'நீட்' தேர்வு மசோதா இன்னும் பரிசீலனையில் இருக்கிறதாம் சொல்கிறார் ஆளுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

'நீட்' தேர்வு மசோதா இன்னும் பரிசீலனையில் இருக்கிறதாம் சொல்கிறார் ஆளுநர்

சென்னை, ஜூலை 13 -  தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டுமுறை நிறைவேற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி   ஆளுநர் செயலகத்திற்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர், பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு மனு அனுப்பினார். 

மிகவும் கால தாமதமாக (98 நாட்கள்  கழித்து) ஜூலை 7 ஆம் தேதியிட்ட கடிதம் ஜூலை 11, 2022 அன்று அவருக்கு கிடைத்தது. பதில் கடிதத்தில் தெரி விக்கப்பட்டச் செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது. அந்த மசோதா  “சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரி சீலனையில்  உள்ளதாகவும்,  அதனால்  கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது” என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது. 

பதில் திருப்தியாக இல்லை, 

நேரடி பதில் வேண்டும்

“சம்மந்தப்பட்ட அதிகாரி”யின் பரிசீலனை என் றால் எவ்வாறு புரிந்து  கொள்வது. ஆளுநர் செய லகத்திலா? அல்லது குடியரசுத் தலைவர் செய லகத்திலா? ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட முன் வடிவு அனுப்பப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அவர் அறிவித்து இரண்டு மாதங்கள் கழித்து,  “சம்மந்தப்பட்ட அதி காரியின் பரிசீலனை”யில் உள்ளது என்று தெளிவற்ற, நேரடிப் பதில் தருவதிலிருந்து தப்பிக்கும் சொல் லாடலை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி உள்ள தால், ஆளுநர் மாளிகையில் இருந்து சட்ட முன் வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு சென் றுள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.   பதில் திருப்தியாக இல்லை, நேரடி பதில் வேண்டும்  என்று கோரி ஆளுநர் செயலகத்தின் தகவல் தரும் அடுத்த நிலை அதிகாரிக்கு மேல் முறையீடு மனுவை அனுப்பியுள்ளோம். 

தமிழ்நாடு அரசு, சட்ட முன் வடிவின் தற் போதைய நிலை என்ன  என்பதை அறிந்து, தெளி வான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி  முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பி யுள்ளோம்.  தமிழ்நாடு மக்களுக்கு தெளிவான விடைத் தேவை என பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment