பெரியார் மருந்தியல் கல்லூரியில் குற்றவியல் துறையின் மூலம் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரியில் குற்றவியல் துறையின் மூலம் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி, ஜூலை 20  பெரியார் மருந்தியல் கல்லூரியில் சைபர் க்ரைம்(Cyber Crime)  துறையின் மூலம் விழிப்புணர்வு கருத் தரங்கம் 19.07.2022 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை  வரவேற் புரையாற்றினார். அவர் தமது உரையில் இன்றைய சூழலில் இளைய சமுதாயம் குறித்து வெளிவரும் செய்திகளும் நிகழ்வு களும் கல்வியாளர் களையும் சமூக செயல்பாட்டாளர் களையும் கலக்கமடையச் செய்திருக்கிறது. இணையத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கக்கூடிய மாணவ சமு தாயத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கு உண்டு என்றும் பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் மருந்தியல் மட்டுமல்லாது ஒழுக்கத்துடன் கூடிய வாழ்வியலை கடைபிடித்து முழு  கட்டுப்பாட்டுடன் செயலாற்றி குற்றமில் லாத சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

நவீன இணைய வழியிலான திருட்டுகள்

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான  திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தின் காவல்துறை உதவி ஆய்வாளருமான  ஜி. கார்த்திக் பிரியா பேசுகையில், இன்று இருக்கக்கூடிய மாணவர்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் காட்டிய ஏன், எதற்கு, எப்படி என்ற பகுத்தாராயும் சிந்தனை யோடு செயல்பட்டால் குற்றங்கள் நடை பெறுவதை தடுக்கலாம் என்றும் குடும்பங் களில் முதியவர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சார் பாகவும் தொழில்நுட்பத்தை கையாளு பவர்கள் பெரும்பாலும் மாணவ சமு தாயத்தினர்தான். விடலைப்பருவத்தி னரின் அறியாமையினாலும் அலட்சியப் போக்கினாலும்தான் நவீன இணைய வழியிலான திருட்டுக்கள், ஏமாற்று வேலைகள் தினந்தோறும் நடைபெறுகின்றன. 

தேவைகளுக்கு மட்டுமே செல்பேசி..

சாலை களில் இருசக்கர வாகனங்களை பயன் படுத்தும் போது அதிவேகத்துடன் பயணம் செய்வதை மாணவர்கள் முற் றிலும் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் செல்பேசியை பயன்படுத்தினாலே நாட்டில் அதிக குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். மாணவச் செல்வங்கள் செயலிகளை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத் துடன் பயன்படுத்த வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் தன்னைச் சார்ந்த தகவல்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இதுபோன்ற மோசடி நபர் களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் க்ரைம் காவல்நிலையத்தை எந்தநேரமும் அணுகலாம் என்று தெரிவித்தார்.

திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத் தின் காவலர் வி. சங்கர் பேசுகையில், தொழில்நுட்ப செயலிகளான கூகுள் குரோம், யூ டியூப், பேஸ் புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டா கிராம், ஓஎல்எக்ஸ், டிரேடிங் போன்ற அனைத்து செயலிகளையும் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முழு விபரங்களும் பரிமாறப்படும் என்றும் பேஸ்புக் கணக்கில் ஒளிப்படங்களை அதிகம் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் உரையாற்றினார். இதுபோன்ற செயலி களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும்  விழிப்புணர்வோடு மாணவர்கள் திகழவே இதுபோன்ற கருத்தரங்குகள் கல்லூரிகளில் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் உரையாற்றினார். 

பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மன்ற இணைச் செயலர்  அ. ஷமீம்  நன்றியு ரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 300 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பயன டைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment