அரசு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமா? மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

அரசு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமா? மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

புதுடில்லி, ஜூலை 20- ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரும் பாலான பொதுத் துறை வங்கிகள் 2023-2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாகும் அல்லது அந்த வங்கி களில் அரசின் முதலீடு விளக்கிக் கொள்ளப் படும் என்று வெளியாகியுள்ள தகவல் குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்கள வையில் 18.7.2022 அன்று கேள்வி எழுப்பினார். 

அப்படி தனியார் மயமாகும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதன் விவரம் மற்றும் தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண் ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரினார். 

வங்கிகளின் சேவை தரம் அரசு பொதுத் துறை வங்கிகளின் சேவை தரத்தை விரிவு படுத்த ஒன்றிய அரசு எத்தகைய நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது? குறிப்பாக தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் வங்கிகளின் சேவை தரம் எவ்வாறு உள்ளது? என்றும் ஒன்றிய நிதியமைச்சர் விவரம் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரினார். 

தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமப் பகுதி களில் உள்ள பொதுத்துறை வங்கி களில் தமிழ்மொழியறிவு பெற்றவர்களை நியமிக்க ஒன்றிய அரசு எத்தகைய நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் அளித்த பதில் விவரம் வருமாறு: 

 2021- 2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்து உரை யாற்றியபோது இரண்டு அரசு பொதுத்துறை வங்கிகளை(பி.எஸ்.பி.) தனி யார் மயமாக்கும் எண்ணம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீட்டை விளக்கிக் கொள்ளும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் கொள் கையும் உள்ளது என்றார் அவர்.  

 ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விவரங் களின்படி கடந்த 31-3- 2022 தேதி வரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு பொதுத்துறை நிறுவன கிளைகளின் மொத்த எண்ணிக்கை 6325 ஆகும். இதில் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் எண் ணிக்கை 1871. நகர்ப் பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை 886. பெருநகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இவற் றின் எண் ணிக்கை 3478. தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அரசு வங்கி களின் சேவைத்தரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நட வடிக்கை விவரம்: 

 ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என் பதற்காக அய்ந்து கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்தபட்சம் ஒரு வங்கி அல்லது வங்கிக் கிளையை அல்லது வங்கித் தொடர் பாளர் சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் மக்கள் நிதித் திட்ட பயன்பாட்டை (அனைவருக்கும் வங்கிக் கணக்கு வசதி) 99.97 சதவீதம் அளவிற்கு நடைமுறைப்படுத்த செயல் திட்டம் மேற் கொள்ளப் பட்டுள்ளது. 

 அரசு பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் அகில இந்திய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்திய நாட்டின் எந்தப் பகுதிக்கும் பணி நிமித்தமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற விதி களின்படி பணி நியமனம் செய்யப்படு கிறார்கள். 

அவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவோர் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வங்கி வாடிக்கையாளர் களுடன் தொடர்பு கொள்ள மொழி பயிலரங்குகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் ஏற்பாடு செய்து வருகின்றன. 

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை அளிக்கவும் வங்கிச் சேவையை மேம் படுத்தவும் இத்திட்டம் உதவி கரமாக இருந்து வருகிறது. வங்கிப் பணிக்கு மொழிப் பிரச்சினை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற் காக கீழ்க்கண்ட நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

 1. வங்கிகளின் அனைத்து கவுண்ட்டர் களிலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அத்துடன் தமிழ் மொழிப் பலகைகள் வைக்கப் பட்டிருக்க வேண்டும்.

2. வங்கிச் சேவை தொடர்பான விவரங்கள் மற்றும் சேவைகள் அடங்கிய வசதிகள் குறித்த கையேடுகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 

3. வாடிக்கையாளர் களுக்குத் தேவை யான வங்கிக் கணக்கு துவங்குவதற்கான விண்ணப் பங்கள், பாஸ் புத்தகங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழி களில் அச்சடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 4. குறை தீர்க்கும் விண்ணப்பங்கள் வாடிக்கை யாளர்களுக்கு தமிழில் கிடைக்க வழிவகை செய் யப்பட்டிருக்க வேண்டும். 

5. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மய்யங்களிலும் அதனைப் பயன் படுத்தும் வழிமுறைகள் தமிழில் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

6. மொபைல் பேங்க், இன்டர்நெட் பேங்க் மற்றும் கால் சென்டர்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் பேங்க் வழிமுறைகள் அனைத்தும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் மொழியில் இருத்தல் வேண்டும். 

இவ்வாறு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் பகவத் காரத் பதிலளித்தார். 

No comments:

Post a Comment