மதுரை வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி மய்யத்தின் மேனாள் பட்ட மாணவர்களின் பொன்விழா சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

மதுரை வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி மய்யத்தின் மேனாள் பட்ட மாணவர்களின் பொன்விழா சந்திப்பு

'விடுதலை' ஏட்டிற்கு 10 ஆண்டு சந்தாக்கள் (ரூ.20,000/-) வழங்கினர் 

பொன்விழா மாணாக்கரான கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மூலம் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான  (Constituent College)  மதுரை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் 1972-76 வரை நான்காண்டு பட்டப்படிப்பு  (B.Sc. Ag.)    பயின்ற மாணவர்கள், அக்கல்லூரியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 9.7.2022 அன்று கல்லூரி வளாகத்தில் மீண்டும் கூடி, கலந்துரையாடிய - கலந்துறவாடிய நிகழ்வு நடைபெற்றது. பொன் விழா நிகழ்ச்சியில் கால ஓட்டத்தில் இழக்க நேரிட்ட, உடன் பயின்ற 10 தோழர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தினர். தங்களுக்குக் கல்வி புகட்டிய பேராசிரியப் பெருமக்களை அழைத்து, நன்றி தெரிவித்து, பாராட்டி மகிழ்ந்தனர். தோழர்கள் தங்களது வாழ்விணையர் மற்றும் பிள்ளைகளுடன் வந்திருந்தனர். அவர்களுக்கும் இன்பமளிக்கும் ஆர்வமூட்டும் நிகழ்வாக இது இருந்தது.


No comments:

Post a Comment