பது என்று எல்லா பேராசிரியர்களும் ஒரு பார்ட்டிக்குப் போகிறோம், ஒரே ஒரு பெண் பேராசிரியர் மட்டும் வருகிறார். அவங்க ரொம்ப அமைதியாகவே இருக்காங்க, ஏன் அப்படி இருக்கி றாங்க என்றால், தென் கொரியா முன்னேறிய நாடுகளில் ஒன்று. மிக மோசமான கட்டத்தில் இருந்து, 1970 களுக்குப் பிறகு மிக வேகமாக முன்னேறிய நாடுகளில் அதுவும் ஒன்று. ஆனால் அமெரிக்க காலனியில் இருந்து விடுபட்ட நாடுகளில் அதுவும் ஒன்று.

நான் பார்த்துட்டே இருந்தேன். என்னடா , நம்ம ஊரில் சாப்பிடப் போனால் குறைந்தது ஒரு 10 லேடி புரபசர்கள் வருவாங்க. இங்கே ஒரே ஒரு லேடிதான் வந்திருக்காங்க. அவங்க என் கூடவே தான் இருந்தாங்க. ஒரே ஒரு ஃபாரினராக நான் இருக்கேன். வேறு லேடி புரபசர் யாரும் வரவில்லையா என்று நான் அவர்களிடம் கேட்டேன். ஒட்டு மொத்த டிப்பார்ட்மெண்ட்டில் மட்டுமல்ல இந்த பெரிய பில்டிங்கிலே ஒரே ஒரு லேடி புரபசர் மட்டும் தான் இருக்கு என்றார். எனக்கு பயங்கரமான ஷாக், இப்போவும் சொல்கிறேன் தமிழ் நாட்டில் எந்தக் கல்வி நிலையங்களுக்கு நீங்கள் சென்றாலும் சரி, குறைந்த பட்சம் முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் பெண்களை பேராசிரியர்களாகப் பார்க்க முடி யும். டைரக்டர்களாகப் பார்க்க முடியும், வைஸ்-சேன்சர்களாகக் கூட உங்களால் பார்க்க முடியும். ஆனால் ஃபாரினில் இப்படி உங்களால் பார்க்கவே முடியாது.

இன்னும் சொல்லப்போனால், நான் பணிபுரிகின்ற பிரிட்டனில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்கள்தான் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாக, மிக உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். அவ்வளவு மிக மோசமான ஒரு ஆணாதிக்க சமூகம்தான் இன்னும் அங்கே இருந்துக் கிட்டு இருக்கு. நாம் எத்தனை லட்சக்கணக்கான உமன்ஸ் இன்ஜினியர்களை உருவாக்கிக்கிட்டு இருக்கிறோம். அங்கே எல்லாம் உமன்ஸ் இன்ஜினியர்ஸ் டே என்று இப்போதான் கொண்டாடிக்கிட்டு இருக்கிறார்கள். நான் என் மனைவியிடம் உன் போட்டோ கொடு அங்கே எல்லாம் உமன்ஸ் இன்ஜினியர்ஸ் டே கொண்டாடுகிறார்கள் என் றேன். அப்போ என் மனைவி அங்கே பெரிய பெரிய சயின்டீஸ்ட் எல்லாம் இருப்பாங்க என்றார். அங்கே அப்படியெல்லாம் பெண்கள் சயின்டிஸ்ட் இல்லை, என்று சொல்லி போட்டோ வாங்கிக் கொண்டு போய் உமன்ஸ் இன்ஜினியர்ஸ் டே கொண்டாடினாங்க.

நான் ஆசிரியரிடத்தில் கூறினேன், அப்போ அவர் கூறினார். உலகத்திலேயே மகளிர்க்கென்று பொறியியல் கல்லூரியை துவக்கியது நாம்தான். உலகத்திற்கே முன்னோடியாக பல விஷயங்களை செய்துக்கிட்டு இருக் கிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி இருக்கிறோமா? இதைப் பற்றிய விவாதங்களை தொடர்ச் சியாக வெளியுலகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோமா? அது தான் இன்றையத் தேவை,

அதைத்தான் இன்றைய திராவிட மாடல் புத்தகங்கள் பேசுகின்றன. அதற்கான விதை போடப்பட்டிருக்கிறது. இனிமேல் நாம் இது குறித்து தொடர்ச்சியாக பேச வேண் டும். இனி நாம் பேச வேண்டிய மொழி, பேசவேண்டிய தளம் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து அய்ரோப்பிய மொழிகள் எல்லாவற்றிலும் பெரியார் அவர்களுடைய எழுத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் நீட்சியாக திராவிட மாடலை ஒப்பிட்டு நாம் இன்னும் பேச வேண்டி இருக்கு , எழுத வேண்டி இருக்கு. நாம் அய்ரோப்பிய நாடுகளிடமிருந் தும், மேற்கத்திய நாடுகளிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியதற்கும், பெற்றுக் கொள்ள வேண்டியதற்கும், நாம் கற்றுக் கொடுக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது.

முன்னேறிய நாடுகளில் கூட பெண்கள் இன்னும் உயர்கல்வியில் அதிகம் பேர் படிக்கவில்லை . பிரிட்டனில் 100 மாணவர்கள் ஹயர் செகன்டரி படிக்கிறார்கள், இந்த 100 பேரில் எத்தனை பேர் பட்டதாரிகள், அதாவது பி.எஸ். சி.யோ, பி.ஏ. வோ படிக்கிறார்கள் என்று பார்த்தால் 40 பேர், இந்த 60 பேர் என்ன ஆகின்றனர் என்றே தெரியவில்லை. என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.

தமிழ்நாட்டில் 100 பேர் 95 பேர் ஹயர் எஜூகேசன் போய் விடுவார்கள். பிரிட்டனில் 40 பேர் இந்த டிகிரி முடிச்சுட்டு ஒரு மாஸ்டர் பணிக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று பார்த்தால் 5 பேர் வருவார்கள். சரி ஒரு ஆராய்ச்சிக்கு என்று பார்த்தால் ஒருவர் இல்லை என்றால் அதற்கும் வர மாட்டாங்க.

இங்கே தமிழ்நாடு என்று எடுத்துக் கொண்டால் சமீபத் திய அறிக்கைப்படி இந்தியாவிலேயே அதிக அளவில் பி.எச். டி... மாணவிகளில் அதிகம் நாம்தான். இந்த ரிக்கார்டை உலக அளவில் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் உலகிலேயே லார்ஜிஸ்ட் பி.எச்.டி.ரிஜிஸ்டேசன் செய்த பெண்களில் நாம்தான் முதலில் இருக்கிறோம். இது ஒரு பெரிய சாதனை.

இன்னொன்று தெரிந்து கொள்ளுங்கள், நாம் எப்போ தெல்லாம் சாதிக்கிறோமோ அப்போதெல்லாம் அந்தக் கும்பல் என்ன சொல்லும். மெரீட் என்பார்கள், தரம் குறைந்து போச்சுன்னு சொல்வார்கள்.

எனக்கு இதையெல்லாம் பார்க்கும் போது அந்த முத்து ஞாபகம் வரும். முத்து மாலை மிகவும் அரிய வகைப்பொருள், மற்ற பொருட்களைப் போல் முத்தை பாறையில் இருந்து வெட்டி எடுக்க முடியாது. இந்த முத்துவை கடலுக்கு உள்ளே போய் எடுக்க வேண்டும்.

கலைஞர் என்ன செய்தார். ஒரு சிலிண்டரை கட்டி விட் டார், அவர்கள் கடலுக்குப் போய் அள்ளிக் கிட்டு வந்துவிட்டார்கள். இப்போ என்ன பெரிய முத்துமாலை என்று சொல்வார்கள். உயர் கல்வி போகும் போது என்ன இங்கிலீசே தெரியவில்லை என்று சொல்வார்கள். இங்கிலீஸ் நல்லா தெரிஞ்சுடுச்சுன்னு வைத்துக் கொள்ளுங்களேன், என்னப்பா தமிழில் தப்பு தப்பா எழுதுகிறாய் என்று சொல்வார்கள்.

அதனால்தான் அய்யா சொன்னார் எது மேலையும் பற்று வைக்காதே, எனக்கு தேசாபிமானமுமில்லை, பாஷாபிமானமுமில்லை , மனிதர்களுக்காக பேசு என்று சொன்னார்.

இப்படி திராவிட மாடலின் சிறப்பம்சமே மனிதர் களுக்காக இயங்கக் கூடிய ஒரே மாடல் இதுதான்.

1970 இல் நமது இந்திய சர்வே என்ன சொல்கிறது என்றால் பின் தங்கிய மாநிலங்களில் நாமும் ஒன்றாக அன்று இருந்தோம். 1970, 1980-களில் அப்போது எல்லா மாநிலங் களும் தொழிற்சாலை, தொழிற்சாலை என்று கொட்டிக்கிட்டு இருந்தார்கள்.

நம் ஒரே மாநிலம்தான் கல்வியை முன்னிலைப்படுத்திக் கொண்டு இருந்தோம். அதில் பலன் அடைந்த பல லட்சம், பல கோடி பிள்ளைகளில் நானும் ஒருவன். என் பேருக்கு பின்னால் இருக்கின்ற பிச்சை முத்து ஒரு விவசாயி. என்னுடைய தாயார் ஆசிரியையாக இருக்கலாம். ஆனால் என் தந்தையார் விவசாயி, ஆனால் இன்றைக்கு அவரு டைய பிள்ளை நான் எங்கே இருக்கிறேன். உங்கள் முன் நின்று உங்கள் நீட்சியாக நின்று நான் பேசிக் கொண் டிருக்கிறேன். இதுதான் திராவிட மாடலின் சாதனை. இன்னும் சொல்லப்போனால் நமக்கு எதிரே இருக்கே ஒரு இனம் , அவங்க என்ன செய்வாங்க என்றால், நீங்க உலகமே சுற்றி, நீங்க பெரிய ஆளா ஆயிட்டீங்க, பரவாயில்லையே நீங்கள் எல்லாம் பெரியாளா ஆயிட்டேள், வாங்கோ என்பார்கள். நம் மாடல் அப்படி இல்லை, எல்லோரும் கண்டு கொள்வதற்கு முன்பாக நான் உன்னை கண்டு கொள்கிறேன் என்று சொல்வோம். ரெகக்கனேசன் செய்வதுதான் திராவிட மாடல்.

இன்னும் சொல்லப் போனால் நான் 12 ஆம் வகுப்பில் ஒரு பெயில் ஆன பையன். இவன் எல்லாம் மெரீட் கிடை யாது என்று சொன்னார்கள். கலைஞர் இதைப் பற்றி யெல்லாம் யோசிக்கவில்லை. இவன் இதை முடிச்சுட்ட உடனே ஊர் சுற்றுவான், வீணா போய் விடுவான் என்று யோசித்தவர், டக் கென்று ஒரு சப்ளிமெண்ட் எக்ஸாம் போட்டு, மூன்றே மாதத்தில் எக்ஸாம் வைத்து சர்ட்டிபிகேட் கொடுத்துட்டார். கலைஞர் பல விதமாக யோசிக்கிறார்.

உயர்கல்வியில் முதல் தலைமுறை, முதல் தலை முறை என்று நான் நிறைய இடங்களில் பேசுவேன். நான் நிறைய கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பேசும் போது ஒரு கேள்வி தவறாமல் மாணவ, மாணவிகளிடம் கேட்பேன். இதில் எத்தனை பேர் முதல் தலைமுறையாக காலேஜ் வந்திருக்குறீங்க. ஒரு அய்ம்பது அறுபது பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் எத்தனை பேர் கையைத் தூக்குகிறார்கள் என்பதை எண்ணி முடித்துவிடுவேன். நம்புவீர்களோ மாட்டீர்களோ இப்போ நான் அண்மையில் ஒரு கல்லூரியில் பேசப் போன போது 60 மாணவிகளில் 25 மாணவிகள் முதல் தலைமுறை மாணவிகள், 2022 கம்ப்யூட்டர், அய்.டி. எல்லாம் வந்த கால கட்டத்திலும் கிட்டத் தட்ட 25 சதவிகித மாணவ, மாணவிகள் இன்னும் கல்விக்காக ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வட இந்தியாவினுடன் ஒப்பிடும் போது நாம் எவ்வளவோ பரவாயில்லை.

அந்த 75 மாணவர்கள் எப்படி படித்தார்கள் என்ற கேள்வி எனக்கு எழுந்துகிட்டே இருக்கு. அங்கே தான் திராவிட மாடல் வேலை செய்து இருக்கிறது. கலைஞர் என்ன செய்தார் என்றால், முதல் தலைமுறை பட்டதாரி களுக்கு என்ன செய்கிறார் என்றால் பி.இ., எம்.பி.பி.எஸ். கோர்ஸ்க்கு படிக்க, அந்த முதல் தலைமுறையில் யார் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ தேர்வு எழுதுறாங்களோ அவங்களுக்கு 5 மார்க் கூடுதலாக போடுகிறார். அவர்களை புஷ் செய்து தள்ளுகிறார். நமக்கென்று எதிரி இனம் ஒருத்தர் இருக்கிறாங்களே, என்ன செய்தாலும் கோர்ட்டுக்குப் போய் விடுவாங்க. கலைஞர் என்ன செய்தார் ஒரு ஸ்டேஜில் அதனை அடித்து தள்ளி விடுகிறார். அந்த பில் பாஸ் ஆன வருடத்தில் அதன் மூலம் 479 பேர் அதில் சேர்ந்திருக் கிறார்கள்.

அந்தத் தீர்ப்பு வருவதற்குள் எவ்வளவு பேரை சேர்க்க முடியுமோ அவ்வளவு பேரை சேர்த்துவிடுகிறார். 2000,3000, 4000 என்று அந்த சிஸ்டத்தில் சேர்த்து விடுகிறார். அந்த எதிரி குருப் நீதிமன்றம், ஆங்கிலப் பத்திரிகை என்று எல்லாவற்றிலும் அதனை பற்றி எழுதி அந்த சிஸ்டத்தை காலி செய்து விடுகிறார்கள்.

மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார். நீ அங்கே வைத்தால் தானே காலி செய்கிறாய், இப்போ பார் அடுத்த ஆயுதத்தை எடுக்கிறேன் என்று என்ன செய்கிறார் என்றால் எல்லாருக்கும் பீஸ் கிடையாது என்று சொல்கிறார். முதல் தலைமுறையா படிக்கின்ற யாருக்கும் பீஸ் கிடையாது என்று சொல்கிறார்.

அந்த 5 மதிப்பெண் போட்டார் இல்லையா அதில் ஒரு ப்யூட்டி என்ன தெரியுமா? அவர் அதில் ஜாதி வேறுபாடே பார்க்கவில்லை. ஓ.சி.க்கும், கொடுத்தார். பி.சி.க்கும் கொடுத்தார், எஸ்.சி, எஸ்.டி.க்கும் கொடுத்தார். தந்தை பெரியார் மாதிரி தான் கலைஞர் அவர்களும் யோசித்தார். மனித குலத்திற்காக யோசிக்கிறேன் எல்லோரும் படிக்கச் செல்லுங்கள் என்றார். முதல் தலைமுறையாக படிக்க வருகின்றவர்களுக்கு பீஸ், ஹாஸ்டல் பீஸ் இலவசமாக ஆக்கிவிட்டார். அப்போது மட்டும் கிட்டத்தட்ட எத்தனை மிடில் கிளாஸ் மாணவர்கள் அப்படியே ஜம்ப் அடித்து வருகிறார்கள். எத்தனையோ லட்சக்கணக்கான குடும்பங் களுக்கு இன்ஜினியரிங், டாக்டர் படிக்க வேண்டும் என்று கனவு.

