காஞ்சி, செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத் தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

காஞ்சி, செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத் தேர்தல்

சென்னை, ஜூலை 10   தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி, 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங் களுக்கும் என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கியது. 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. பதிவான வாக்குகள் வரும் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.

இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று (9.7.2022) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1022 வாக்குச் சாவடிகளிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடி களிலும் மொத்தம் 1041 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு அனைத்தும் கண் காணிப்பு கேமரா, நுண் பார்வையா ளர்கள், இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் மாவட்ட அளவில் கண்காணிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தது.கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்த லுக்கு வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்டது. இதே போன்று, சென்னையை ஒட்டி யுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங் கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

 வாக்காளர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கையு றைகள் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கரோனா தொற்றால் சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. 

உள்ளாட்சி காலி இடங் களுக்கு நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்றதை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் பூட்டி முத்திரை வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன்  வைக்கப்பட்டது. வருகிற 12ஆம் தேதி  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே முடி வுகள்  அறிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment