'மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது - கூடாது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

'மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது - கூடாது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை, ஜூலை 10 நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானலும் மக்களை முன் நிறுத்தியே ஆட்சி நடத்துகிறோம், கட்சி நடத்துகிறோம். அதுதான், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து தொழில் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நடத்திவருகிறோம்  என்று தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று (9.7.2022) நடந்த அரசு விழாவில் ரூ.340 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட் டப்பணிகளுக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட் டப்பணிகளை தொடங்கி வைத்து, 1.74 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங் கினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியது," பண்பாட்டு அடை யாளங்கள் பரவிக் கிடக்கும் மாவட்டம் திருவண்ணாமலை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்  கடந்த 1989-ஆம் ஆண்டு திருவண்ணாமலையை தனி மாவட்டமாக அறிவித்தார். திமுக ஆட்சி அமைந்தாலே, திருவண்ணாமலை மாவட் டம் புத்தெழுச்சிப் பெறும்.

 தமிழ்நாடு  அரசு செய்துவரும் பலவிதமான நலத்திட்டங்கள் எல்லாம், மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகள் அல்ல. அவர்கள் உண்மையான ஆன்மிக வியாதிகள், ஆன்மிகப் போலிகள். ஆன் மிகத்தை தனது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய எண்ணத்தைக் கொண்டவர்கள். நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானா லும், ஆட்சியானலும் மக்களை முன் நிறுத்தியே ஆட்சி நடத்துகிறோம், கட்சி நடத்துகிறோம். அதுதான் அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து தொழில் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நடத்திவருகிறோம்.

திராவிட இயக்கத்தின் 

தாய் கட்சியான நீதிக்கட்சி

அந்த அடிப்படையில்தான் இந்துசமய அறநிலையத்துறையின் மூலம் சிறப்பான பணிகளை தமிழ்நாடு  அரசு செய்து கொண்டிருக்கிறது. கோயிலுக்கு திருப் பணி செய்வது திராவிட மாடலா என்று சிலர் கேட்கின்றனர். அனைத்து துறை களையும் சமமாக வளர்ப்பதுதான் திராவிட மாடல் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன். திராவிட இயக்கத்தின் தாய்கட்சியான நீதிக் கட்சி ஆட்சியில் தான், இந்துசமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டது. கோயில் களை முறைப்படுத்துவதற்காக. ஒரு சட் டம் வேண்டுமென்று ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள், கோரிக்கை வைத்த போது அதனை ஏற்று சட்டம் இயற்றியது தான் நீதிக்கட்சியினுடைய ஆட்சி.

எது திராவிட மாடலென்று பிற் போக்குத்தனங்களோடு, பொய்களுக்கும் முலாம் பூசி பெருமையோடு பேசக் கூடியவர்கள் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மிகத்தின் பெய ரில் அவர்கள் அரசியல் நடத்த முயற்சிக் கிறார்கள். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மிகத்தின் பெயரில் மனிதர்களை ஜாதியால், மதத்தால், பிளவு படுத்துகிறார்களே அவர்களுக்கு நாங்கள் எதிரிகள். மனிதர்களை பிளவுப்படுத்தக் கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர் களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது.

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்பதுதான் எங்கள் அறநெறி. அத்தகைய அறநெறியைக் கொண்ட ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடக்கருத்துகளை முதுகில் தூக்கிக்கொண்டிருக்கக்கூடிய சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமென்றால் உளறல் களும் பொய்களும்தான் தேவை"  

பெருமைமிகு அடையாளங்கள்

இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறக்கூடிய பல்வேறு மாபெரும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட் டுள்ளன. குறிப்பாக, மதுரையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் நூலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சென்னையில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமையப் போகிறது. சென்னையில் வங்கக் கடலோரம்  தலைவர் கலைஞருக்கு நினைவகம் நிறு வப்பட்டு வருகிறது. கடந்தகால ஆட்சி யாளர்களால் முடக்கி வைக்கப்பட்ட மாபெரும் திட்டமான மதுரவாயல்- _ -துறைமுகம் உயர்மட்டச் சாலை அமையப் போகின்றது. கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

இப்படி எண்ணற்ற பெரும் பணிகள். இவை அனைத்தையும் செயல்படுத்துவதில் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கக் கூடியவர் தான் அமைச்சர் எ.வ.வேலு. கலைஞர் நினைவகம், மதுரை நூலகம், கிண்டி மருத்துவமனை எல்லாம் வருங் காலத்தில் தமிழ்நாட்டின் அடையாளங் களாக மாறப் போகின்றது. சிறந்த செயல்வீரருக்கான அடையாளமாக இருக் கின்ற எ.வ.வேலு, அவற்றை உருவாக் கிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அவருக்கு மட்டுமல்ல, எனக்கு மட்டுமல்ல, நம் அரசுக்கு மட்டுமல்ல, நம் மாநிலத்துக்கே பெருமைமிகு அடையாளங்களாக இவை அமையப் போகிறது. இவ்வாறு முதல மைச்சர் கூறினார்.

இவ்விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  தலைமை தாங் கினார். சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப் பினர் சி.என். அண்ணாதுரை,  சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம் பேத்குமார், பெ.சு.தி. சரவணன், ஒ.ஜோதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார். விழாவில், அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment