அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி; வெளி மாநிலத்தவர்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி; வெளி மாநிலத்தவர்களா?

சென்னை, ஜூலை 19 தமிழ்நாடு அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக் கான சான்றிதழ் சரிபார்ப் பில் வெளி மாநிலத்தவர் கள் பங்கேற்றுள்ளதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல் லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையா ளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு டிச.8 முதல் 13-ஆம் தேதி வரை கணினி வழி தேர்வு நடைபெற்றது. இந்த தேர் வில் தேர்ச்சி பெற்ற 2,148 பேர் சான்றிதழ் சரிபார்ப் புக்கு அழைக்கப்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள டிபிஅய் வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும்நிலையில், அதில் நூற்றுக்கணக்கான வெளி மாநிலத்தவர்களும் பங் கேற்றுள்ளதால் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி நடத் தும் தேர்வுகளில் உள்ளது போல, கட்டாய தமிழ்த் தாள் தேர்வுக்கான அர சாணை, ஆசிரியர் தேர் வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இதுவரை வெளியிடப்படாததால், வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் கடந்த ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரை யாளர் தேர்வில் பங் கேற்றதாகஆசிரியர் தேர்வு  வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆந்திரா, கருநாடகா, குஜராத் போன்ற மாநிலங் களை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற நிலையில், விரைவில் அவர் களுக்கான பணி நியமன ஆணை வழங்கப் பட்டு அவர்கள் பணியில் சேரும் சூழல் ஏற்பட்டுள்ள தாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

No comments:

Post a Comment