நான் கிராமத்தில் இருந்து படிக்க வரும்போது என் பேட்ஜில் இலவச பஸ் பாஸ் இல்லை . என் கிராமத்தில் இருந்து கரூர் 12 கிலோ மீட்டர், அன்றைக்கு டிக்கெட் 2.50 ரூபாய் சென்று வருவதற்கும் போவதற்கும் என்று அய்ந்து ரூபாய். கன்சக்சன் பாஸ் என்று ஒரு முறை செல்லலாம். அந்த மற்ற ஒரு முறைக்கு பே பண்ண முடியாமல் ட்ராப் செய்த மாணவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இந்த முதல் தலைமுறையில் இப்போது நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார். முதல் தலைமுறையில் இருக்கும் பிள்ளைகள் அனைவரும் படிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இப்படி உலகத்திலே வேறு எந்த அரசாங்கமும் செய்ய முடியாத அத்தனையையும் நம் திராவிட மாடல் அரசு செய்துகிட்டு இருக்கு.

அடுத்ததாக பெண் கல்வி, மகளிர் மேம்பாடு, தேர்தல் அறிக்கையில் நாப்கின் இலவசமாக தருவதாகக் கூறி யிருந்தார். ஸ்காட்லாந்தில் இது இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 100 இல் 22 பெண்களுக்கு நாப்கின் வாங்கு வதற்கான காசு கிடையாது. அமைச்சரா இருக்கிற மா.சு. இருக்கிறார் இல்லையா, அப்போவே மாநகராட்சிப் பள்ளியில் இந்த நாப்கினை இலவசமாகக் கொடுத்து இருக்கிறார். இவை அனைத்தையுமே நாம் ஆவணப் படுத்தாமல் இருந்துவிட்டோம். இப்படி திராவிட சித்தாந் தத்தில் நாம் எல்லாவற்றையும் செய்துட்டோம். விடுதலை போன்ற இதழ்கள் இல்லை என்றால் நமது வரலாற்றின் பல முக்கியமான விஷயங்கள் போய் இருக்கும்.

பிரிட்டிஷ்காரர்கள் என்ன செய்வார்கள் என்றால், தினமும் நடப்பதை அன்றன்றைக்கு நடப்பதை டைரியில் எழுதுவார்கள். அதே மாதிரி அய்யா தொடங்கி வைத்தார் ஆசிரியர் தொடருகிறார். கவிஞர் எடுத்துட்டுப்போகிறார்.

இதற்கடுத்து வேலைவாய்ப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம், நான் சொன்ன மாதிரி உலகம் முழுவதும் பேசிக்கிட்டு இருக்கிறார்கள். இந்த துவக்கப்பள்ளியில் அதாவது ஒன்றாம் வகுப்பில் இருந்து அய்ந்தாம் வகுப்பு வரையில் பெண்களை மட்டுமே ஆசிரியைகளாக அமர்த்த வேண்டும் என்று இப்போ ஈரோப்பில் பேசிக்கிட்டு இருக்கிறார்கள். இதனை எப்போதோ கலைஞர் அசால்டாக செய்துவிட்டார்.

20 வருடத்திற்கு முன்பே ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பெண்கள் தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று சட்டமியற்றியே விட்டார். இதையெல்லாம் நாம் யோசித்தால், பெரியார் சிந்தித்தார், அண்ணாவும் கலைஞரும் செய்து முடித்தார்கள். எனக்கு என்ன ஆச்சரியம் என் றால் இவர்கள் எல்லாம் உலகளவில் யோசித்து செய்தார்களா இல்லை இவைகளையெல்லாம் எப்படி செய்தார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு இது ஆச்சரியமாகத்தான் இருக்கு.

