கரோனா: தமிழ்நாட்டில் ஊரடங்கு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

கரோனா: தமிழ்நாட்டில் ஊரடங்கு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை.11 தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற் போது 5 சதவீதம் பேர்தான் மருத் துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு என்பதற்கு இடமே இல்லை என மக்கள் நல் வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் முனிசிபல் காலனி மாநகராட்சிப் பள்ளியில்  நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் தற்போது 21,513 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். கரோனா வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருந்தாலும், உயிரி ழப்பை ஏற்படுத்தும் அளவில் இல்லை.

தமிழ்நாட்டில் இதுவரை 11,44,23,194 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,458 இடங் களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 12-14, 15-17 வயதுக்குரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தஞ்சாவூர் மாநகராட்சி 100 சதவீதம் நிறைவு செய்து சாதனைப் படைத்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கு மேல் படுக்கைகள் நிரம்பினால்தான் ஊரடங்கு குறித்து பரிசீலனை செய்யப்படும். ஆனால், தமிழ்நாட்டுல் கரோனாவால் பாதிக்கப் பட்டு தற்போது 5 சதவீதம் பேர்தான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:

Post a Comment