தமிழர் தலைவரின் அருமையான நூல் அறிமுகப் பதிவுக்கு - நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

தமிழர் தலைவரின் அருமையான நூல் அறிமுகப் பதிவுக்கு - நன்றி!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்" (தொகுப்பாசிரியர்: ப.பா.ரமணி) நூல் பற்றி சிறப்பானதொரு அறிமுகத்தை எழுதியமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இதுகுறித்து எனது முகநூல் பதிவை இத்துடன் அனுப்பியுள்ளேன்.

"திராவிடர் கழகத் தலைவர் "ஆசிரியர்" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் "விடுதலை" நாளிதழின் ஜுலை11,12& 13 இதழ்களில் " சிறையில் துளிர்த்த சிந்தனை அரும்புகள்" (தோழர் கே.பால தண்டாயுதம் சிறைக் கடிதங்கள்/நாட்குறிப்புகளின் தொகுப்பு நூல்) நூலை ஆழ்ந்து வாசித்து, அருமை யானதொரு அறிமுகப் பதிவைச் செய்துள்ளார்கள்.

முதிர்ந்த வயதிலும் தந்தை பெரியார் ஆற்றிவந்த பகுத்தறிவு இயக்கப் பணியை இடைவிடாமல் முன் னெடுத்து வரும் ஆசிரியர் கிடைக்கும் நேரங்களில் தனது நூல் வாசிப்பிற்கு நேரம் ஒதுக்கி வருவதை அவரது உரைகளைக் கேட்கும் போதெல்லாம் நாம் அறிகிறோம்.

அவரது வாசிப்பிற்கு இந்த நூல் வசப்பட்டது நல்லதொரு வாய்ப்பாக அமைந்து, இன்றைய தேவையை உணர்த்தும் கட்டுரைகள் வடிவத்தில் வெளியாகியுள்ளது மட்டற்ற  மகிழ்ச்சியளிக்கிறது.

ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், "விடுதலை" நாளிதழுக்கும் நமது நன்றியினை உரித்தாக்குகிறோம்.

தோழர் பாலனின் லட்சிய தாகத்தை பிரதிபலிக்கும் குறிப்புகளை மேற்கோள்களாகத் தந்துள்ளதுடன், கச்சனம் ஜாதி ஒழிப்பு மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் அழைப்பின் பேரில்  தோழர் பாலனை அங்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை ஏற்றதையும், பிரயாணத்தின் போது பாலன் தெரிவித்த கருத்துக்கள் பற்றியும், மாநாட்டில் அவர் பேசிய செய்தி பற்றியும் ஆசிரியர் பதிவு செய்துள்ளவை மிகவும் கவனிக்க வேண்டிய தகவல்கள்.

வர்க்கப் பார்வையை இந்தியச் சூழலுக்கு இணைக்க வேண்டுமானால் ஜாதி ஒழிப்புப் போராட் டத்திற்கு உரிய முன்னுரிமை தரப்பட வேண்டிய அவசியத்தை தோழர் பாலன் வலியுறுத்தியுள்ளது நமது சிந்தனையைக் கூர்மைப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.

வர்க்கப் போரில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலை வர்கள்  எவ்வாறு ஜாதியுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட வர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதற்குத் தோழர் பாலன் சான்றாக இருந்துள்ளதையும் ஆசிரியரின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது."

-ப.பா.ரமணி 

நூல் தொகுப்பாசிரியர்                     


எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளிக்காமல் - சர்வாதிகார ஆட்டமா?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பயன் படுத்தக்கூடாத வார்த்தைகள் என்ற பட்டியலிட்ட புத்தகம் வெளியிட்டது பற்றி வாயால் சிரிக்க முடிய வில்லை. காரணம் இந்த பட்டியல் பாஜக அலுவல கத்தில் வெளியிடவேண்டியதை மறந்து நாடாளு மன்றத்திற்கு வந்து விட்டது ஏன் என்று வினவத் தோன்றுகிறது. இந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் பாஜகவுக்கு மட்டும் பொருந்தும். குற்றம் உள்ள மனது துடிக்கும் என்பது போல உள்ளது ஒன்றிய பாஜக வின் செயல்!

நாடாளுமன்றம் என்பது தேசிய, மாநிலத்தின் மக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் உள்ள இடத்தில், பாஜக வுக்கு எதிரான கேள்வியே கேட்கக் கூடாது என்றால் என்ன பொருள்? பாஜக மட்டுமே உள்ள கட்சி அலுவலகம் அல்ல நாடாளுமன்றம். 

அப்படி எதிர்க்கட்சிகள் மட்டும் வார்த்தைகளை பயன்படுத்த தடை என்றால், எதிர்க்கட்சிகளின் கருத் துகளை செவிமடுத்து ஏற்று செயல்படுத்தவேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாதபோது பேசித் தானே தீர வேண்டும். 

பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என பட்டி யலிட்டவர்கள், நாளை எதிர்க்கட்சிகளே அவைக்கு வரக்கூடாது என்று சொல்வார்களோ என எண்ணத் தோன்றுகிறது. 

பாஜக மட்டுமே  அவையில் பேசவேண்டும், தவறுகள் பற்றி எதிர்க்கட்சிகள் பேசாமல் 'ஆமாம் சாமி' சொல்ல வேண்டும் என நினைக்கிறது. 

குற்றங்களை தடுக்கவும், ஒடுக்கவும் தான் காவல் நிலையங்கள் உள்ளன. மாறாக குற்றங்களே எவரும் செய்யக்கூடாது என்று அறிவித்தால் மட்டும் குற் றங்கள் இல்லாமல் போய்விடுமா?

இது போன்று தான் ஒன்றிய அரசின் அறிவிப்பும் உள்ளது. 

எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும் எந்த வார்த்தையை பயன்படுத்துவது, பேசக்கூடாத வார்த்தைகள் எவை என்று. தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தப் போவ தில்லை. பிறகு ஏன் பாஜக வுக்கு இப்படி ஒரு அச்சம்?

இரண்டு பக்கங்கள் இருந்தால் தான் நாணயம் செல்லுபடியாகும். மனிதர்களுக்கும் நாணயம் இருந் தால் தான்  அவர்களுக்கும் பெருமை. அதுபோன்று எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பு இருந்தால் தான் மக்களுக்கான ஆட்சி, இல்லையேல் அது சர்வாதிகார ஆட்சி! 

ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற ஆணவத்தின் வெளிப்பாடாகவே, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்  குறித்த பட்டியல் உள்ளது.  

மு.சு. அன்புமணி, 

மதுரை - 625020


No comments:

Post a Comment