இருபது வருடத்திற்கு முன்பு கலைஞர் செய்ததை இன்றைக்கு ஈரோப்பில் பேசிக்கிட்டு இருக்கிறார்கள். சமீபத்து புள்ளி விவரத்தை எடுத்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரையில் எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் என்றால் 100 ஆண் ஆசிரியர்கள் இருந்தார்கள் என்றால் 288 பெண் ஆசிரியைகள் இருக்கிறார்கள். இதனை யோசித்துப் பாருங்கள். 2.8 மடங்கு அதிகம். இங்கே அள்ளி விடுறாங்களே குஜராத் மாடல் என்று. அங்கே எடுத்துப் பார்த்தால் 100 ஆண் ஆசிரியர்கள் என்றால் அங்கே 60 பெண் ஆசிரியைகள் இருக்கிறார்கள். புள்ளி ஆறு. நீங்கள் இந்த மாடலை பாரு என்று சொல்கிறார்கள்.

இன்னும் இதில் எனக்குப் பிடித்த விஷயம் என்றால், கைம்பெண் ஆதரவற்றவர்களுக்கான திட்டங்கள் என்று ஒரு திட்டம் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். அது என்னவென்றால் மூன்று அல்லது நான்கு விதவைகள் சேர்ந்து தொழில் துவங்குகிறார்கள் என்றால் அதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறார்கள். கண்டிப்பாக இதே போன்ற திட்டங்கள் வரும்போது அவர்கள் சிறு தொழிலாக ஆரம்பித்து பெரிய தொழிலாக மாறும்போது அவர்கள் வாழ்க்கை உயர்ந்து விடும். இதுதான் மிகவும் முக்கியம். ஒரு அரசாங்கம் ஒரு திட்டத்தை யோசிக்கிறது என்றால் அதற்கு பெரிய சித்தாந்தம் இருக்கிறது - அதுதான் பெரியார் போட்டது.

இந்த ஆதரவற்ற விதவைகளுக்கான திட்டங்களை பார்க்கின்ற போது ஒரு விதவைக்கு பதினெட்டு வயது பையன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - நாம் என்ன சொல்வோம், அம்மா உனக்குதான் 18 வயதில் பையன் இருக்கிறானே, அவன் வேலைக்குப் போகலாமே என்றுதான் சொல்வோம். கலைஞர் அதனையெல்லாம் யோசிக்கவில்லை , விதவைகளுக்கு 18 வயது பையன் இருந்தாலும், அவன் வேலைக்கு போய்விடக் கூடாது, அவன் படிக்க வேண்டும் நீ படிக்கப் போ உனக்கு நான் தனியா ஸ்காலர்ஷிப் தரேன், உங்க அம்மாவிற்கு நான் சப்போர்ட் செய்கிறேன். விதவை மகன்களுக்கும், விதவை களுக்கும் உதவி செய்ததுதான் திராவிட மாடல். இன் னொன்று இளம் வயது விதவைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் சென்று படிப்பதற்கான ஒரு கோட்டாவையே கலைஞர் கொண்டு வந்தார். உலகிலேயே இதே மாதிரியான மாடலை நான் எங்கேயுமே பார்க்க வில்லை.

அடுத்து பள்ளிப் படிப்பு. பள்ளிப் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன் என்றால், நாம் ரிப்பேர் செய்ய வேண்டிய இடம் அங்கேதான். இன்றைக்கு பல்வேறு சர்ச்சைகள் பாடப் புத்தகங்கள் குறித்து வந்து கொண்டே இருக்கிறது. ஏன் என்றால் நம் இன எதிரிகள் எங்கே வேலை செய்யும் என்று தெரிந்து கரெக்டான இடத்தில் கொண்டு போய் வேலை செய்துகிட்டு இருக்கிறாங்க.

இந்த பாடப் புத்தகத்தின் ஆலோசனைக் குழுவில் நம் ஆட்கள் இருக்கவேண்டும். நம் ஆட்கள் என்றால் நம்முடைய இன உணர்வு, உள்ளவன் அங்கே இருக்க வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம். நம் வரலாற்றுத் தகவல்களை டாகுமெண்ட் செய்ய வேண்டிய இடத்தில் நாம் இருக்கணும். இதில் இன்னொரு ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்தியா பிரைமரி எஜூகேசன் கொடுக்குற ஜி.டி.பி.யில் 3.1 சதவிகிதம் என்றால், இங்கே நமது முதல்வர் தளபதி ஆட்சியில் 3.6 சதவிகிதம் ஒதுக்கி இருக்கிறார்கள். அதாவது ஏறத்தாழ ரூ.55 ஆயிரம் கோடி நமக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது ஒரு மிகப் பெரிய தொகை. இந்தியாயைக் காட்டிலும் மிகப் பெரிய தொகை. கடந்த ஆட்சியில் 1.8 என்று ஒதுக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதிலேயும் இப்போ டேப்லட் கொடுக்கின்ற ஸ்கீம் எல்லாம் கொண்டு வந்து இருக்கிறோம்.

வெளிநாடுகளில் ஒவ்வொரு குழந்தைகள் கையிலும் டேப்லட் கொடுத்துட்டு வகுப்புகளை இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள். 50 குழந்தைகள் என்றால் 25 குழந்தைகள் நார்மலா படிக்கிறது. 25 குழந்தைகள் டேப்லட் கொடுக்கிறது. கற்றலின் விளைவுகள் நோக்கங்கள் எப்படி இருக்கு என்று பார்க்கும் போது, இந்த டேப்லட் வைத்துப் படிக்கின்ற குழந்தைகளின் அந்த கற்றலுடைய வளர்ச்சி என்று பார்த் தால் மிக அதிகமாக இருக்கு , ஏன் என்று பார்த்தால், நவீன கற்றல் யுக்திகள் என்று சொல்வார்கள், அதனால் இது இப்போ இருக்கிற மாடலுக்கு ஏற்ற மாதிரி மிக மிக ஈசியாக இருக்கிறது. இப்போது இதற்கு தகுந்த மாதிரி கொடுக்கிறது. காலத்திற்கேற்ப இந்த திராவிட மாடல் மாதிரி வேறு எங்கை யும் இதனை பார்க்கவே முடியாது. நான் ஒரு பையனை பார்க்கிறேன். பி.எச்.டி. முடிச்சுட்டு சயின்ட்டிஸ்டாக பாரின் வந்திருக்கிறான், அவன் கையில் இலவச மடிக்கணினி இருக்கு. நான் ஆடிப் போயிட்டேன், ஏப்பா என்ன, இது நம்ம கவர்மெண்ட் கொடுத்ததுதானே என்று கேட்டேன். அண்ணா இதில் தான் நான் படிச்சேன் நல்லா இருக் குண்ணா என்றான். இது மிகப் பெரிய சையின்ட்டிஸ்டு களை உருவாக்கும் திட்டம். உலகத்திலேயே பெண் பிள் ளைகளுக்கு போய் படின்னு சொல்லி சைக்கிள் கொடுத்த ஒரு கண்ட்ரி, கண்ட்ரி எல்லாம் கிடையாதுங்க ஒரே ஸ்டேட் இது தாங்க, இதை விட வேறு என்ன பெரிசா சாதிச்சு விட முடியும். தமிழகத்தில் ரூரல் இடங்கள் தான் 60, 65 சதவிகிதம் அதிகம். ஒரு பெரிய கிராமத்தில் 2000, 2500 வீடுகள் இருக்கும். அதனைச் சுற்றி 100 வீடுகள், 50 வீடு கள் என்று இருக்கும். இந்த பெண் பிள்ளைகள் அங்கே போகணும் என்றால் சுமார் ஏழு எட்டு கிலோ மீட்டர் சென்று படிக்க பேருந்து வசதி இருக்காது. அப்போது தான் நாம் இலவச சைக்கிள் திட்டம் கொண்டு வந்தோம். இன்றைக்கு 63 இலட்சம் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் கொடுக்கி றோம். ஒவ்வொரு வருடமும், இவர்கள் எல்லாம் படித்து வந்தால் வேறு லெவலுக்குச் சென்று விடுவார்கள். என் அம்மா மாதிரி தான், இந்த பிள்ளைகள் படித்து வந்தால் அது 63 இலட்சம் தலைமுறையை உருவாக்கும்.

- இவ்வாறு முனைவர் சுதாகர் பிச்சை முத்து உரையாற்றினார்.

நன்றி: 'முரசொலி', 26.7.2022


No comments:

Post a Comment