திராவிடர் கழகத்தின் தூண்களான இளைஞர்களே அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டிற்கு தோள்தட்டி துள்ளி வருக - விடுதலை அறுவடையோடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

திராவிடர் கழகத்தின் தூண்களான இளைஞர்களே அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டிற்கு தோள்தட்டி துள்ளி வருக - விடுதலை அறுவடையோடு!

த.சீ.இளந்திரையன்
கழக மாநில இளைஞரணி செயலாளர்

1927 அக்டோபர் 22, 23 ஆகிய நாட் களில்  பார்ப்பனரல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாடு  சென்னை எஸ். அய்.. திடலில் அமைக்கப்பட்டிருந்த நாயர் பந்தலில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது

2000 மக்கள் வசதியாக இருப்பதற்கு ஏற்றவாறு பந்தல் வடிவமைக்கப்பட்டி ருந்தது. அதை கடந்து உள்ளே வந்தவுடன் பார்ப்பனரல்லாத இளைஞர்கள் சங்கத்தின் அழகான கொடி வானளாவ பறந்து கொண்டிருந்தது. சங்கத்தின் இலக்குகள் மற்றும் சின்னங்கள் அது கொடியில் இடம் பெற்றிருப்பதை தூரத்தில் வரும்போதே கண்களுக்கு நன்றாக தெரியும் வகையில் கொடி பறந்து கொண்டிருந்தது. கொடியின் வண்ணம் கவர்வதாக இருந்தது. உணர்வு களையும், சிந்தனையையும் தூண்டும் இலக்குகள் மட்டும் சின்னங்களுடன் பெரும் உற்சாகம் அளிக்கும் வகையில் பறந்துகொண்டிருந்த அக்கொடி, வந் திருந்த அனைவரது கண்களுக்கும் விருந்தாக இருந்தது.

பார்ப்பனரல்லாத இளைஞர்களே வாருங்கள் - விடுதலை சமத்துவம் சகோ தரத்துவம் முன்னேற்றம் என்ற இலக் குகளை பாருங்கள். நீங்கள் இன்று இருக் கும் இந்த இழிநிலையை கைவிடுங்கள் உங்களுக்கே உரிய உன்னதமான உயர்ந்த இடத்தை எடுங்கள் என்று அக்கொடி அமைதியாக கூறுவதுபோல் உள்ளதாக வருணிக்கப்பட்டது.

நமது இளைஞர்கள் இழிந்தவர்கள் அல்ல :

மாநாட்டில் பனகல் அரசர் பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் கொடியை ஏற்றி வைத்து வரலாற்று சிறப்புரையாற் றினார். நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு உங்களது நாட்டுப் பற்றும் பெருந் தன்மையும் மிக்க சேவை தேவையாக இருக்கிறது. காலம் சென்ற சர்.தியாகராயர் மற்றும் டாக்டர் நாயர் போன்ற மரியா தைக்குரிய நமது தலைவர்களின் அற்புத மான எடுத்துக்காட்டான செயல்களால் ஆர்வமும், தூண்டுதலும் நம்மில் பலர் பெற்றுள்ளோம் என்பதையும். ஒரு நல்ல நோக்கத்திற்காக தியாகம் செய்ய எப் போதும் தயாராக உள்ளோம் என்பதையும் நானறிவேன். மற்ற எவரையும் விட நீங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள், இழிந்த வர்கள் என்ற உணர்வுக்கு சற்றும் இடம் அளிக்காமல் இருக்கும்படி உங்களை நான் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மனிதர் அந்த மனிதர் பாகுபாடு கூடாது வரவேற்புக்குழுத் தலைவர் சுரேந்திர நாத் தனது உரையில்,

நமது பார்ப்பனரல்லாத இளைஞர் சங்கம் என்பது நமது இளைஞர்களின் நலனுக்கு சேவை செய்வது என்ற உண்மையான நோக்கத்துடன் உருவானது என்பதை உங்களுக்கு நான் கூறத் தேவையில்லை. அனைத்துக்கும் மேலாக, அன்பு மற்றும் பரந்த மனப்பான்மை என்ற பண்பு களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் நாம். ஆனால் நமது அன்பு நமது அன்றாட செயல்பாடுகளில் வெளிப்படுவதாக இருக்க வேண்டும். நமது நாடு. நமது சமூகம், நமது அண்டை அயலார் ஆகி யோரிடம் நாம் செலுத்தும் உண்மையான அன்பு நம்மை அச்சமற்றவர்களாகவும், எதையும் உண்மையாகப் பகுத்துக் காண இயன்றவர் களாகவும் ஆவதற்கு உதவ வேண்டும். இந்த மனிதர் அல்லது அந்த மனிதர். இந்தக் குழு அல்லது அந்தக் குழுவின் அதிருப்தியை நாம் ஈட்டி விடுவோமோ என்ற எண்ணம் நமது மனதில் தோன்றி, நமது மக்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்ய விடாமல் நம்மைத் தடுக்கக்கூடாது. பொய், அநீதி ஒழுக்கக்கேடு என்ப வைகளின் அடித்தளத்தின் மீது பயன்நிறைந்த எந்த ஒரு நினைவுச் சின்னத்தையும் உங் களால் எப்போதும் எழுப்பவே முடியாது.

நமது சிந்தனைக்கும். சொற் களுக்கும், செயல்களுக்கும் நேர்மை என்னும் பண்பே எப்போதும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வர்கள் மீதோ அல்லது ஒரு குழுவினர் மீதோ, அவர்கள் போற்றிப் பின்பற்றும் நடைமுறைகள் மீதோ மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், நமது பண்படாத மனம், ஒழுங்கற்ற நாக்கு மற்றும் மோசமான நடத்தை ஆகிய பலவீனங்களை வெளிப் படுத்துவதாகும். ஆனால், தனது நாட் டையும் சமூகத்தையும் சீர்திருத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும். தூய்மையான மனத்துடனும், சிந்தனையுடனும் போர்க் களத்திற்குச் செல்லவும், சமூகம், மதம் என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்தி இழிவைத் தரும் நடை முறைகளின் எண்ணற்ற தீச்செயல்களைப் பற்றிப் பேசவும் தயங்குவது, தன்னலம் மட்டுமல்ல கோழைத்தன மானதுமாகும். அறியாமை மிகுந்த, கல்வியறிவற்ற பொதுமக்களை இழிவாக நடத்துவதற்கு எதிராக குரல் எழுப்பும் துணிவற்றவரும். சுயநலமற்ற மாபெரும் நோக்கத்துக்காக போராடு வதற்கான காலத்தையும், பொருளையும் ஒதுக்கத் தயங்குபவரும், தங்களது சொந்த மக்கள் மற்றும் மற்றவர்களின் மரியா தையைப் பெறவே முடியாது. உண்மை, நீதி, நேர்மை என்பவற்றை விரும்பும் அனைவராலும் அவர் வெறுத்து ஒதுக் கப்படுவார். உண்மையான நாட்டுப் பற் றாளர்கள் அத்தகையவர்களின் நேசத்தை கொள்ளமாட்டார்கள் என்றார்.

சமூக, மதப் பிரிவினைகளோடு பொருளாதரத் தடைகளும் சேர்ந்துள்ளன

மைசூர் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ்கான் அவர்களின் தலைமை உரையிலிருந்து,  இந்தியாவின் அரசியல் பிரச்சினையே ஒரு சமூகப் பிரச் சினையாகும். இவ்வாறு பல்வேறுபட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்திய சமூகத்தை ஒன்றாகக் கொண்டு வந்தால், அப்போது அதன் முக்கியமான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். இந்த மாபெரும் முடிவை எட்டுவது இயலுமா? இந்தக் கேள்வியைத்தான் இளைஞர் களாகிய நீங்கள் இன்று முதல் உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக இந்து, முஸ்லிம் பிரச்சினை உள்ளது. அது அப்படிப்பட்ட ஒரு அர சியல் பிரச்சினையோ. சமூகப் பிரச் சினையோ அல்ல என்பதுதான் எனது கருத்து. இரண்டு மாபெரும் சமூகங் களிடையே நிலவும் கருத்து வேறுபாடு களைப் பற்றியும், அதனால் சிலர் அடைந்து வரும் அரசியல் ஆதாயத்தைப் பற்றியும் நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் உள்ள நியா யத்தைப் பற்றி நான் கேட்கப் போவதில்லை; ஆனால் அதற்கு ஒரு தீர்வு காண்பதற்கான அவசரத் தேவை உள்ளது என்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவே நான் முயல்வேன். அடுத்து வேறு பொருள்கள் பற்றி பேசப் புகும் முன், ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன். இந்தக் கேள்வியைப் பற்றிக் குறை கூறுபவர்கள் யார்? அவர்களை நீங்களே நன்கு அறிவீர்கள் என்பதால் நான் சொல்லத் தேவையில்லை. அரசியலிலும், நிர்வாகத் திலும் தோல்வி அடைந்த மனிதர்களே அவர்கள். அவர்களுக்கு எந்த அறிவு ரையும் கூறத் தேவையில்லை; திருந்துவ தற்கான நிலையை அவர்கள் கடந்து விட்டனர் என்பதால் எந்த அளவுக்கு அறிவுரை அளித்தாலும் அதனால் எந்த விதப் பயனுமிருக்காது. இந்தியாவின் மக்கள் தொகை பலவகை சமூக மக்கள் சேர்ந்து உருவானதாகும். ஏற் கெனவே அவர்களிடையே உள்ள சமூக, மதப் பிரிவினைகளோடு, பொருளாதாரத் தடைகளும் சேர்ந்து கொண்டுள்ளது. அங் குள்ள சுயநலவாதிகள் தங்கள் பங்கிற்கான தடைகளையும் ஏற் படுத்தி வருகின்றனர். ஒற்று மையாக இருப்பதில் உள்ள இன் னல்களைப் பற்றி பேசிக் கொண் டிருப்பது அதற்கான தீர்வைக் காண்பதாகாது. நம் முன் உள்ள கடமையின் சுமை .என்ன என் பதை அறிந்து கொள்வதற்கும், உண்மை நிலையை புரிந்து கொள்வதற்கு வேண்டுமானால் உதவும் என்றார்.

மேலும், இம்மாநாட்டில் ஜாதி ஒழிப்புப் பற்றி தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் சி.நடேசனார், திவான் பகதூர் . தணிகாசலம், ராவ் பகதூர் பி.முனுசாமி ( நாயுடு), டி.வரதராஜுலு (நாயுடு), திருமதி இந்திராணி பாலசுப்பிரமணியம், சர். . இராமசாமி (முதலியார்) உள்ளிட்ட ஏராளமான தலைவர் பெருமக்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இம்மாநாட்டில்தான் சூத்திரர் எனும் பட்டத்தை நீக்குதல், தேவதாசி ஒழிப் புக்கான மசோதாவுக்கு ஆதரவு, பச்சை யப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோரை சேர்த்தல் முதலிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது வரலாற்றுச் சிறப்பாகும்.  மேலும், இம்மாநாடுதான் திரா விடர் இயக்க வரலாற்றில் திருப்புமுனை மாநாடு என போற்றப்பட்டது தோழர்களே.

நமக்கோர் வாய்ப்பு 

1927 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் திராவிட இளைஞர்களின் கல்விக்காக, பெண்களின் முன்னேற்றத் திற்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக நமது முன்னோர்களின் தீர்மானங்களை செயல் திட்டங்களை பார்த்தோம். நீதிக் கட்சியால், தந்தை பெரியாரால், திராவிடர் இயக்கத் தால் பல உரிமைகளைப் பெற்ற நமது இன்றைய நிலை என்ன. 

ஒன்றிய நீட் தேர்வு எனும் பெயரால், புதியக் கல்விக் கொள்கை எனும் பெயரால் நம் மாணவர்களின் கல்வி உரிமையை சூறையாடுகிறது. மதக்கருத்துகளை திணித்து மக்களை பிளவுபடுத்துகிறது. ஏக இந்தியா, எங்கும் இந்தி என்ற ஆதிக்கத்தை கட்டமைக்கிறது. இவற்றுக்கு கெதிராக ஓங்கி ஒலிப்பது யார், மக்களை அணிதிரட்டுவது யார்? யார்? என்றால் மேலே கண்டோமே அந்த தலைவர் பெருமக்களின் ஒற்றை உருவமாக நின்று திராவிடப் பேரினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்றத் தலைவராக திகழ்ந்து நாட்டின் பேராபத்துகளை நாட்டு மக்களிடையே விளக்கி, அரசியல் தலை வர்களை அணிதிரட்டுகிறாரே அந்தத் தலைவர் தான் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

புரட்சி பூமி அரியலூர்:

95 ஆண்டுகளுக்கு முன் திராவிட இளைஞர்களாகிய நமது முன்னோர்களான பார்ப்பனரல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டு எழுச்சியைப் போல வருகின்ற ஜூலை 30ஆம் நாள்  இளை ஞர்களின் நல்வாழ்வுக்கான வழிகாட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி திராவிடர் கழக இளை ஞரணி மாநில மாநாட்டை அரியலூரில் நடத்தவுள்ளோம். பெரியாரின் கருத்துகள் வேரோடி நிற்கும் அரியலூரை காவிப் பாசிசம் கபளீகரம் செய்ய முனைகிறது. அதனை முளையிலேயே கிள்ளி எறிய தான் இம் மாநாடு என தலைவர் அறிவித்திருக்கிறார்.

திருச்சி  புறவழிச்சாலையில்  1000-க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய , கோட்டை போன்ற வடிவுடைய வாணி மண்டபத்தில் காலை நிகழ்ச்சிகள். அதில் கருத்தாழமிக்க கருத்தரங்கம். நிறைவாக நம் தமிழர் தலைவரின் பேருரை. நம்மை மதவாதத்திற்கு எதிரான போருக்கு ஆயத் தமாக்கும் வீர உரை நிகழ்த்த இருக்கிறார்.  4 மணிக்கு அறிவுலகப் பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பேசிய ஒற்றுமைத் திடலான, காமராஜர் திடலில் நமது வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கருஞ்சிறுத்தை காளையர்களின் சீர்மிகு சீருடை அணி வகுப்பை பார்வையிட்டு, பெரியார் சமூகக் காப்பணியின் சீற்றமிகு வணக்கத்தை ஏற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, இலட்சிய முழக்கங்கள் விண்ணதிர முழங்க நகரின் முக்கிய வழியேச் சென்று அறிஞர் அண்ணா சிலை அருகே அமைக்கப் பட்டுள்ள திறந்தவெளி மாநாட்டு திடலை அடைவோம்.

அணிவகுப்பில் கழகத்தால் அறிவிக் கப்பட்டுள்ள கட்டளைகளை சிறப்பாய் செய்து பேரணியை மெருகூட்டும் மாவட் டங்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் சார்பில் அறி விக்கப்பட்ட பரிசுகள் காத்திருக்கின்றன. தோழர்களே முனைப்பு காட்டுங்கள் - பரிசுகளை வெல்லுங்கள்.

 பேரணியின் நிறைவில் திறந்தவெளி மாநாடு. மாநாட்டில் தமிழ்நாட்டரசின் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பின்,  நமது உரிமை களுக்கான போர் முரசை தலைவர் முழங்க இருக்கிறார். எனவே,  தோழமை கொண்ட திராவிடப் பேரினத்து இளைஞர்களே திக்கெட்டும் திசைகளிலிருந்து அரிய லூரை நோக்கியே இருக்கட்டும் நமது சிந்தையும், பயணமும்.

 போருக்குச் செல்லும் வீரனைப் போல் புரட்சிக்கு தயாராகுங்கள் என்றாரே நம் அன்னையார். அதற்கான சூழல் இன்று நிலவுகிறதே. தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் இனமான உரிமைப் போரில் வெல்ல  அரியலூரில் அணிதிரள தோள் தட்டி துள்ளி வருக இளைஞர்களே.

 தலைவரை மகிழச் செய்வோம் : கூட்டங்கள், போராட்டங்கள், மாநாடுகள் நமது அங்கங்கள் என்றால் விடுதலை என்பது நமது மூளை. இயக்கத்தின், இனத்தின் மூளையான விடுதலைக்கு 60 ஆயிரம் சந்தாக்கள் வழங்க தீர்மானித்து விட்டோம். இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு 20 வயது குறைந்திருப்பதாக  ஏப்ரல் 30 அன்று சென்னையில் நடைபெற்ற நமது மாநில இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டத்தில் நமது ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்தார். அவரது வயதை மேலும் மேலும் குறைக்க அரிய லூர் மாநாட்டில் திராவிட இளைஞர்களின் எழுச்சியைக் காட்டுவோம். தலைவரின் வாழ்நாளைக் கூட்டும் அருமருந்தாம் விடுதலை சந்தாவோடு தலைவரை சந்திப் போம்.

No comments:

Post a Comment